• ஜனவரி 2020
  தி செ பு விய வெ ஞா
  « டிசம்பர்    
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,199,550 hits
 • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த, திரு சோமசுந்தரம் சுப்பிரமணியம் (சுப்பிரமணிய மாஸ்ரர்-மண்டைதீவு கார்த்திகேசு வித்தியாலயம்,அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்,ஆகிய பாடசாலைகளில் கல்விப்பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்கள் 28.12.2019 சனிக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்-என்ற தகவலை அறியத்தருகின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

நத்தார் வாழ்த்துக்கள்

அகவை 20 வதற்காய்

அகவை 20 வதற்காய்

பூசைக்கு சிறப்பு சேற்கும்

புனிதத்தை தேர்ந்து எடுத்து

செயல் வடிக்க பெயராய் சூட்டி

செவ்வியை தேசம் எங்கும்

பத்து இரண்டு ஆண்டாய்

பறை முழங்கும் வலம்புரியே

தேவைகள் நிறைந்த வேளை

தேசத்தில் மலர்ந்த சேவை

பலவித தலைப்பு கொண்டு

பாகங்கள் பலதை இணைத்து

சாட்டையும்,சவுக்கும் இன்றி

சத்தமும்,யுத்தமும் இல்லா

புரிதலையும்,புகட்டலையும்

புலம்வாழ் மக்களுக்கு புகட்டி

சாதுரியம் கொண்டு சவாலை

சாமத்தியமாய் வென்று

சாதனை கொண்ட விழவில்

நிறைந்த சேவையும்

நீண்ட ஆயுழும் நிலைத்திட

வாழ்த்துரிய வாழ்த்துக்கள்

அருள்ஈசனும்,மண்டைதீவு இணையமும்

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

மண்டைதீவினை பிறப்பிடமாகவும் ஜேர்மனியினை வதிவிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி பாலச்சந்திரன் (கண்ணன்) 15/12/2019 ஞாயிற்றுக்கிழமை காலமானார் . Continue reading

மரண அறிவித்தல்

மண்டைதீவு 4ம்வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.தொ. மடுத்தீன் பாக்கியநாதர் (இளைப்பாறிய அதிபர், மண்டைதீவு)அவர்கள் இன்று (15.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மரண அறிவித்தல்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் பொன்மலர் அவர்கள் 13-12-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். Continue reading

மரண அறிவித்தல்.

மண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்சமயம் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு. தம்பையா சிவபரம்சோதி (J.P) அவர்கள் இன்று 10.12.2019 செவ்வாய்கிழமை சிவபதமடைந்து விட்டார். இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புகளிற்கு:-

மகன் 0762848457

உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு மணியகாரன்வீதியை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா சிவபரஞ்சோதி அவர்கள் 10-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற இராசம்மாவிமலா- ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், 

பலராம்(ஆதவன் – லண்டன்), நிசாந்தி(லண்டன்), உமைசொரூபி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திலகராஜா, அற்சுதன்  ஆகியோரின் அன்பு மாமனாரும்,  

அகிலத்திருநாயகி, அரங்கநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் குணரட்ணசிங்கம், சோதிவேற்பிள்ளை, காலஞ்சென்ற நல்லநாயகம் மற்றும் கமலாதேவி, குணநாயகம், நிர்மலாதேவி, இராமநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

சாரதாம்பிகை, புஸ்பராணி, ரவீந்திரநாத், செல்வராணி, சண்முகராஜா, பரமநாயகி  ஆகியோரின் அன்பு சகலனும், 

யதிந்திரா அவர்களின் அன்பு சிறிய தந்தையும்,

ஆதிவ் அவர்களின் அன்பு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2019 வெள்ளிக்கிழமை அன்று மு. 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு  தலைக்கீரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: சி. பலராம்(ஆதவன்மகன்)

தொடர்புகளுக்கு

 

சி. பலராம்(ஆதவன்) – மகன்