மண்டைதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம்
தலைவர்:-அ.ஸ்ரீபத்மராசா, செயலாளர்:- சோ.அருட்தீபன், பொருளாளர்:- பொ.சபா நாயகம், உப தலைவர்:- ஜேசுரெட்ணம், உப செயலாளர்:-மாணிக்கவாசகர் ஆகியோ ருடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக, மாலினிதேவி, ம.சுதாகர், அ. அருள் மொழி, ஜேசு நேசன், அருட்குமரன்.
இவர்களுடன் போசகராக கனகரட்ணம் (அதிபர், மண்டைதீவு மகா வித்தியாலயம்), கணக்காய்வாளராக கை.விக்னேஸ்வரன் (இலங்கை வங்கி உத்தி யோ கத்தர்) மற்றும் இராமச்சந்திரன் (ஊடகவியலாளர் வீரகேசரி பத்திரிகை நிறுவனம்).
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் நிர்வாக சபைஉறுப்பினர்கள் விபரம்
தலைவர்:- சிவ.சிறிகுமாரன், செயலாளர், தா.சந்திரகாந்தன், பொருளாளர்:- ஞா.பகீரதன், உபதலைவர்:- லி.இராகவன், உப செயலாளர்:- வி.இளங்கோ, உப பொருளாளர்:- தி.கோனேஸ்வரன்.
ஆகியோருடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக, ச.இரவீந்திரன், ஆ.ஜெயந் தன், திருமதி பாஸ்கரன், ஞா.பரணிதரன், திருமதி தவக்குமார் இவர்களுடன் போசகர்:- அ.விக்கினேஸ்வரன், கணக்காய்வாளர்:- செ.கெங்ககுமார்.
எட்டு வட்டாரத்துக்குமான நிரந்தர ஆலோசனை உறுப்பினர்கள் முறையே, 1.யோ.பாஸ்கரன், 2.சபா.ஜெயகுமார், 3.க.கண்ணதாசன் (பதில் 4 ஆம் வட்டா ரம்), 5.கு.நரேந்திரன் (பதில் 6 ஆம் வட்டாரம்), 7.சி.செல்வராஜா, 8.பொன். குமார்.
சுவிஸ் ஒன்றியத்தின் நேரடி அன்பளிப்பு
எமது ஊருக்கு ஒளியாய் நின்று ஒன்றுபட்டு எல்லோரும் உழைப்போம்.
சுவிஸ் ஒன்றியத்தின் வேண்டுகோள்
நாட்டில் நடந்தேறிய உக்கிரயுத்தத்தில் எரிகாயத்தால் உருமாறிய பிஞ்சுக் குழந்தையின் தோல் மாற்று சிகிச்சைக்காய் உதவும் கரம் நீட்ட மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் உடன் இணைந்து தோள்கொடுக்க அனைவரையும் அழைகின்றோம்.
மண்டைதீவு 6 ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட பாலசிங்கம் அவர்களின் பேரன் தமிழன்பன் தன் தாயையும் தந்தையையும் (இவரின் தாய் தந்தையர் பெயர் தயாபரன்-பாலசுகந்தினி) இழந்து தனது அவையங்களையும் எரிகாயத்தின் மூலம் உருமாற்றம் பெற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பச்சிளம் பாலகனுக்கு,
தோல் மாற்று சிகிச்சைக்காய் கருணையுள்ளம் கொண்ட மண்டைதீவின் பூர்வீகங்களும் உலகவாழ் தமிழ் உள்ளங்களும் உதவும் கரம் நிறைத்து உன்னத பணி செய்ய உள்ளத்தால் ஒன்று பட்டு உரிமையுடன் உதவ வாருங்கள் .
பாலகனின் சிகிச்சைக்கான செலவு ஆறு லட்சம் ரூபாக்கள் வரை தேவை என வைத்தியர்கள் கருத்துக்கொண்டுள்ள வேளை யில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் ஒரு லட்சம் ரூபாக்களை வழங்குவதோடு பாலகனின் சிகிச்சைக் கான முயற்சிகளையும் முன் நின்று செயல்படுத்தமுன் வந்துள்ளது.
சுவிஸ் ஒன்றியத்தின் கொடுப்பனவு நிகழ்வுகள்
மண்டைதீவுப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதவித் தொகைக் கொடுப்பனவு 09.04.2010 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணியளவில் மண்டைதீவு மகா வித்தியா லய மண்டபத்தில் மண்டைதீவுமக்கள் ஒன்றியத் தலைவர் அ.ஸ்ரீபத்மராசா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மண்டைதீவு கிராம அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்கள், ஆலயங்களின் தர்மாகத்தாக்கள், பரிபாலசன சபை அங்கத்தவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மண்டைதீவு வாழ் மக்கள் எனப் பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந் நிகழ்வு மாலை 6 மணியளவில் இனிதே நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான புகைப்படங்ளைக் கீழே காணலாம்.
சுவிஸ் ஒன்றியத்தின் நன்றிக்கடன்
மண்டைதீவு மண்ணில் நாம் துள்ளித்திரிந்த பருவத்திலும்,பாடசாலை சென்ற பொழுதினிலும் எம்மீது அன்பை அள்ளி வீசி எமக்கு பண்பையும் பண்பாட்டின் மகிமையையும் கலை கலாச்சாரம் என்றும் போதனைகள் பல எடுத்துரைத்து மண்ணின்வாசம் கமள எங்களை வளர்த்து எடுத்த எங்கள் உயிரின் உறவுகளே. எம்மை பெற்று எடுக்காத போதினிலும் அன்னையராகவும் வளர்த்து எடுக்காத போதினிலும் தந்தையர்களாக நேசிக்கும் பண்பினையும்,பாசத்தினையும் எமக்கு கற்று தந்த எம்முன்னோடிகளான உங்களுக்கு எங்களின் சிறிய நன்றிக்கடன் செலுத்த முன்வந்துள்ளோம் . அதிலும் ஆழம் பல கண்டு பரிந்துரைக்க வேண்டிய நிலையிலும் நாங்கள் உள்ளோம் அதனால் தான் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 60 வயதிற்குமுதல் இடம் கொடுத்துள்ளோம்
மண்டைதீவு ஜே /8 பிரிவில் 60 வயதிற்கு மேற்பட்டோர்.
வட்டாரம் 8 ஜ சேர்ந்தவர்கள் :
சம்பந்தர் -செல்லாச்சி
செல்லத்தம்பி -தியாகராசா
இரத்தினசிங்கம் -சந்திராதேவி
செல்லையா -இராசம்மா
கார்த்திகேசு -நெசரேத்தினம்
அருளம்பலம் -விக்கினேஸ்வரி
துரைசிங்கம் – சிவசிவாப்பிள்ளை
செல்வரெத்தினம் -ஜெயபாலசிங்கம்
வியாகரெத்தினம் -புவிநாயகி
ஆறுமுகம் -செல்லையா
குமாரசாமி -தனலக்சுமி
கார்த்திகேசு -குணரெத்தினம்
மகாலிங்கம் -சாரதாதேவி
செல்வரட்ணம் -தருமகுலசிங்கம்
இராமலிங்கம் -குமாரசாமி
குமாரசாமி -புஷ்பராகம்
சுப்பிரமணியம் -திலகவதி
செல்லத்தம்பி -அருமைநாயகம்
கணேசநாதபிள்ளை -நேசமலர்
வியாகரெத்தினம் -செல்வநாயகி
லிங்கப்பிள்ளை -அன்னலெட்சுமி
ஆகியோரும்
வட்டாரம் 7 ஜ சேர்ந்தவர்கள் :
வீரமுத்து -கனகரெத்தினம்
கந்தையா -கனகராசா
ஆகியோரும்
வட்டாரம் 6 ஜ சேர்ந்தவர்கள் :
கைலாசபிள்ளை -சிவபாக்கியம்
குழந்தைவேலு -கணபதிப்பிள்ளை
விசுவலிங்கம் -பஞ்சலிங்கம்
சோமசுந்தரம் -சுந்தரம்பிள்ளை
சோமசுந்தரம் -சரவணபவன்
பாலசிங்கம் -மகானந்தம்
கார்த்திகேசு -சபாரெத்தினம்
கணபதிப்பிள்ளை -ஞானேஸ்வரி
ஆசைப்பிள்ளை -பூபதி
பரமானந்தம் -லோகேஸ்வரன்
பரமானந்தம் -சின்னத்தங்கம்
பத்மநாதன் -உருத்திராதேவி
ஜெகநாதன் -இராசமலர்
ஆகியோரும்
மண்டைதீவு ஜே/9 பிரிவில்
வட்டாரம் 5 ஜ சேர்ந்தவர்கள் :
நடராசா -இரஞ்சிதமலர்
செவஸ்தின்பிள்ளை -மேரி திரேசா
ஆரோக்கியநாதர் -மேரி எட்விசம்மா
ஆகியோரும்
வட்டாரம் 4 ஜ சேர்ந்தவர்கள் :
அற்புதராசா -நல்லம்மா
வரப்பிரகாசம் -திரவியராசா
சூசைப்பிள்ளை -றீற்றம்மா
செபமாலை -கத்தரினாபிள்ளை
தம்பு -நடேஸ்வரி
மரியாம்பிள்ளை -அன்னம்மா
இராமசாமி -இராசம்மா
ஆகியோரும்.
மண்டைதீவு ஜே / 7 பிரிவில்
வட்டாரம் 3 ஜ சேர்ந்தவர்கள் :
செபமாலை -பொன்மணி
அகஸ்தின் -செல்வநேசம்
பிரான்சிஸ் -செபஸ்தியாம்பிள்ளை
வரப்பிரகாசம் -சூசைதாஸ் -ஜேசுரட்னம்
ஆகியோரும்
வட்டாரம் 2 ஜ சேர்ந்தவர்கள் :
பரமானந்தம் – உமாதேவி
நல்லதம்பி -வசந்தலட்சுமி
மருதப்பு -கந்தசாமி
தியாகராசா -பத்மநாதன்
தாமோதரம்பிள்ளை -செளபாக்கியவதி
சரவணமுத்து -கந்தசாமி
ஆகியோரும்
வட்டாரம் 1 ஜ சேர்ந்தவர்கள் :
கைலாசபிள்ளை -ஞானாம்பிகை
நடராசா -சுந்தரம்
கந்தையா – கிஷ்ணதேவி
சுப்பையா -புஸ்பமணி
சிவதரன் -தயாநிதி.
ஆகியோர்கள் அனைவரும் வட்டார அடிப்படையிலும்
மண்டைதீவு கிராம அலுவலர்கள் அடிப்படையிலும்
மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்
அமைப்பினர் தெரிவு செய்துள்ளனர். இந்த தெரிவுகளில்
ஏதும் தவறுகள் இருப்பின் அவைகள் மறுபரிசீலினை
செய்யப்படும் என்பதையும் தெரிவித்துகொள்கின்றோம்.
உறவுகளுக்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றி
09.04.2010 ஞாயிற்றுக்கிழமை மண்டைதீவு மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்வுக்கு உதவிக் கரம் நீட்டிய உள்ளங்கள் அனைவ ருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸின் செயலாளர் தா.சந்திரகாந்தன் தீவகன் ஊடாக நன்றியைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள எங்களின் உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு தரப்பட்ட வேலைத்திட்டங்களுக்குப் பல வகைகளிலும் பங்களிப்புக்களை வழங்கிய சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்கள் அனைவருக்கும் இவ் ஒன்றியத்தின் செயலாளர் என்ற வகையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்தும் உங்கள் ஆதரவினை வேண்டி நிற்கின்றேன் எனத் தெரிவித்தார்.
அத்துடன் நேற்றைய தினம் நடைபெற்ற உதவித் தொகைக் கொடுப்பனவு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மண்டைதீவில் உள்ள மக்கள் அமைப்புக்கள், ஆலயங்களின் தர்மாகத்தாக்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட மண்டைதீவு வாழ் மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன்,
எல்லாவற்றுக்கும் மேலாக இந் நிகழ்வினைச் சிறப்புற நடத்தி முடித்த மண்டைதீவு மக்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க தீவகனின் சேவைக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்த சுவிஸ் ஒன்றியத்தின் செயலாளர் தா.சந்திரகாந்தன், அதன் சேவை மென்மேலும் தொரட, வளர தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்
சுவிஸ் ஒன்றியத்தின் அன்பளிப்பு
மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி பயி லுகின்ற வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற சுமா ர் 60 மாணவர்களுக்கான சப்பாத்துக்கள் மண்டை தீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸினால் வழங்கப்பட்டுள்ளது.
மண்டைதீவு மகா வித்தியாலயத்தின் அதிபர் கனகரத்தினம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இச் சப்பாத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதிபர், உப அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பயனாளி மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்ட இச் சப்பாத்துக்களினால் இம் மாணவர்கள் பெரிதும் பயனடைந்துள் ளனர்.
மண்டைதீவு மக்கள் ஒன்றியத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதியின் மூலம் இச் சப்பாத்துக்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மண்டைதீவு விவசாய மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க
26. பெப்ரவரி 2010 Edit
மண்டைதீவு விவசாய மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க

விசிறிகளின் (மருந்து அடிக்கும் பாம்பசிறிய தொகையினை இப்போது வழங்கி உள்ளனரஇந்த விசிறிகளை மண்டைதீவு மக்கள் ஒன்றியம் ஊடாக மண்டைதீவு விவசாய மக்களுக்கு வழங்கி உள்ளனர், இந்த நிகழ்வு இரண்டு வாரங்கள் முன்பே அவசிய தேவை கருதி
விவசாய மக்களிடம் வழங்கபட்டது என்பது இங்கு குறிப்பிடதக்கது எதிர்வரும் விவசாய பருவகாலங்களில் விவசாய மக்களை ஊக்கிவிக்கும் எண்ணத்திலும் விவசாய மக்களின் நலன் கருதி நலிந்த கடன் அடிப்படையில் விவசாயத்துக்கு தேவையானபொருட்களையும், மண்டைதீவு விவசாய மக்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கடன் அடிப்படையில்
பண உதவிகளையும் வழங்குவதுக்கு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பினர்
முன் வந்துள்ள்ளனர் என்பதும் நீங்கள் அறிந்ததே. .


மறுமொழியொன்றை இடுங்கள்