சுவிஸில் காலமான யாழ் மண்டைதீவைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் மூன்றாம் ஆண்டுத் திதி 19.10.2021 செவ்வாய்க்கிழமையாகும்.
அன்னாரின் ஆண்டுத்திதியை முன்னிட்டு,சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில், கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கும், வவுனியாவில் அமைந்துள்ள, சிவன் முதியோர் இல்லத்தில் வசிக்கும்,மூத்தோர்களுக்கும்,மதியச் சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Luzern சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் ராகவன்( கண்ணபிரான்) சுகவீனம் காரணமாக இன்று 01.09.2021 காலமானார்.
இத்தகவலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
திரு. கந்தையா பழனிவேற்பிள்ளை (ஓய்வுநிலை அதிபர் யா/ கொக்குவில் ஞானபண்டிதா வித்தியாசாலை, ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் திட்டமிடல் – துணுக்காய் கல்வி வலயம். )
மண்டைதீவு முதலாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சம்பியன் ஒழுங்கை கொக்குவிலை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பழனிவேற்பிள்ளை அவர்கள் 01 | 09 | 2021 இன்று அதிகாலை இயற்கையெய்தினார்.
காலஞ்சென்ற பதுமநிதி, சங்கநிதி ஆகியோரின் மைத்துனரும்
அருணாசலம், காலஞ்சென்ற தபானந்தம் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 01/09/2021 பி.ப 02.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மண்டைதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு சீதுவையை வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் தர்மராஜா அவர்கள 29/08/2021 இன்று அதிகாலை காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம் விபரம் பின்னர் தரப்படும் தகவல் மருமகன் கபிலன் india 🇮🇳 chennai
சிறிய திருத்தம் சிவஞ்ஞானம் சிதம்பரநாதன் அவர்களின் முதலாவது ஆண்டை நினைவு கூர்ந்து மேல்தரப்பட்ட கொடுப்பனவு நிழ்ந்தது இதுபோன்று தந்தையை நினைவு கோரும் போது தான்பிறந்த மண்ணையும்,உறவுகளையும் நினைப்பவர்களால் பலஉள்ளங்கள் மகிழ்கின்றன அண்ணரின் ஆத்மா சாந்தியடைய அவர்களும் நானும்உங்களுமன் இணைந்து பிராத்திப்போம்.
மண்டைதீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி கனகரத்தினம் நாகலட்சுமி இன்று 17.08.2021 காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரமுத்து, செல்லம் ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் பாசமிகு துணைவியாரும், காந்திமதி, காலஞ்சென்ற யோகரட்ணம் (யோகன்), கலைநேசன் (நேசன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சண்முகராஜா மற்றும் பவளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம், நீலாவதி, தர்மலிங்கம், குணமணி ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 18.08.2021 புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, அமரரின் பூதவுடல் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🙏🙏🌺🌺🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏