• ஜூலை 2020
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,218,784 hits
 • சகோதர இணையங்கள்

வணக்கம் மண்டைதீவு மக்கள் அனைவருக்கும்

 

நம் ஊர் நினைவலைகள்

 

 

மண்டைதீவு மகாவித்தியாலய செயலணி அமர்வு

மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழக செயலணியின் நிர்வாகக் குழுக் கூட்டம் 04.07.2020 பி.பகல் 3.30 மணிக்கு யா/ மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சி.ஞானசேகரம் (கிளி மாஸ்டர்) அவர்கள் மண்டைதீவினதும் அதன் கல்வி சார் மேம்பாட்டிலும் புலம் பெயர் மண்டைதீவு உறவுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ப.சுதாநந்தராஜா( சுதா மாஸ்டர்) கல்வி மேம்பாட்டிற்கு பாடசாலை உட்கட்டுமான செயற்பாடுகளை செய்தால் மட்டும் போதாது. மாணவர் கல்வி மேம்பாட்டிற்கு பலதரப்பட்ட செயற்பாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அவை பாடசாலை அதிபரின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கழகத்தின் வங்கி நடவடிக்கைகளுக்காக செயலணிக்கு தலைவராக சி.ஞானசேகரமும் செயலாளராக பே.விஜியந்தனும் பொருளாளராக ப.திருவருட்செல்வனும் செயற்பட அங்கீகாரம் வழங்கப்பட்டது.

செயலணியை மேலும் வலுவூட்ட துறைசார்ந்த ஆர்வலர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று கீழ் வருமாறு தேர்வு செய்யப்பட்டது.

 1. திரு. நல்லையா விஜயசுந்தரம்
 2. திரு.வேலாயுதபிள்ளை ஞானாேதரன்
 3. திரு.செல்லத்துரை சேதுராஜா
  4.திரு. சரவணபவன் மோகனபவன்
 4. திரு.முத்துலிங்கம் இராஜகோபால்

தவிர, உள்ளக கணக்காய்வாளராக திரு. மாணிக்கலிங்கம் திருலிங்கம் (திரு மாஸ்டர்) அவர்களை செயலணி ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

குறைந்தபட்ச செயற்திட்டத்தை பாடசாலை அதிபருடன் நேரடியாக கலந்துரையாடி உருவாக்குவதே சிறந்தது என செயலணித் தலைவர் திரு.சி. ஞானசேகரம் அவர்கள் குறிப்பிட்டதுடன் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் ஆராயப்பட்டன.
அதன் படி

 1. பாடசாலைச் சுற்று மதில் மற்றும் வேலி அமைத்தல்.
 2. ஆரம்ப பிரிவு வகுப்பறைகளுக்கு ஜன்னல்கள்,மேல் நெற்றுக்கள் அமைத்தல்.
 3. அதிபர் அலுவலகம் சீரமைப்பு, வகுப்பறைக் கதவுகள், வகுப்புகளுக்கு இடையிலான தடுப்புககள் அமைத்தல் ,பழுதடைந்த ஓடுகள் மாற்றுதல், புறாத்தடுப்பு நெற் அமைத்தல் போன்ற சிறு திருத்தங்கள் .

4.இம்முறை க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களுக்கும் ஆண்டு 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கும் பிரத்தியேக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல்.

 1. வரும் 2021 பாடசாலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு குறித்த தொகை ஆரம்ப நிதி வைப்புடன் சிறுவர் சேமிப்பு கணக்கை ஆரம்பித்துக் கொடுப்பதுடன் கால்கோள் விழாவை பாடசாலை உபகரணப் பொதி வழங்கலுடன் இணைந்ததாக நடாத்துதல்.
 2. மாணவர்கள் சிற‌ந்த பெறுபேறு பெற வழிப்படுத்தும் ஆசிரியர்களின் கௌரவிப்பு விழாவிற்கு பங்களிப்பு வழங்கல்.

7.2020 இல் G.C.E O/L சித்தி பெறும் மாணவர்களை கிராம மக்களுடன் இணைந்து கௌரவித்தல்.

 1. நீண்டகால நோக்குடன் G.C.E (O/L), 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளில் சித்தி அடையும் மாணவர்கள், கல்வி மற்றும் இணைப்பாட செயற்பாடுகளில் திறமை காட்டும் மாணவர்களுக்கு பழைய மாணவர்கள் மூலம் நீத்தோர் நினைவுப் புலமைப் பரிசில் வழங்கல் செயற்திட்டத்தை நிலையான வைப்புக்களை உருவாக்கி நீண்டு நிலைக்கச் செய்தல்.

தவிரவும், கல்வி வளர்ச்சிக்கான செயற்திட்டங்களை காலத்திற்கு காலம் மீளாய்வு செய்து புதிய செயற்திட்டங்கள் வழிமுறைகளை இனங்கண்டு செயற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

பூம்புகார் கண்ணகைக்கு

பூம்பகார் கண்ணகைக்கு வருடாந்த பொங்கல் 6/07/20 திங்கள் அன்று நடை பெற்றது

https://m.facebook.com/parvathyparameshwarar/posts/pcb.1459420057585059/?photo_id=1459395854254146&mds=%2Fphotos%2Fviewer%2F%3Fphotoset_token%3Dpcb.1459420057585059%26photo%3D1459395854254146%26profileid%3D0%26source%3D48%26__tn__%3DEH-R%26cached_data%3Dfalse%26ftid%3D&mdp=1&mdf=1#

முத்துமாரிக்கு சங்கால் அபிஷேகம்

மண்டைதீவு முத்துமாரி அம்மனுக்கு 6,07,20 நடைபெற்ற சங்காபிஷேக நிழல் படங்கள்

கண்ணகை அம்மனின் ஊர்வலம்

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்திமயமாக நடைபெறுகிறது வீதி உலா வைபவம்

மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மனின் ஊர்வலத்திருநாளில் வீதி உலாவுக்காக ஆயத்தமாகும் வசந்தமண்டப பூசை 2020/07/03 நேரம் மாலை 5.00 மணி

சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை மிக கவனமாக கடைப்பிடித்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்திமயமாக நடைபெறுகிறது வீதி உலா வைபவம்

அடியார்களின் நலன்களை பேணி அன்னை கண்ணகையின் ஊர்வல ஊர் உலா மட்டுப்படுத்ப்பட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது .திங்கள் கிளமை அன்னைக்கு பொங்கள் நடைபெறும்

ஶ்ரீமுத்துமாரி அம்பாழுக்கு 1008 சங்குகளால் அபிஷேகம்

மண்டைதீவு ஶ்ரீமுத்மாரி அம்மனுக்கு

வேப்பந்திடல் ஶ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலய
2020ம் வருட சங்காபிஷேக,மற்றும் மகோற்சவ கால வைபவங்களை முன்னிட்டு சரியைத்தொண்டாற்ற (சிரமதானம்) வருமாறு அன்னையின் புதல்வர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

ஆலயத்தோடு ஆலய வளாகத்தில் அரும் பணியாற்றல் காலம்: 2020/07/04 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும்.அனைவரும் வருக.

காலம் நம்மை வெவ்வேறு திசைகளில் நிறுத்தியிருந்தாலும்,ஆலய சந்நிதானங்களில் ஒன்றிணைதல் ஒன்றே நம் மண்ணுக்கும்,
தேவி அன்னைக்கும், அக மகிழ்வுக்கும் நாம் கொடுக்கின்ற ஆத்ம பரிகாரம் ஆகும்.

அவ் வகையில் ஆலயங்களின் அழைப்பென்பது தெய்வங்கள் நம்மை தேடிக்கொண்ட சேதியேயாகும். அதனை உணர்ந்து நாடி ஒருமுறை இத் திருநாளிலோ அல்லது விழாநாளிலோ நாம் வருதல் நம் பூமிக்கும் அன்னைக்கும் நாம் கொடுக்கும் நன்றி உபகாரம் எனக்கொள்வோம்.

-என்றும் அனைவரினதும் கரம்பற்றி வரவேற்க காத்திருக்கும் வேப்பந்திடல் முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினரின் அன்புக்கோரிக்கையை அவ்வவ்வேளைகளில் நம் உறவுகள் எல்லோரிடமும் எடுத்துச்செல்லுங்கள் எம் அன்பு உறவுகளே!
-நன்றி-

பாழடைந்து காணும் பாடசாலையின் தேவைக்காய் புதிய செயலணி

அனைவருக்கும் வணக்கம்.

பாழடைந்து காணும் பாடசாலையின் தேவைக்காய் புதிய செயலணி உதயமாகியுள்ளது நலன் விரும்புவோர் கரம்பற்ரினால் நாம் பயின்ர அறிவாலயம் நம்மவர்காய் உதவும்

மண்டைதீவுக் கிராமத்தின் கல்வியின் ஊற்றாக விளங்கும் மண்டைதீவு மகாவித்தியாலயத்தின் கல்வி மேம்பாட்டின் பொருட்டு குறுங்கால மற்றும் நீண்டகாலச் செயற்த்திட்டங்களை பாடசாலைச் சமூகம்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்லும் ஓர் ஆரம்ப முயற்சியாக மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழகத்திற்கான ஓன்பது பேர் கொண்ட செயல்அணி ஒன்று 28.06.2020 ஞாயிற்றுக்கிழமை உருவாக்கப்பட்டது .
இதன் அனைத்துலக ஒருஙகிணைப்பாளர்களாக
வைரவநாதன் தயாகரன் இராசரத்தினம் பரதன்
யோகநாதன் பாஸ்கரன் ஆகியோர்
செயற்படுவதுடன் கனடா,இங்கிலாந்து,பிரான்ஸ்,
ஜேர்மணி நோர்வே, டென்மார்க் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் இணைப்பாளர்களைக்கொண்டு செயற்படவுள்ளது.

செயல் அணி உறுப்பினர்கள்

1.சிவஞானசுந்தரம் ஞானசேகரன்
2.பரமானந்தம் சுதானந்தராஜா
3.இராசரத்தினம் பரணீகரன்
4.கனகரத்தினம் வசீகரன்
5.பத்மநாதன் திருவருட்செல்வன்
6.பேரின்பநாதன் விஜியந்தன்
7.தர்மராசா மாலினிதேவி
8.இரவிந்திரன் ஜெகதீஸ்வரி
9.குழந்தைவேல் பவன்ராஜ்

எனையநாடுகளின் இணைப்பாளர்கள் மற்றும் மேலதிகவிபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .

நன்றி

நலிவுற்ற மக்களுக்கான 32ஆவது கொடுப்பனவின் விபரம்

மண்டைதீவு குளம் வெட்டும் பணி

முத்துமாரி அம்மன் ஆலய பின்வீதியில் தூர்ந்து போய் உள்ள குளம் ஆழமாக்கலும் விரிவு படுத்துதலும் நடைபெறும் காட்ச்சிகள்

நிர்வாக ஒன்று கூடல்

மண்டைதீவு வேப்பம்திடல் முத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபையின் 2020 – 2021 க்கான வருடாந்த பொதுக் கூட்டம் 20.06.2020 அன்று திவாகர் நற்பணி மண்டபத்தில் நடைபெற்றது.
புதியநிர்வாக உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

போசகர்
கனகசபை சிவராஜா

தலைவர்
பரமானந்தம் சுதானந்தராஜா

செயலாளர் பேரின்பநாதன் விஜியந்தன்

பொருளாளர்
ஜெயசோதி பிரேமகாந்தன்

உபதலைவர்
அருளானந்தம் ஸ்ரீபத்மராஜா

உபசெயளாளர்
தர்மராஜா மாலினிதேவி

நிர்வாகஉறுப்பினர்கள்

ஆ.அனந்தரூபி
ம.சசிகாந்
தி. யோகநாதன்
வீ.மாணிக்கவாசகர்
தி. தர்சிகா
ஜெ.கங்காதீபன்

கணக்காய்வாளர்
க.கணேஸ்
பே.சுஜியந்தன்