
😢😢 மரண அறிவித்தல். 😢😢
திருமதி கனகரத்தினம் நாகலட்சுமி
மண்டைதீவு, 7.
மண்டைதீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி கனகரத்தினம் நாகலட்சுமி இன்று 17.08.2021 காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரமுத்து, செல்லம் ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் பாசமிகு துணைவியாரும்,
காந்திமதி, காலஞ்சென்ற யோகரட்ணம் (யோகன்), கலைநேசன் (நேசன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சண்முகராஜா மற்றும் பவளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம், நீலாவதி, தர்மலிங்கம், குணமணி ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 18.08.2021 புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, அமரரின் பூதவுடல் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🙏🙏🌺🌺🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏
Filed under: Allgemeines | Leave a comment »