மண்டைதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு சீதுவையை வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் தர்மராஜா அவர்கள 29/08/2021 இன்று அதிகாலை காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம் விபரம் பின்னர் தரப்படும் தகவல் மருமகன் கபிலன் india 🇮🇳 chennai
சிறிய திருத்தம் சிவஞ்ஞானம் சிதம்பரநாதன் அவர்களின் முதலாவது ஆண்டை நினைவு கூர்ந்து மேல்தரப்பட்ட கொடுப்பனவு நிழ்ந்தது இதுபோன்று தந்தையை நினைவு கோரும் போது தான்பிறந்த மண்ணையும்,உறவுகளையும் நினைப்பவர்களால் பலஉள்ளங்கள் மகிழ்கின்றன அண்ணரின் ஆத்மா சாந்தியடைய அவர்களும் நானும்உங்களுமன் இணைந்து பிராத்திப்போம்.
மண்டைதீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி கனகரத்தினம் நாகலட்சுமி இன்று 17.08.2021 காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரமுத்து, செல்லம் ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் பாசமிகு துணைவியாரும், காந்திமதி, காலஞ்சென்ற யோகரட்ணம் (யோகன்), கலைநேசன் (நேசன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சண்முகராஜா மற்றும் பவளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம், நீலாவதி, தர்மலிங்கம், குணமணி ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 18.08.2021 புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, அமரரின் பூதவுடல் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🙏🙏🌺🌺🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏
புத்தூர் நவக்கிரி நிலாவரைடியை பிறப்பிடமாகவும், கரியாலை நாகபடுவனை வாழ்விடமாக கொண்ட, செட்டி என்று அழைக்கப்படும் சிவபரஞ்சோதி இன்று காலை13,08 2021 இயற்கை எய்தினார் என்ற துயரசெய்தியை கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைகின்றோம், அன்னார் காலம் சென்ற அழகரத்தினம் நவக்கிரி, கிளி என்று அழைக்கப்படும் சுந்தரலெட்சுமி, மண்டைதீவு ஆகியோரின் அன்பு மகனும், பூட்டர் நடராசா செல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், யாழினியின் அன்புக் கணவரும் சானுஜன் சாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார், கனடாவில் இருந்து உதயன் மைத்துனன்
மண்டைதீவு 1 ம் வட்டாரத்தை சேர்ந்த நமசிவாயம் நடனசபாபதி (கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தா ) அவர்கள் இன்று 09.08.21 காலமானார் என்பதனை மிகவும் மனவருத்ததுடன் அறியத்தருகின்றோம் விபரம் பின்னர் அறியத்தரப்படும் .
மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை சேர்ந்த ஜெகநாதன் (குட்டி மாமா) ஸ்ரீமதி அவர்கள் இன்று 08.08.21 காலமானார் என்பதனை மிகவும் மனவருத்ததுடன் அறியத்தருகின்றோம் அன்னார் காலம் சென்ற அரசகுலசிங்கம் அவர்களின் சகோதரி ஆவார் விபரம் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல் பெறாமகன் கண்ணன் மாசிலாமணி framceம
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை 09.08.21 (திங்கள்) கொக்குவிலில் நடைபெற்று 11.30மணியளவில் கோம்பயன் மணல் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்
கடந்த க பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபெற்றினை பெற்ற எமது மண்ணின் மைந்தர்களையும் ,தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்று எமது மண்டைதீவு மகாவித்தியாலத்திற்கு பெருமை சேர்த்த மாணவனுக்கும் அவர்களின் திறமையை பாராட்டி எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வின் நிழற் படங்களும் மற்றும் கற்றலுக்கான ஊக்குவிப்பாக துவிச்சக்கர வண்டி வழங்கிய நிகழ்வின் நிழற்படங்களும்