மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய கொடியேற்ற வைபவம்.


மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தான மகோற்சப விழா-2021
அம்பிகையின் திருவருட் துணையுடன் 2021 ஆம் வருடத்திற்கான மகோற்சபம் ஆனித் திங்கள் 30 ஆம் நாள் (2021.07.14) அன்று ஆரம்பமாகின்றது. உலக பெருந்தொற்று காரணமாக நடப்பு வருட மகோற்சவமானது உரிய சுகாதார சட்ட விதிமுறைகள், வழிகாட்டல்களுக்கு அமைவாக சிறப்பாக நடைபெற தாயவள் சித்தம் கை கூடி உள்ளது.
மகோற்சவம் யூலை 14 தொடக்கம் யூலை 25 வைரவர் உற்சவம் வரையான 12 தினங்களும் இடம்பெறும்.
மேற்படி வைபவம் நாளை 2021/07/14 புதன்கிழமை 10.30 மணிக்கு இடம் பெறும்.கிரியாகால நிகழ்வுகள் யாவும் காலை 07.30 மணிக்கு ஆரம்பமாகி கொடியேற்றம் குறிக்கப்பட்ட நேரத்தில் நடைபெறும்.
இரவுத் திருவிழா மாலை 06.00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி அம்பாளின் வெளி வீதி உலா இடம்பெறும்
அடியார்கள்,உபயகாரர்கள் உரிய வேளையில் வருகை தந்து அம்பாளின் திருக்காட்சிகளை கண்டுகளிப்பதோடு, வழிபாடாற்றுய்யுமாறு பேரன்புடன் அழைக்கின்றோம்.
கொடியேற்ற முதலாம் திருவிழா உபயகாரர்கள்:
கனகசபை அம்பலவாணர் குடும்பத்தினர்.
கனகசபை சிவராஜா குடும்பத்தினர் .
அடியார்கள்,உபயகாரர்கள்,உலக வாழ் நம் மக்கள் அனைவரும் அனைத்து நலங்களும், ஆரோக்கியமும் பெற அன்னையவள் அடி தொழுது வேண்டுகின்றோம்.
-ஆலய பரிபாலன,மற்றும் விழா ஏற்பாட்டுக் குழுவினர்.
பூசைக்குரிய பால், தயிர், இளநீர் பூக்களுடன் வருகை தந்து அம்பாளை தரிசித்துய்யும் வண்ணம் அன்புடன் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
இங்ஙனம்
ஆலய பரிபாலன சபையினர்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்