• ஜனவரி 2021
    தி செ பு விய வெ ஞா
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,138 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவில் காணிச்சுவீகரிப்

மண்டைதீவில் 18,01,2021அன்று தனியார் காணிகளை றாணுவத்தின் திட்டமிட்ட சுபீகரிப்புக்கக அளவிட வந்தவர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் எல்லோரும் இணைந்து தடுத்து நிறுத்தினர்

மண்டைதீவு சுடுகாடு

மண்டைதீவு தலைக்கீரி இந்துமயானத்தின் வீதியை துப்பரவு செய்யும் பணியினை மண்டைதீவு1ம் வட்டாரத்தைச்சேர்ந்த சோதிநாதன் தனபாலசிங்கம் (அண்ணன்) உடனடியாக முன்வந்து இச்சேவையை செய்தமை பெரு மதிப்பிற்குரியதாகும்..அவருக்குமனமார்ந்த நன்றிகளைதெரிவிப்பதோடு உங்கள்சேவை தொடர உளமார வாழ்த்துகிறோம்…

தலைக்கீரி இந்து மயான வீதியினை தமது சொந்த நிதியில் செப்பனிட்டு உதவிய சோதிநாதன், தனபாலசிங்கம் மற்றும் அவருக்கு துணையாக செயலாற்றி உதவிய அன்னலிங்கம், தெய்வீகலிங்கம் ஆகியோருக்கு எம்மக்கள் சார்பாக நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்வுறுகின்றோம். மயான அபிவிருத்தி தொடர்பாக ஒரு மயான அபிவிருத்தி சபை உருவாக்கப்பட்டிருக்கிறது அதனைத் தொடர்ந்து இவ்வீதியினை துப்பரவு செய்வதற்கு பிரதேசசபை ஊடாக எம்மால் ஒரு சிரமதான ஏற்பாடு செய்யப்பட்டது இது தொடர்பில் பொது ஸ்தாபன பிரதிநிதிகளுக்கு நேராகவும் பொது அறிவித்தல் எழுத்துருவில் பொது இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த போதும் ஒருசிலர் தவிர்ந்த ஏனையவர்கள் கலந்து கொள்ளவில்லை, காரணம் புரியவில்லை பிற்பாடு மயானம் அமைந்துள்ள காணி பிரதேசசபை மூலமாக JCP கொண்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டிய கடப்பாடு பிரதேசசபை உறுப்பினர் என்ற வகையில் எனக்கு இருக்கின்ற காரணத்தால் இதைத் தெரிவிக்கின்றேன் தவறேதும் இருப்பின் பொறுத்துக் கொள்ளவும்.
இம்மயானம் அதற்கான பாதை புனரமைப்பு தொடர்பாக என்னாலும் சக உறுப்பினர் சகோதரி தங்கராணி அவர்களாலும் பின்வரும் தீர்மானங்கள் முன்மொழிப்பட்டுள்ளது,

  1. மயானக் காணியினை அளவீடு செய்து எல்லைப் படுத்தல்.
  2. காணியினை மதில் மூலமோ அன்றி வேலியமைத்தோ பாதுகாத்தல்.
  3. மழைக் காலத்தில் தகனம் செய்வதற்கு வசதியாக கொட்டகை அமைத்தல்.
  4. வீதி புனரமைத்தல்.
  5. ஏனைய மயானங்களில் இடம்பெறுவது போல் பராமரித்தல் அதன் மூலமாக அபிவிருத்திக்கு சிறு தொகை நிதியினை பெற்றுக்கொள்ளல்.
    இவையனைத்தும் சபையினால் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது ஆனால் செயல்படுத்த நிதி மூலமில்லை ஏதோவொரு வகையில் நிதி கிடைக்கும் போது இப்பணிகள் செயல்படுத்தப்படும். எமது மயான அபிவிருத்தியில் விருப்பம் கொண்ட உறவுகள் உதவ முன்வரும் பட்சத்தில் எம்மிடையே காணப்படும் வேறுபாடுகள் யாவற்றையும் களைந்து ஆர்வமும், விசுவாசமும், ஆற்றலும், அர்ப்பணிப்பும் உடைய உறவுகளின் உதவியை நாடி இப்பணியினை மேற்கொள்வது சிறப்பானது எனும் எண்ணக்கருத்தை இவ்விடத்தில் தெரிவித்து இதுமட்டுமல்லாது எம்மண்ணின் தேவைப்பாடு அனைத்தையும் பெறுமதி மிக்க நிதிப்பங்களிப்பை வழங்கி உதவும் எம் இனிய உறவுகள் தங்களது கவனத்தில் எடுத்து எம்மண் வளம்பெற உதவிடுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி

இவ்வண்ணம்
அன்புடன்
அருளானந்தம்.ஸ்ரீபத்மராசா
(JP)
பிரதேசசபை உறுப்பினர் வேலணை

மரண அறிவித்தல்

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகா குலேந்திரா அவர்கள் 08-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான speaker வைத்திலிங்கம் துரைசுவாமி, செல்லத்துரை உடையார்(அல்லைப்பிட்டி) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

வேலாயுதபிள்ளை இராசம்மா(அல்லைப்பிட்டி) தம்பதிகள், காலஞ்சென்ற மகேந்திரா, பலாம்பிகை  தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

குலேந்திரா சியாமளா தம்பதிகளின் அன்பு மகளும்,

மீரா, கஜீத் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிறிஸ்ரியா அவர்களின் அன்பு மைத்துனியும்,

மைதிலி அவர்களின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு

  • 20th Jan 2021 10:00 AM

கிரியை…..

தகனம் …..

தொடர்புகளுக்கு….

 குடும்பத்தினர்