அன்பு மைத்துனி செல்லையா நித்தியலட்சுமி அவர்கள் உருமையுடன் எம்மை அளைத்து உறவு கொண்டாடி மகிழ்பவர் அவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்
மண்கடைதீவு 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த கந்தையா சபாபதிப்பிள்ளை(ராசதுரை)50ஆவது சிராத்ததினம் இவர் கண்ணகை அம்மன் ஆலைய தலைமை பூசகர் பொதுச் சேவையாழர் நிறைந்த பக்திமான் அவரை குடும்பத்தாருடன் இணந்து நாமும் நமது கிராம மக்களும் நினைவு கூருவோம்
மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்த மாணிக்கவாசகர் சத்தியசீலன் 12/12/2020 இன்று வவுனியாவில் இயற்கை எய்தினார். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
மண்டதீவு 8 ம் வட்டாரத்தைபிறப்பிடமாகவும் திருநாவற்குளம் தாண்டிக்குளம் வவுனியைவை தற்போதைய முகவரியாகவும் கொண்ட அமரர் மாணிக்கவாசகர் சத்தியசீலன் (சீலன் ) (வேலணை பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் முகாமையாளர்) அவர்கள் இன்று மாலை 12/12/2020 சனிக்கிழமை சுகயீனம் காரணமாக காலமானார். இவர் மண்டதீவை சேர்ந்த அமரர்களான திரு திருமதி மாணிக்கவாசகர் தம்பதியரின் அன்பு மகனும் ,வேலணை கிழக்கு செல்வநாயகம் வீதியை சொந்த இடமாகவும் தற்போது கொழும்பில் வசித்து வருபவர்களான திரு திருமதி பத்மநாதன் (தம்பு) நடராசதேவி (மாசிலா) தம்பதியரின் மருமகனும், சுகந்தியின் அன்புக் கணவரும் , மேனகன் (பணியாளர் நியூ பிரியங்கா நகைமாடம் -கிளிநொச்சி) ததுசன் மற்றும் றோசானா, கஜானா ,கோபிகன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,சத்தியா,ரூபி,அகிலன் ஆகியோரின் சகோதரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை 13.12.2020 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப.2.00 மணியளவில் பத்தினியார் மகிழங்குளம் மயானத்தில் தகனம் செய்யப்படும் இவ்அறிவித்தல்களை உற்றார் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அகிலன்.+33619033212