
மண்டைதீவு தெற்கைச் சேர்ந்தவர்களும் யோகபுரம் மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவர்களுமாகிய காலஞ்சென்ற விசுவநாதர் சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகன்; எங்கள் சிறிய தந்தையர்களில் ஒருவரான திரு. கந்தையா பரராஜசிங்கம் அவர்கள் இன்றைய தினம்(04.11.2020) இலங்கையில் காலமானார் எனும் தகவலை உறவுகள், ஊரவர்கள் மற்றும் உறவுச் சங்கமத்தின் நட்புகள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகிறேன். அன்னார் காலஞ்சென்ற தையல்நாயகியின் அன்புக் கணவரும், புனிதம்(குமுதா)விசுவமடு, இலங்கை, திருமாறன்(முகுந்தன்)டென்மார்க், புஸ்பம்(கவிதா)லண்டன், ஐக்கிய ராச்சியம், காலஞ்சென்ற அருள்மாறன்(குகன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். 💐🌸💮🏵🌹🌺🌻🌼🌷🙏🙏🙏🌋🌅💒⛪
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை (05.11.20) 3ஆம் யூனிட், தொட்டியடி, விசுவமடுவில் நடைபெறும். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தருகிறோம்.
தொடர்புகளுக்கு:
ப. திருமாறன்(முகுந்தன்) / மகன்(டென்மார்க்) : 0045 – 21310708
புஷ்பம்(கவிதா) / மகள் ; லண்டன், ஐக்கிய ராச்சியம்.
K. குணமணி (மைத்துனி) / லண்டன், ஐக்கிய ராச்சியம். 0044 – 208 965 2322
R. கிருஷ்ணலீலா (மைத்துனி) ஜெர்மனி.
தகவல்: திருமாறன் (முகுந்தன்) (மகன்)- டென்மார்க்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்