Filed under: Allgemeines | Leave a comment »
அல்லையூர் அறப்பணியில்
இரண்டாவது நினைவஞ்சலி

இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி
அன்னையின் மடியில் 23,08,1963. இறைவன் அடியில் 23,10,2018.
மண்டைதீவை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வசித்தவருமான சிவசிறிகுமரனின்
இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி
(திதி 30,10,2020,வெள்ளிக்கிளமை)
ஆண்டு இரண்டு பறந்தோடி
அரும் நினைவுகளை தூண்ட
நினைவுகள் ஒவ்வென்றாய்
நிழல் படமாய் எம்திரையில்
நிதர்சனங்களாகி எம்முள்
நீழ்ஒளியாய் காட்ச்சிதர
நிஐத்தை இழந்த தவிப்போடு
அவைகள் எம்மை நெறிப்படுத்த
அதன் வழியே நாமும் இசைந்து
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
திதிபார்த்து துதித்தவண்ணம்
இறைவனிடம் பிராத்திக்கின்றோம்
மனைவி,சகோதரங்கள்,உறவுகள்




Filed under: Allgemeines | Leave a comment »
கேதாரகெளரி விரதம்

மண்டைதீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்போது நடைபெறும் கேதாரகெளரி விரத தினசரி பூசைகள் உரிய நடைமுறைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது.கடந்த 2020/10/25 அன்று ஆரம்பமாகிய இப்பூசைகளின் தினசரி உபயமளிப்போர் விபரம் வருமாறு:
1 ம் நாள் சுப்பிரமணியம் சந்திரகுமாரன்(25/10
2 ம் நாள் சோமசுந்தரம் தர்ஷன்(26/10
3 ம் நாள் சபாபதிப்பிள்ளை விஜயகுமாரன்(27/10
4 ம் நாள் ஜெயசோதி பிறேமகாந்தன்(28/19
5 ம் நாள் சிவயோகநாதன் ஶ்ரீகாந்ததேவி(29/10
6 ம் நாள் கனகரெத்தினம் மணிமாறன்(30/10
7 ம் நாள் இ. ஞானாம்பிகை(31/10
8 ம் நாள் ஆசைப்பிள்ளை திலகன்(01/11
9 ம் நாள் சபாநாயகம் உதயகாந்த்(02/11
10ம் நாள் கார்த்திகேசு சுபாஸ்கரன்(03/11
11ம் நாள் ஶ்ரீகுமரநாதன் துவேனிகா(04/11
12ம் நாள் செந்தூரன் சசிதரா(05/11
13ம் நாள் கனகசபை சிவராசா(06/11
14ம் நாள் முரளி நந்தகுமாரி(07/11
15ம் நாள் தனானந்தன் முத்துலட்சுமி (08/11
16ம் நாள் மணியம் வினோதன்(09//11
17ம் நாள் அருணாசலம் ஜெயகுணதிலகம்10/11
18ம் நாள் தெய்வீகலிங்கம் நிறைமதி11/11
19ம் நாள் க.பாக்கியலெட்சுமி12/11
20ம் நாள் வினாயகமூர்த்தி செந்தில்குமரன்13/11
21ம் நாள் வீரகத்தி மாணிக்கவாசகர்14/11
கெளரிக்காப்பு உபய,விரத வழிபடுநர்களும் அனைவரும் அன்னையின் அருட்காப்பில் என்றும் அபயம் கொள்வர்.
-ஆலய பரிபாலன சபையினர்.
Filed under: Allgemeines | Leave a comment »
முதல்ஆசானின் நெறிமுறை
ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு. மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.
பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார். இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.
நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.
”வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டான்.
நேர்காணலுக்கு கிளம்பினான்.
“கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.
நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.
கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை.
கதவு சற்றே திறந்திருந்த தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது. அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.
நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன. தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற் காக குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது.
குழாயை கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.
வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள். மெதுவாக மாடிப்படியில் ஏறினான். நேற்று இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.
“விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.
மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார் கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே திகைப்பு. “நமக்கு இங்கு வேலை கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.
பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.
அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன. ”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.
இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்.
இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை.
கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான்.
சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே “நீங்கள் எப்போது வேலைக்கு சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன்.
”என்ன யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார்,
நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை.
கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம்.
அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம்.
இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள்.
நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கி றோம்” என்றார்.
அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.
அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது.வேலைக்குச் செல்லும் இடத்திற்கு அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான் மகன்.
அப்பா நமக்காக எது செய்தாலும் சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலத்திறாக மட்டுமே இருக்கும்!
உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்த பாறையும் சிலையாவதில்லை, வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன.
நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை, உளி போன்று வார்த்தைகளால், கட்டுப்படுத்துவதால் தான், நாம் காலரை தூக்கிக்கொண்டுகண்ணாடி முன் நின்று, அவர்கள் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே.
தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்.
” ஆனால் தந்தை அப்படி அல்ல “
தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமரவைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்.
ஒரு சொல் கவிதை அம்மா!
அதே ஒரு சொல் சரித்திரம் அப்பா!
தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்து விடலாம்.
தந்தை கஷ்டபடுவதை பிறர் சொல்லி தான் கண்டுபிடிக்க முடியும்.
நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும், இருபது வயதில் வில்லனாகவும், தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக பாதுக்காவலராக தெரிகிறார்.
தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தை கடத்தி விடுவாள்.
அந்த வித்தை தந்தைக்கு தெரியாது. கடைசி வரை தனி மனிதன் தான்.
எனவே தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பலனுமில்லைல்லை, பிரயோஜனமுமில்லை.
பிடித்திருந்தால் பகிருங்கள்!
Filed under: Allgemeines | Leave a comment »
நலிவுற்ற மக்களுக்கான 36ஆவது கொடுப்பனவின் விபரம்

Filed under: Allgemeines | Leave a comment »
பிறநாடுகளிலிருந்து வருவோர்க்கு
Filed under: Allgemeines | Leave a comment »
மரண அறிவித்தல்
மண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான லிங்கபிள்ளை நாகேஸ்வரி தம்பதியினர் மகனான
வேலும் மயிலும் (வேணு) இன்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார் என்பதை அனைவருக்கும் அறியத் தருகிறேன்
மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும்
Filed under: Allgemeines | Leave a comment »
மரண அறிவித்தல்

மண்டைதீவு 2ஆம் வட்டாரத்தை பிறப்புடமாகவும் கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் விஐலட்சுமி அவர்கள்30/09/20இன்று கனடாவில் இயற்கை எய்தினார் அன்னார் காலம் சென்ற பொன்னையா தருமலிங்கத்தின் அன்பு மனைவியும் வேலுபிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்புமகளும் பொன்னையா தம்பதிகளின் மருமகளும் றமேசன்,றஜனி,சபேசன்,மகேசன்,றமணி ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்
காலஞ்சென்ற தில்லைநேசன், மஞ்சுளா, சர்மிளா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான உமாபதி, உலகேஸ்வரி, கிருஷ்ணா மற்றும் காந்தமலர், நடனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான யோகலிங்கம், பரம்சோதி, நாகம்மா, அம்பிகாவதி, பாலகிருஷ்ணன்(பாலு), துரைரெட்ணம்(சாமி), வசந்தமலர் மற்றும் சுகிர்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பலதா, அருளானந்தம், வினாயகரெட்ணம் சுந்தரலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
அசோக்ரமணா, பிருத்வி, ஹரணி, அஷானி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
சந்தோஷ், மகிஷா, ஆத்மிகன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
ஸ்ரீபத்மராஜா, ஸ்ரீபத்மினி, ஸ்ரீரவீந்திரராஜா, சாந்தினி, றோகினி, நந்தினி, நளாயினி, இளங்கோ, சுலோஜினி, வினோதினி ஆகியோரின் சிறிய தாயாரும்,
கல்யாணி, சகிதரா ஆகியோரின் சின்ன அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
ஏற்றுக்கொள்ளவும்
பார்வைக்கு வைக்ப்படும் நேரம் சனிக்கிளமை,’3,10.2020அன்று மதியம் 12மணியில் இருந்து 4 மணி வரை ஞாயிறு 4.10.2020 அன்று11மணியில் இருந்து 12வரை பின்பு 12இருந்து 2மணிவரை கிரியை பின்னர் 2.30மணிக்கு தகனம் செய்யப்படும்
தகவல் சபேசன் மகன் கனடா
பார்வைக்கு Get Direction
- Saturday, 03 Oct 2020 12:00 PM – 4:00 PM
- Sunday, 04 Oct 2020 11:00 AM – 12:00 PM
- Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை Get Direction
- Sunday, 04 Oct 2020 12:00 PM – 2:00 PM
- Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் Get Direction
- Sunday, 04 Oct 2020 2:30 PM
- Highland Hills Funeral Home and Cemetery12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சபேசன் – மகன்
- Phone : +19057510818
- Mobile : +16474449284
ரமணி சிவகுமார் – மகள்
- Mobile : +16479684717
ரமேசன் – மகன்
- Mobile : +4917628444185
ரஜனி தில்லைநேசன் – மகள்
- Mobile : +94769270182
மகேசன் – மகன்
- Mobile : +491772045488
https://m.facebook.com/story.php?story_fbid=669038514045966&id=100028194712728
Filed under: Allgemeines | Leave a comment »