மண்டைதீவு மகாவித்தியாலய புனருத்தாரனம் நிறைவு பெற்றபகுதிகள் நாளை கையழிப்பு விழா
மண்டைதீவு மகா வித்தியாலயம்.
எமது உறவுகளின் நிதிப்பங்களிப்பில் மண்டைதீவு கல்வி வளர்ச்சி கழகத்தினரால் செய்து முடிக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ள பணிகள்.
சீரமைக்கப்பட்ட ஆரம்ப பிரிவு வகுப்பறை கட்டிடம்.
சீரமைக்கப்பட்டு மெருகூட்டப்பட்ட அதிபர் அலுவலகம்.
கணணிகள் வழங்குதல்.
ஆரம்ப பிரிவு வகுப்பு மாணவர்கட்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல்.(அனுசரனை இலங்கை வங்கி)
எதிர்வரும் 30.09.2020 புதன் கிழமை முற்பகல் 09 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.முதன்மை விருந்தினராக தீவக வலய கல்விப் பணிப்பாளர் அவர்கள் கலந்து கொள்வார்.
பெற்றோர்,பாதுகாவலர்கள்,நலன் விரும்பிகள்,பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
மண்டைதீவு கல்வி வளர்ச்சி கழகம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்