• ஓகஸ்ட் 2020
    தி செ பு விய வெ ஞா
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,139 hits
  • சகோதர இணையங்கள்

மணிவிழா கோலம் கண்ட

யாழ் கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகராக (ISA) பணியாற்றி ஓய்வு பெறும் மண்டைதீவு மண்ணின் மைந்தனும் மண்டைதீவு கல்விவளர்ச்சிக் கழகத்தின் தலைவரும் ஆகிய திரு சிவஞானசுந்தரம் ஞானசேகரன் அவர்களுடைய பிரியாவிடை நிகழ்வு (2020.08.28)

காணிச்சுவீகரிப்பை முறியடித்த

மண்டைதீவு தெற்கு கடற்கரையில் தனியாருக்கு சொந்தமான காணிகள் கடல்படையினரால் சுபிகரிக்க முயற்சி மக்களின் எதிர்பால் பின்வாங்கல் புகைபடங்களுக்கு நன்றி

மரணஅறிவித்தல்

04 FEB 1947 – 28 AUG 2020 (73 வயது)

பிறந்த இடம் :மண்டைதீவு 1ம் வட்டாரம்

வாழ்ந்த இடம் :கனடா

யாழ். மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் சிதம்பரநாதன் அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் தவப் புதல்வரும், சீவரத்தினம் நித்தியரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரமதி அவர்களின் அன்புக் கணவரும்,

வசுமதி, மணிமாறன், கலைமதி, சிவமாறன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்வகுமார், செல்வராஜா, காலஞ்சென்ற சிரோன்மணி, திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவகாந்தன், தவமதி, சிவனேஸ்வரன், சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நவநீதகல்யாணி, தையல்நாயகி, காலஞ்சென்ற நவமணி, சிறிறதிவதனா, காலஞ்சென்றவர்களான வர்ணலிங்கம், நித்தியகல்யாணி, சிவநடராஜா மற்றும் மனோன்மணி, மகேந்திரராஜா, சிறிரங்கரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபீரன், கோபிகா, வர்ஷன், சானுஷன், ஆருஷன், திஷான், பவிஷான், சாருஷா, சிபிஷா, தீட்சணா, சஹானா, சபரீஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

கிரியை Get Direction

தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

 சந்திரமதி – மனைவி

 சிவம்- மதி

 மணி

 சிவனேஸ்- கலா

 சிவா

திருவன்காட்டு வினாயகரின் 5ஆம் திருவிழா

வினாயகனின் 4ன்காம் திருவிழா

வினை தீர்க்கும் வினாயகனின் 3ன்றாம் திருவிழா

மண்டைதீவு திருவன்காடு வினாயகனின் கொடியேற்றம்

ஆவணித்திங்கள்8ஆம் நாள் 24/08/2020அன்று வினாயகனின் கொடியேற்றத்தின் போது எடுக்கப் பொற்ற நிழல் படங்கள்

மரணறிவித்தல்

மண்டைதீவு2ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் டென்மார்கில்தற்கால வதிவிடமாகவும் கொண்டவரும்மான சிவசரணம் சக்திதாசன்(றாஐன்) அவர்கள் காலமானர் இவர் சிவசரணம் தம்பதியினரின் அன்பு மகன் ஆவார் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

திருவன்காட்டில் சிரமதானம்

மண்டைதீவு திருவண்காடு சித்திவினாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு வாண்மதி விளையாட்டுகழக இளஞர்களால் முன்னேடுக்கப்பட்ட சிரமதானப்பணிகள் .

மரணஅறிவித்தல்

  • 01 MAY 1939 – 16 AUG 2020 (81 வயது)
  • பிறந்த இடம் :மண்டைதீவு
  • வாழ்ந்த இடம் :

யாழ். மண்டைதீவு அல்லைப்பிட்டியைப் பூர்விகமாகவும், பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பாரதிபுரத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவப்பிரகாசம் அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

இந்திரா(கமலாதேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவபாஸ்கரன், புஸ்பகரன்(கண்ணன்), ஜீவகரன்(தரன்), காலஞ்சென்றவர்களான சிவமலர், ஞானகரன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம், கலா, அன்னபூபதி ஆகியோரின் அன்பு தம்பியும்,

தனலட்சுமி, மஞ்சுளா, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திருநீலகண்டன், சிறிகாந்தராசா, பராசக்தி, திருநாவுக்கரசு, விமலாதேவி, யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், 

தாரணி, நிதுசன், நிதுசிகா, யதுசன், பிரித்திகா, அஷ்விகா,இனிஷிகா, தர்மிகன், தாருணியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பாரதிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 கமலாதேவி – மனைவி

 சிவபாஸ்கரன் – மகன்

 புஸ்பகரன்(கண்ணன்) – மகன்

 ஜீவகரன்(தரன்) – மகன்