• ஜூலை 2020
  தி செ பு விய வெ ஞா
   12345
  6789101112
  13141516171819
  20212223242526
  2728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,266,214 hits
 • சகோதர இணையங்கள்

மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழகத்தினால்

மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழகத்தினால் க. பொ. த சாதாரணதர வகுப்பினருக்கான பிரத்தியேக வகுப்புகள் திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய [பிள்ளையார் கோவில்] அன்னதான மண்டபத்தில் 24. 07.2020 பிள்ளயார் சுழியேடு வெள்ளிக்கிழமை இன்று ஆரம்பமானது

அம்மன்உற்ஷப வின்ஞாபனம்

மண்டைதீவு மகாவித்தியாலயத்தில்

மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழக செயலணியின் முதல்செயல் திட்டம்19,07,20,ஞாயிற்று கிளமை மாபெரும் சரீரபணியாற்றல் வெற்ரிகரமாக நடைபெற்றது

திருவிழவை முன்னிட்டு

அம்மன் ஆலய சுற்றுபுற சூழலல் துற்பரவு பணியில்

35 பேர் வரை ஆண்களும் பெண்களுமாக அடியார்கள் ஒன்று கூடி முழு ஈடுபாட்டுடன் சரீரபங்காற்றி தூய்மைப்படுத்தினர்

காலை 8.00 மணிக்கு முன்னமே ஆரம்பமான இத் தொண்டாற்றல் நிகழ்வு மாலை 4.30 மணி வரை தொடர்ந்தது.


மரண அறிவித்தல்


மண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் மகாதேவி அவர்கள் இன்று canada Toronto வில் காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம். இவர் காலம்சென்ற வியாகரத்தினம் (பதிவாளர்) அவர்களின் மகள் மேலதிகவிபரம் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல் சகோதரி

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்.
மண்டதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 09. கலைவாணி வீதி கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயக்குமாரி பத்மராசா 14.7.2020 செவ்வாய்க்கிழமை காலமானார். இவர் காலஞ்சென்ற குமாரமூர்த்தி மற்றும் நடனசுந்தரி ஆகியோரின் ஏகபுத்திரியும், பத்மகுமார்,விஜயகுமார், சத்தியகுமார், சரத்குமார் ஆகியோரின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற பத்மராசாவின் அன்பு மனைவியும், வினோஜிதா, ஜீவிதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள்15.7.2020. 12மணிக்கு இலக்கம்9.கலைவாணி வீதி கோண்டாவிலில் நடைபெற்று கோண்டாவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

மண்டைதீவு மகாவித்தியாலய செயலணி அமர்வு

மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழக செயலணியின் நிர்வாகக் குழுக் கூட்டம் 04.07.2020 பி.பகல் 3.30 மணிக்கு யா/ மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சி.ஞானசேகரம் (கிளி மாஸ்டர்) அவர்கள் மண்டைதீவினதும் அதன் கல்வி சார் மேம்பாட்டிலும் புலம் பெயர் மண்டைதீவு உறவுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ப.சுதாநந்தராஜா( சுதா மாஸ்டர்) கல்வி மேம்பாட்டிற்கு பாடசாலை உட்கட்டுமான செயற்பாடுகளை செய்தால் மட்டும் போதாது. மாணவர் கல்வி மேம்பாட்டிற்கு பலதரப்பட்ட செயற்பாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அவை பாடசாலை அதிபரின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கழகத்தின் வங்கி நடவடிக்கைகளுக்காக செயலணிக்கு தலைவராக சி.ஞானசேகரமும் செயலாளராக பே.விஜியந்தனும் பொருளாளராக ப.திருவருட்செல்வனும் செயற்பட அங்கீகாரம் வழங்கப்பட்டது.

செயலணியை மேலும் வலுவூட்ட துறைசார்ந்த ஆர்வலர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று கீழ் வருமாறு தேர்வு செய்யப்பட்டது.

 1. திரு. நல்லையா விஜயசுந்தரம்
 2. திரு.வேலாயுதபிள்ளை ஞானாேதரன்
 3. திரு.செல்லத்துரை சேதுராஜா
  4.திரு. சரவணபவன் மோகனபவன்
 4. திரு.முத்துலிங்கம் இராஜகோபால்

தவிர, உள்ளக கணக்காய்வாளராக திரு. மாணிக்கலிங்கம் திருலிங்கம் (திரு மாஸ்டர்) அவர்களை செயலணி ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

குறைந்தபட்ச செயற்திட்டத்தை பாடசாலை அதிபருடன் நேரடியாக கலந்துரையாடி உருவாக்குவதே சிறந்தது என செயலணித் தலைவர் திரு.சி. ஞானசேகரம் அவர்கள் குறிப்பிட்டதுடன் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் ஆராயப்பட்டன.
அதன் படி

 1. பாடசாலைச் சுற்று மதில் மற்றும் வேலி அமைத்தல்.
 2. ஆரம்ப பிரிவு வகுப்பறைகளுக்கு ஜன்னல்கள்,மேல் நெற்றுக்கள் அமைத்தல்.
 3. அதிபர் அலுவலகம் சீரமைப்பு, வகுப்பறைக் கதவுகள், வகுப்புகளுக்கு இடையிலான தடுப்புககள் அமைத்தல் ,பழுதடைந்த ஓடுகள் மாற்றுதல், புறாத்தடுப்பு நெற் அமைத்தல் போன்ற சிறு திருத்தங்கள் .

4.இம்முறை க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களுக்கும் ஆண்டு 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கும் பிரத்தியேக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல்.

 1. வரும் 2021 பாடசாலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு குறித்த தொகை ஆரம்ப நிதி வைப்புடன் சிறுவர் சேமிப்பு கணக்கை ஆரம்பித்துக் கொடுப்பதுடன் கால்கோள் விழாவை பாடசாலை உபகரணப் பொதி வழங்கலுடன் இணைந்ததாக நடாத்துதல்.
 2. மாணவர்கள் சிற‌ந்த பெறுபேறு பெற வழிப்படுத்தும் ஆசிரியர்களின் கௌரவிப்பு விழாவிற்கு பங்களிப்பு வழங்கல்.

7.2020 இல் G.C.E O/L சித்தி பெறும் மாணவர்களை கிராம மக்களுடன் இணைந்து கௌரவித்தல்.

 1. நீண்டகால நோக்குடன் G.C.E (O/L), 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளில் சித்தி அடையும் மாணவர்கள், கல்வி மற்றும் இணைப்பாட செயற்பாடுகளில் திறமை காட்டும் மாணவர்களுக்கு பழைய மாணவர்கள் மூலம் நீத்தோர் நினைவுப் புலமைப் பரிசில் வழங்கல் செயற்திட்டத்தை நிலையான வைப்புக்களை உருவாக்கி நீண்டு நிலைக்கச் செய்தல்.

தவிரவும், கல்வி வளர்ச்சிக்கான செயற்திட்டங்களை காலத்திற்கு காலம் மீளாய்வு செய்து புதிய செயற்திட்டங்கள் வழிமுறைகளை இனங்கண்டு செயற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

பூம்புகார் கண்ணகைக்கு

பூம்பகார் கண்ணகைக்கு வருடாந்த பொங்கல் 6/07/20 திங்கள் அன்று நடை பெற்றது

https://m.facebook.com/parvathyparameshwarar/posts/pcb.1459420057585059/?photo_id=1459395854254146&mds=%2Fphotos%2Fviewer%2F%3Fphotoset_token%3Dpcb.1459420057585059%26photo%3D1459395854254146%26profileid%3D0%26source%3D48%26__tn__%3DEH-R%26cached_data%3Dfalse%26ftid%3D&mdp=1&mdf=1#

முத்துமாரிக்கு சங்கால் அபிஷேகம்

மண்டைதீவு முத்துமாரி அம்மனுக்கு 6,07,20 நடைபெற்ற சங்காபிஷேக நிழல் படங்கள்

கண்ணகை அம்மனின் ஊர்வலம்

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்திமயமாக நடைபெறுகிறது வீதி உலா வைபவம்

மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மனின் ஊர்வலத்திருநாளில் வீதி உலாவுக்காக ஆயத்தமாகும் வசந்தமண்டப பூசை 2020/07/03 நேரம் மாலை 5.00 மணி

சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை மிக கவனமாக கடைப்பிடித்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்திமயமாக நடைபெறுகிறது வீதி உலா வைபவம்

அடியார்களின் நலன்களை பேணி அன்னை கண்ணகையின் ஊர்வல ஊர் உலா மட்டுப்படுத்ப்பட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது .திங்கள் கிளமை அன்னைக்கு பொங்கள் நடைபெறும்