• ஜூன் 2020
    தி செ பு விய வெ ஞா
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,772 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவு ஶ்ரீமுத்மாரி அம்மனுக்கு

வேப்பந்திடல் ஶ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலய
2020ம் வருட சங்காபிஷேக,மற்றும் மகோற்சவ கால வைபவங்களை முன்னிட்டு சரியைத்தொண்டாற்ற (சிரமதானம்) வருமாறு அன்னையின் புதல்வர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

ஆலயத்தோடு ஆலய வளாகத்தில் அரும் பணியாற்றல் காலம்: 2020/07/04 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும்.அனைவரும் வருக.

காலம் நம்மை வெவ்வேறு திசைகளில் நிறுத்தியிருந்தாலும்,ஆலய சந்நிதானங்களில் ஒன்றிணைதல் ஒன்றே நம் மண்ணுக்கும்,
தேவி அன்னைக்கும், அக மகிழ்வுக்கும் நாம் கொடுக்கின்ற ஆத்ம பரிகாரம் ஆகும்.

அவ் வகையில் ஆலயங்களின் அழைப்பென்பது தெய்வங்கள் நம்மை தேடிக்கொண்ட சேதியேயாகும். அதனை உணர்ந்து நாடி ஒருமுறை இத் திருநாளிலோ அல்லது விழாநாளிலோ நாம் வருதல் நம் பூமிக்கும் அன்னைக்கும் நாம் கொடுக்கும் நன்றி உபகாரம் எனக்கொள்வோம்.

-என்றும் அனைவரினதும் கரம்பற்றி வரவேற்க காத்திருக்கும் வேப்பந்திடல் முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினரின் அன்புக்கோரிக்கையை அவ்வவ்வேளைகளில் நம் உறவுகள் எல்லோரிடமும் எடுத்துச்செல்லுங்கள் எம் அன்பு உறவுகளே!
-நன்றி-

பாழடைந்து காணும் பாடசாலையின் தேவைக்காய் புதிய செயலணி

அனைவருக்கும் வணக்கம்.

பாழடைந்து காணும் பாடசாலையின் தேவைக்காய் புதிய செயலணி உதயமாகியுள்ளது நலன் விரும்புவோர் கரம்பற்ரினால் நாம் பயின்ர அறிவாலயம் நம்மவர்காய் உதவும்

மண்டைதீவுக் கிராமத்தின் கல்வியின் ஊற்றாக விளங்கும் மண்டைதீவு மகாவித்தியாலயத்தின் கல்வி மேம்பாட்டின் பொருட்டு குறுங்கால மற்றும் நீண்டகாலச் செயற்த்திட்டங்களை பாடசாலைச் சமூகம்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்லும் ஓர் ஆரம்ப முயற்சியாக மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழகத்திற்கான ஓன்பது பேர் கொண்ட செயல்அணி ஒன்று 28.06.2020 ஞாயிற்றுக்கிழமை உருவாக்கப்பட்டது .
இதன் அனைத்துலக ஒருஙகிணைப்பாளர்களாக
வைரவநாதன் தயாகரன் இராசரத்தினம் பரதன்
யோகநாதன் பாஸ்கரன் ஆகியோர்
செயற்படுவதுடன் கனடா,இங்கிலாந்து,பிரான்ஸ்,
ஜேர்மணி நோர்வே, டென்மார்க் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் இணைப்பாளர்களைக்கொண்டு செயற்படவுள்ளது.

செயல் அணி உறுப்பினர்கள்

1.சிவஞானசுந்தரம் ஞானசேகரன்
2.பரமானந்தம் சுதானந்தராஜா
3.இராசரத்தினம் பரணீகரன்
4.கனகரத்தினம் வசீகரன்
5.பத்மநாதன் திருவருட்செல்வன்
6.பேரின்பநாதன் விஜியந்தன்
7.தர்மராசா மாலினிதேவி
8.இரவிந்திரன் ஜெகதீஸ்வரி
9.குழந்தைவேல் பவன்ராஜ்

எனையநாடுகளின் இணைப்பாளர்கள் மற்றும் மேலதிகவிபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .

நன்றி

நலிவுற்ற மக்களுக்கான 32ஆவது கொடுப்பனவின் விபரம்

மண்டைதீவு குளம் வெட்டும் பணி

முத்துமாரி அம்மன் ஆலய பின்வீதியில் தூர்ந்து போய் உள்ள குளம் ஆழமாக்கலும் விரிவு படுத்துதலும் நடைபெறும் காட்ச்சிகள்

நிர்வாக ஒன்று கூடல்

மண்டைதீவு வேப்பம்திடல் முத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபையின் 2020 – 2021 க்கான வருடாந்த பொதுக் கூட்டம் 20.06.2020 அன்று திவாகர் நற்பணி மண்டபத்தில் நடைபெற்றது.
புதியநிர்வாக உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

போசகர்
கனகசபை சிவராஜா

தலைவர்
பரமானந்தம் சுதானந்தராஜா

செயலாளர் பேரின்பநாதன் விஜியந்தன்

பொருளாளர்
ஜெயசோதி பிரேமகாந்தன்

உபதலைவர்
அருளானந்தம் ஸ்ரீபத்மராஜா

உபசெயளாளர்
தர்மராஜா மாலினிதேவி

நிர்வாகஉறுப்பினர்கள்

ஆ.அனந்தரூபி
ம.சசிகாந்
தி. யோகநாதன்
வீ.மாணிக்கவாசகர்
தி. தர்சிகா
ஜெ.கங்காதீபன்

கணக்காய்வாளர்
க.கணேஸ்
பே.சுஜியந்தன்

முகப்புவயல் முரனின் தேர்

நாட்டின் நிலை உணர்ந்து மட்டுபடுத்தப்பட அடியார்களின் எண்ணிக்கை கொண்டு தேர் உற்சபம் இனிதே நிறைவேறியது

1வது ஆண்டு நினைவு அஞ்சலி


25 AUG 1956 – 30 JUN 2019 (62 வயது)

பிறந்த இடம் :மண்டைதீவு கிழக்கு

வாழ்ந்த இடம் :சாவகச்சேரி

யாழ். மண்டைதீவு கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமகாவும் கொண்டிருந்த கந்தையா வைபோகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

நிழல் போல் இருந்தவர் நீங்கள்
நினைவாய் மாறினீர்கள்!
கண் இமைக்கும் நேரத்தில் 
கண்ணீர் துளியாக்கினீர்கள்!
உங்கள் சிரிப்பும் குரலும் கேட்டு 
ஓராண்டானதோ! 

அன்புடன் அழைக்க நீங்கள் இங்கில்லை
பரிதவிக்கின்றோம் நாம்!
வழியொன்றும் காணவில்லை எமக்கு 
ஆற்றும் வழி தேடுகின்றோம்!
ஆறவில்லை எம் இதயம் 
உங்கள் நினைவுகள் விட்டு அகலவில்லை 
என்றும் உங்கள் நினைவுகளுடன்! 

அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும், ஆத்ம சாந்திக் கிரியைகளும் 18-06-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்Address: Get Directionஆடியம்பிட்டி வீதி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

Video

தொடர்புகளுக்கு

 குடும்பத்தினர்

மண்டைதீவு முகப்புவயல் முருகனுக்கு

12,06,2020 கொடிஏற்றம்

கண்ணகைக்கு குடமுக்கு

மண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்பாழுக்கு கும்பா அபிசேகம் இன்று 11,06,2020 வியாழக்கிளமை நடைபெற்றது அன்றயதின நிளல்பட தொகுப்பு இதோ

மரண அறிவித்தல்


யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட இறமேந்து தேவசகாயம் அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இறமேந்து கிறிஸ்ரினாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இறப்பியேல் ஞானசவுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆகத்தம்மா தேவசகாயம்(ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,

யோகராசா, யோகராணி, யோகநாதன், யோகமதி, யோகநேசன், யோகா(சூட்டி), யோதினி, யோகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வசந்தி, பீற்றர், சிறானி, காலஞ்சென்ற ஜெயரட்ணம் மற்றும் உதயா, இராஜரட்ணம், அன்ரனி, இதயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றெனி, நிலாந்தி, கெனி, டொறின், ஜோண், கொலின், மொறின், ஷெறின், நெவின், போல், கெவின், எறிக், றுபினா, யூலினா, எவ்லின், ஜோலின், றொனால்ட், டெய்னா, ஆன்று, லோறா, டெறின், யசி, ரனிஷா, லகீஷா, ஜனோஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆஷ்லி, ஐஷன், எலெய்னா, ஜெனிக்‌ஷா, ஜெஷானா, வேந்தன், எல்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

அன்னாரின் திருப்பலி 13-06-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் நடைபெற்று பின்னர் நல்லடக்கம் செய்யப்படும். அன்றைய தினத்தில் மு.ப 06:00 மணியளவில் யாழ். மண்டைதீவில் அமைந்துள்ள புனித பேதுருவானவர் ஆலயத்திலிம் அவரின் நினைவாக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு

  • 11th Jun 2020 7:00 PM

பார்வைக்கு Get Direction

திருப்பலி Get Direction

தொடர்புகளுக்கு

 Emmanuel(யோகன்) – மகன்

 Alfred(நாதன்) – மகன்

 Wilfred(நேசன்) – மகன்

 Dorin – பேத்தி