• ஏப்ரல் 2020
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,851 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல்

யாழ். சிறாம்பியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பரமேஸ்வரி அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

ஜெயசிங்க அண்ணரின் மாமியார்

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பண்டிதர் சுப்பிரமணியம் சின்னத்தம்பி(அம்பிகைதாசன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

இலட்சுமி(மங்கை), மீனாம்பாள், தையல்நாயகி, கிருஷ்ணமூர்த்தி, காலஞ்சென்ற கருணாமூர்த்தி மற்றும் விஜயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவரத்தினம், திசைவீரசிங்கம், சிவஞானசுந்தரம், சிவாநந்தினி, சுபத்திராதேவி , யோகேஸ்வரி(லலிதா) ஆகியோரின் மைத்துனியும்,

துரையப்பா, நல்லையா, செல்லம்மா, செங்கமலம்(காவேரி), அன்னக்குட்டி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கருணைநாயகி(இலங்கை), காலஞ்சென்ற கலாநாயகி(ஜேர்மனி), மனோரஞ்சினி(அவுஸ்திரேலியா), தயாரஞ்சினி(கனடா), சிவகுமார்(கனடா), சிவசக்தி(கனடா), ஐங்கரன்(பிரித்தானியா), பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), சிவகாமினி(நெதர்லாந்து), திருமாவளவன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சீவரத்தினம் மற்றும் சூரியகுமாரன்(ஜேர்மனி), மகேந்திரன்(அவுஸ்திரேலியா), ஜெயசிங்கம்(கனடா), அக்னேஸ்மலர்(கனடா), துரைச்சாமி(கனடா), சுகந்தி(பிரித்தானியா), தமயந்தி(ஜேர்மனி), பாலச்சந்திரன்(நெதர்லாந்து), பத்மறோஜனி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு  மாமியாரும்,

சிவாநந்தி, சிவாநந்தன், முருகானந்தன், சபாநந்தன், கெளசிகன், பிரதீஸ், பிரியதர்சினி, பரணீதரன், நர்த்தனி, மெளலிதரன், லக்‌ஷமிகரன், சோஜனா, கம்சிகா, சுதர்சன், அஜந்தன், சோபியா, கெளதமன், துசாந், காயத்திரி, சிறீராம், நர்மதா, சஞ்சயன், வைஷ்ணவி, அபிராமி, ஆதீசன், டினூசன், தர்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லக்சயா, வைசாலி, லக்சிதாசாய், விக்னேஸ், மேகாசாய், யுவதீத்சாய், திருலக்சன்வெங்கடசாய், அக்கீரா, அமாரா, பிரகதீஸ், வருணன், றோசன், ஓவியா, ரமணன், விசாகன், அஸ்விகா, இசபெல்லா, ஈத்தன், ஸ்கைலர், எய்டன், அன்ரியா, வினோத், வினீத் ஆகியோரின் கொள்ளுப்பேத்தியும்,

ஆதிரா அவர்களின் எள்ளுப்பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

 கருணைநாயகி – மகள்

 சிவகுமார் – மகன்

 சிவசக்தி – மகள்

 தயாரஞ்சினி – மகள்

 ஐங்கரன் – மகன்

 பாலசுப்பிரமணியம் – மகன்

 சிவகாமினி – மகள்

 திருமாவளவன் – மகன்

 சிவநந்தன் – பேரன்

 பாஸ்கரன் – பேரன்

மரண அறிவித்தல்

மண்டைதீவு 5 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் ஈச்சமோட்டை யாழ்ப்பாணம் வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி சையோகநாதன் (பவா) அவர்கள் இன்று 26.4.20 காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம். விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .
இவர் சிவலோகநாதன் (appi)canada சந்திரபாலு france ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவர்.

https://www.ripbook.com/29264324/notice/108048

மகன் பிரதீபன் 00447859194936
London
மகள் பிரசா 0778327017 srilanka
தகவல் தம்பி சிவலோகநாதன் appi
Tel +12899522433 canada
பாலன் தம்பி france
+33651942259

  • 01 AUG 1950 – 26 APR 2020 (69 வயது)
  • பிறந்த இடம் :மண்டைதீவு
  • வாழ்ந்த இடம் :

AM

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி சையோகநாதன் அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபராஜ்(பிரித்தானியா), பிரசீத்தா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகராஜா, சந்திரபாலன்(பிரான்ஸ்), சிவலோகராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகபிரியாள், கஜமுகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகராசா, காலஞ்சென்ற கருணாகரன், மகேஸ்வரி(லீலா), தவமலர், வசந்தா, கோமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மு. நாகராசா அவர்களின் சகலனும்,

மகேஸ்வரி அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,

ஜீவிதா, பிரலீத்தா, பாமிதா(பிரான்ஸ்), தனுசன், அனுசா, சாது(கனடா), சஞ்சிவி, காலஞ்சென்ற சிரஞ்சீவி(இத்தாலி), ஜெயந்தா, திவாகர், சயந்தன் ஆகியோரின் பெரிய தந்தையும்,

அஜித் , அஜிதா, விஜிதா ஆகியோரின் அன்பு மாமாவும்,

அணகா, சுவாஸ்திகன், தனிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-04-2020 திங்கட்கிழமை அன்று ஈச்சமோட்டையில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு

  • 27th Apr 2020 7:30 AM

தொடர்புகளுக்கு

 பிரதீபன் – மகன்

 பிரசீத்தா – மகள்

 கஜமுகன் – மருமகன்

 குகபிரியாள் – மருமகள்

 சந்திரபாலன் – சகோதரர்

 சிவலோகராஜா – சகோதரர்

மரண அறிவித்தல்



மண்டைதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இளையகுட்டி நல்லையா அவர்கள் இன்று காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம் .மேலதிகவிபரம் பின்னர் அறிவிக்கப்படும்

தகவல் மகன் சதானந்தன். Canada

புத்தாண்டு வாழ்த்துக்கள்

உலகம் எங்கும் பரந்து வாழும்
எம் இனிய தமிழ் மக்களுக்கும் உறவுகளுக்கும் தித்திக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உரகடங்க துயரநிலை மாறி இயல்பான வாழ்கைதிரும்ப பிராத்தனைகளுடன் வரவேற்போம் புத்தாண்டே வருக வருக புதியசிறை விலக விலக

மரண அறிவித்தல்

16 FEB 1945 – 11 APR 2020 (75 வயது)

பிறந்த இடம் :புங்குடுதீவு 3ம் வட்டாரம்

வாழ்ந்த இடங்கள் :திருநெல்வேலி Toronto – Canada

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அன்னார், கனகலிங்கம்(யாழ் இந்து கல்லூரி, கோண்டாவில்- இராமகிருஸ்ண மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி கனகலிங்கம் அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

பாலமுரளி, பார்த்திபன், கபிலன், கார்த்திகா, மயூரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சீவரட்ணம், ரஞ்சிதராணி, பங்கயற்செல்வி, செல்வமலர், செல்வகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயகலா, சசிகலா, சிவகெளரி, கெளசிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சேசன், பாரதி, பிரணவி, பிரணவன், ஆரணி, ஆரபி, அஸ்வினி, பூஜா, கரீஸ், ஸ்ரீநிதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக குடும்ப உறவுகளோடு மட்டும் இறுதி  நிகழ்வுகள் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 பாலமுரளி – மகன்

 கனகலிங்கம் – கணவர்

 பார்த்திபன் – மகன்

மண்டைதீவு நலிவுற்ற மக்களுக்கான30 கொடுப்பனவு

கொரோணாவின் அறிகுறி

உங்களுக்கு காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற கொரோனா நோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா?

இந்த அறிகுறிகள் உங்களிடம் இருப்பதால் நீங்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் இவை கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகளுமாகும்.

எனவே உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கவும். இந்த நாட்டின் குடிமக்களாக இது உங்கள் தேசியப் பொறுப்பாகும்.

மருத்துவத் தேவை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.

வீட்டில்:

முடிந்தால் உங்களுக்காக ஒரு தனி அறையை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்;

உங்களுக்கும், உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூர இடைவெளியைப் பேண வேண்டும்;

உங்களால் முடிந்தால் தனியான கழிப்பறை / குளியலறையைப் பயன்படுத்துங்கள். அவ்வாறு இல்லாது நீங்கள் ஒரே குளியலறையை / கழிப்பறையைப் பயன்படுத்துவதாக இருந்தால் அவற்றின் கதவு கைப்பிடி, தண்ணீர்க் குழாய் போன்றவற்றை சவர்க்காரம் மற்றும் தண்ணீர் என்பவற்றினால் கழுவிவிடுங்கள்;

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முடிந்தவரை குறைக்கவும்;

நீங்களும் வீட்டிலுள்ள மற்றவர்களும் அடிக்கடி மற்றும் முழுமையாக கைகளை கழுவ வேண்டும் (குறைந்தது 20 விநாடிகளுக்கு);

உணவுத் தட்டுகள், தேனீர் கோப்பைகள், கண்ணாடி குவழைகள், துவாய் மற்றும் படுக்கை விரிப்புக்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்;

தும்மும் போது அல்லது இருமும் போது எப்போதும் உங்கள் வாயை ஒருமுறை மட்டும் பாவிக்கக்கூடிய தாளினால் அல்லது முழங்கையின் உட்புறத்தால் மூடிக்கொள்ளுங்கள்;

பயன்படுத்திய தாள்களை மூடி கொண்ட ஒரு குப்பைத் தொட்டியில் இட்டு பாதுகாப்பாக அகற்றுங்கள்;

நீங்கள் பயன்படுத்திய அனைத்து முகமூடிகள் மற்றும் கையுறைகளை ஒரு மூடி கொண்ட குப்பைத் தொட்டியில் இட்டு அப்புறப்படுத்துங்கள்;

மிக முக்கியமாக, கடந்த ஒரு மாத காலத்திற்குள் நீங்கள் வெளிநாட்டில் இருந்திருந்தால்,

அத்தோடு, கடந்த ஒரு மாத காலத்திற்குள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் ஒரு நபருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தால், உடனடியாக உங்கள் பகுதியின் பொதுச் சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரியிடம் தெரிவியுங்கள்.

மருத்துவ சிகிச்சை குறித்த மேலதிக ஆலோசனைகளுக்கு 1999 என்னும் தொலைபேசிச் சேவையை அணுகுங்கள்.

சிகிச்சைக்காகப் போக்குவரத்து ஒழுங்குகளைச் செய்ய வேண்டுமெனில், 1990 என்ற தொலைபேசி இலக்கத்தில் நோயாளர் காவு வண்டிச் சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள்.ஶ்ரீலங்கா