ஒரு நாள் சேவையில் தேசிய அடையாள அட்டையை பெற
——————————————————நண்பர் வேதநாயகன் தபேந்திரன் அவர்களின் சமூகப்பயன் வாய்ந்த இத் தகவல்பகிர்வு, நம் உறவுகளும் பயன்பெற இடுகை செய்யப்படுகிறது. நன்றி:தபேந்திரன்.
………………………………………
தொலைந்து போன எனது தேசிய அடையாள அட்டைக்குப் ( NIC – National Identity Card ) பதிலாகப் புதியது ஒன்றை நேற்றைக்கு முந்திய நாள் கொழும்பிலுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தில் ஒரே நாள் சேவையில் பெற்றுக் கொண்டேன்.
அதன் அனுபவத்தைப் பகிர்கிறேன். உங்களுக்கும் ஏனையோர்களுக்கும் பயனுடையதாக இருக்கும்.
01.தேசிய அடையாள அட்டையொன்று தொலைந்தால் தேடிப் பார்த்துக் கிடைக்கா விட்டால் 15 நாள்களுக்குப் பின்னர் தான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம்.
- உங்கள் பிரிவு கிராம அலுவலரிடம் சென்று கோரிக்கைக் கடிதம் ஒன்றை அவரிடம் கொடுக்க வேண்டும். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு முகவரியிட்டதாக அக் கடிதம் இருத்தல் வேண்டும்.
தொலைந்து போன உங்களது தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தைக் கட்டாயம் குறிப்பிட்டுக் கடிதம் எழுதுதல் வேண்டும்.
- கிராம அலுவலர் கடிதத்தைச் சிபாரிசு செய்து தந்த பின் அதனை உங்கள் பிரதேச நிர்வாகத்திற்குப் பொறுப்பான பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்று முறைப்பாடு செய்தல் வேண்டும்.
- பொலிஸ் நிலையத்தில் உங்கள் முறைப்பாட்டைத் தமிழ் மொழியிலேயே பதிவு செய்வார்கள். தற்போது பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு எழுதும் அறிக்கைப் புத்தகம் இரு காபன் பிரதிகள் உள்ளதாகப் பாவிக்கப்படுகிறது.
அதனால் முறைப்பாட்டின் மூலப்பிரதியில் நீங்கள் கையொப்பம் இட்ட பின்பாக அப் பிரிவின் பொறுப்பதிகாரி கையொப்பம் இடுவார்.
கையொப்பத்தின் கீழ் நிலையப் பொறுப்பதிகாரியின் றப்பர் சீல் கட்டாயம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
- ரூபா 25 ஐ நீங்கள் செலுத்துினால் உடனேயே பொலிஸ் அறிக்கையின் மூலப்பிரதியை உங்களிடம் தந்து விடுவார்கள்.அப் பிரதியை உங்கள் கைவசம் பாதுகாப்பானதாக வைத்திருக்க வேண்டும்.
- தேசிய அடையாள அட்டைக்கு என அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரூடியோவுக்குச் சென்று 150 ரூபா கட்டணம் செலுத்திப் புகைப்படம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
ஸ்ரூடியோ உரிமையாளர்கள் புகைப்படம் எடுத்த பின்பாக online இல் அதாவது கணனி வலைப் பின்னல் ஊடாக உங்களுடைய புகைப்படத்தை தரவேற்றுவார்கள்.
அப்போது உங்களது பெயர், முகவரி,தொலைந்து போன தேசிய அடையாள அட்டையின் இலக்கம், பிறந்த திகதி,போன்ற விபரங்களைத் தரவேற்றம் செய்த பின்பாகக் கணனிப் பதிவின் பிரதி ஒன்றைத் தருவார்கள்.
அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
- பிறப்புச் சான்றிதழ் உங்களது கைவசம் வைத்திருக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு முந்தியதாகப் பெற்றுக் கொண்ட என்ற அவசியம் இங்கில்லை.
பெண்களாயின் திருமணப் பதிவுச் சான்றிதழை வைத்திருத்தல் வேண்டும்.ஆறு மாதங்களுக்கு முன்னர் பெறப்பட்ட சான்றிதழ் என்ற கட்டாயம் இல்லை.
சகல ஆவணங்களும் தமிழ் மொழியில் ஆவணங்களை வழங்கலாம்.
இவற்றைக் கிராம அலுவலரிடம் எடுத்துச் செல்லுதல் வேண்டும்.
- கிராம அலுவலரிடம் கோரிக்கைக் கடிதம் ஒன்றைப் பிரதேச செயலருக்கு முகவரியிட்டுக் கையளித்தல் வேண்டும்.
அதில் ஒரு மாதத்திற்கு முன்பாகத் தொலைந்து போன எனது தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாகப் புதிய தேசிய அடையாள அட்டை ஒன்றைப் பெற்றுக் கொள்வது தொடர்பான கோரிக்கை இருத்தல் வேண்டும். - கிராம அலுவலர் உங்களது கோரிக்கையைச் சிபாரிசு செய்து பெற்றுக் கொள்வார்.
தேசிய அடையாள தொலைத்தமைக்கான தண்டப் பணமாக ரூபா 500
( ஐநூறு ) அவரிடம் செலுத்த வேண்டும்.
அதற்குரிய பற்றுச் சீட்டை அவர் தருவார். அதனைப் புதிய தேசிய அடையாள அட்டை பெறுவதற்காகக் கிராம அலுவலரால் நிரப்பப்படும் விண்ணப்பப் படிவத்துடன் இணைத்தல் வேண்டும்.
- தொலைந்து போன தேசிய அடையாள அட்டையின் போட்டோ பிரதி, கைவசம் வைத்திருக்கும் சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச் சீட்டு ஆகியவற்றின் போட்டோ பிரதியைக் கிராம அலுவலரிடம் விண்ணப்பத்துடன் இணைக்குமாறு கொடுப்பது மிகவும் நன்று.
இதன் மூலமாகப் புதிய தேசிய அடையாள அட்டையைப் பெறுவத் இலகுவாக்கப்படும்.
- கிராம அலுவலர் உரிய ஆவணங்களை இணைத்து உரிய இடங்களில் உங்கள் கையொப்பங்களைப் பெற்று,உங்களது கைத்தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு அவற்றை உங்களிடம் தருவார்.
நீங்கள் Clear Bag ஒன்றை எடுத்துச் செல்வது நல்லது அதனுள் கிராம அலுவலரால் தரப்படும் விண்ணப்பப் படிவத்தை வைப்பது தொலைந்து போகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
- அரச உத்தியோகத்தர்கள் தமது பதவி குறித்த கடிதம் பெறத் தேவையில்லை. தற்போது தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு ( Passport ) ஆகியவற்றில் பதவி போடப்படுவதில்லை.
- புதிய தேசிய அடையாள அட்டைக்காக Clear Bag இனுள் இடப்பட்ட உங்களது ஆவணங்களை உங்களுடைய பிரிவின் பிரதேச செயலகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் .
அங்கு உங்களுடைய விண்ணப்பத்தைக் கையளியுங்கள். அவர்கள் உங்களுடைய விண்ணப்பத்தை Online இணையவழி ஊடாகத் தரவேற்றம் செய்து கொள்ளுவார்கள்.
பின்னர் கடித உறையில் வைத்துச் சீல் செய்யப்பட்ட உங்களது விண்ணப்பத்தை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.
அப்போது உங்களது விண்ணப்பத்தைப் பதிந்த பதிவேட்டின் பிரதி ஒன்றையும் தந்து கொள்வார்கள்.
அவை யாவற்றையும் பாதுகாப்பானதாக Clear Bag இனுள் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
- அரசாங்க வேலை நாள் ஒன்றில் நிறக்கக் கூடியதாகக் கொழும்புக்குச் செல்லுதல் வேண்டும்.
காலை 7.00 மணிக்கு நிற்கக் கூடியதாவும் மதியம் 11 மணிக்குப் பிந்தாமலும் பத்திரமுல்ல எனும் இடத்திலுள்ள ஆட்பதிவுத் திணைக்களம் செல்லுதல் வேண்டும்.
தரகர்கள் யாரும் தேவையில்லை. தமிழ் மொழியில் கதைத்து முழு அலுவல்களும் பார்க்கலாம்.
- எமது விண்ணப்பத்தை தரையுடன் இணைந்ததாக உள்ள முதலாவது அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
தொலைந்து போன தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாகப் புதியது பெறல், பழைய தேசிய அடையாள அட்டையைக் கையளித்துப் புதியதைப் பெறல் யாவற்றுக்கும் ஒரே கரும பீடம் தான்.
- அவர்கள் வரிசை முறையில் நின்று நீங்கள் நேரத்தைச் செலவிடாமல் விரைவாகச் செல்லும் வண்ணம் உரிய நடைமுறையை நேர்த்தியாக வைத்துள்ளார்கள்.
- சீல் செய்யப்பட்ட உங்களது விண்ணப்பத்தை உடைத்துத் தருமாறு உங்களிடமே கோருவார்கள்.
நீங்கள் அதனை உடைத்துக் கொடுக்க அவர் அவை யாவற்றையும் சரி பார்த்து விட்டு தொடர் இலக்கம் உடைய ரோக்கன் ஒன்றைத் தந்து 9 ஆம் மாடியில் B பிரிவிற்குச் செல்லுமாறு கூறுவார்.
ரோக்கன் பெற்றவுடன் சாப்பாடு ,சிற்றுண்டித் தேவைகள் இருப்பின் நீங்கள் அந்தப் பிரிவிலுள்ள சிற்றுண்டிச் சாலையிலேயே முடித்தல் நன்று.
ஏனென்றால் 9 ஆம் மாடியில் இரு மணி நேரம் வரையில் வரிசையில் உட்கார்ந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டது.
- காலை 9 மணிக்கு விண்ணப்பத்தைச் சமர்பித்த எனக்கு 571 வது இலக்க ரோக்கன் கிடைத்தது. 9 ஆம் மாடியில் ஆசனங்களில் அமர்ந்து முறைக்காகக் காத்திருந்தேன். தலா பத்துப் பத்து ரோக்கன்களாகத் தான் அழைத்தார்கள்.
11.25 மணிக்குத் தான் எனது முறை வந்தது. பசி,தாகத்தால் தவிக்க வேண்டி வந்தது.
அதனால் அலுவலகத்தின் முதலாம் கரும பீடத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் உங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.
19.காலை 11.30 மணிக்கு எனது விண்ணப்பங்கள் யாவும் சரிபார்க்கப்பட்ட பின்பாக 1000 ரூபா ( ஆயிரம் ரூபா ) கட்டணத்தை ஒரு நாள் சேவைக்காகச் செலுத்திப் பற்றுச் சீட்டைப் பாதுகாப்பாக வைத்திருந்தேன்.
- எமது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பற்றுச் சீட்டுத் தந்தவரிடம் எத்தனை மணிக்கு எனது தேசிய அடையாள அட்டை கிடைக்கும் என வினாவினேன்.
நேரத்தையும் தன் வசமுள்ள தொடர் இலக்கத்தையும் பார்த்து விட்டு பிற்பகல் 2.30 மணிக்கு இதே மாடியிலுள்ள A பகுதிக்குச் செல்லுங்கள்.
உங்களது கைத்தொலைபேசிக்குக் குறுந் தகவல் வரும் என்றார்.
- நானும் அதுவரையில் அருகாமை கட்டிடத்தில் உள்ள மத்திய அரசின் சமூக சேவைகள் அமைச்சுக்குச் சென்று தெரிந்த நண்பர்களுடன் பயனுடையதாகப் பொழுதைக் கழித்தேன்.
- பிற்பகல் 2.30 மணிக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் 9 ஆம் மாடிக்கு லிவ்ற் இல் சென்று A மண்டபத்தில் கதிரையில் அமர்ந்தேன்.
அவர்கள் ஒலி பெருக்கி மூலமாக தலா பத்துப் பத்து பேராக அழைத்து புதிய தேசிய அடையாள அட்டையினை வழங்குவதனையும் பார்த்தேன்.
இந்த அலுவலகத்தில் பெரும்பான்மையாகக் கடமையாற்றும் சிங்கள அலுவலர்கள் சீறல் சினப்பு இன்றி இன்முகத்துடன் கடமை புரிவதனைச் சகல இடங்களி
நன்றி சுதா
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்