Filed under: Allgemeines | Leave a comment »
அகவை 20 வதற்காய்
Posted on 23. திசெம்பர் 2019 by mandaitivu
அகவை 20 வதற்காய்
பூசைக்கு சிறப்பு சேற்கும்
புனிதத்தை தேர்ந்து எடுத்து
செயல் வடிக்க பெயராய் சூட்டி
செவ்வியை தேசம் எங்கும்
பத்து இரண்டு ஆண்டாய்
பறை முழங்கும் வலம்புரியே
தேவைகள் நிறைந்த வேளை
தேசத்தில் மலர்ந்த சேவை
பலவித தலைப்பு கொண்டு
பாகங்கள் பலதை இணைத்து
சாட்டையும்,சவுக்கும் இன்றி
சத்தமும்,யுத்தமும் இல்லா
புரிதலையும்,புகட்டலையும்
புலம்வாழ் மக்களுக்கு புகட்டி
சாதுரியம் கொண்டு சவாலை
சாமத்தியமாய் வென்று
சாதனை கொண்ட விழவில்
நிறைந்த சேவையும்
நீண்ட ஆயுழும் நிலைத்திட
வாழ்த்துரிய வாழ்த்துக்கள்
அருள்ஈசனும்,மண்டைதீவு இணையமும்
Filed under: Allgemeines | Leave a comment »