சீவி சிங்காரித்து சீருடையில்
சிறுவர்களாய் நாம் கூடி
பள்ளி சென்ற காலம் தொட்டு
பறந்து வந்த நாடுவரை
நட்புக்கு இலக்கணமாய்
நாம்மூவர் வாழ்ந்திருந்தோம்
அன்று அம்மன் மணல் அமர்ந்து
ஆரவாரமாய் கூடும் நன்பர்கள் கூடி
நம்ம நலன் நாட்டு நலன்
நலிவுற் றோர் நலன் என்றெல்லாம்
எண்ணக் குதிரைகள் ஏறி
எண்ணம் போல் பயணிப்போம்
ஆழுக்கு ஆழ் ஒன்று சொல்லி
அத்திவாரங்களும் போட்டருந்தோம்
நாட்டு நிலை நம்மநிலை எல்லாம்
நினைவுகளை சிதறடிக்க
நாட்டையே இழந்து ஓடினோம்
காலம் கனியும் நேரம் முதுமை
கால் ஊன்ற கற்பனைகள்
கைவிட்ட நிலையில் ஏதேனும்
கைகூடாதா என்ற ஏக்கம்
முயற்சியின் பலனால் ஒருசில
முடித்து வைக்க முயன்றவர்
எல்லோர்கும் நன்றி சொல்வோம்
எல்லாம் நனவாகும் போது
ஓங்கி நின்ற உனது செயல்
ஓயாது பயனிப்போம் ஒரேகுடையில்
என்றெல்லாம் உரைத்து விட்டு
எங்கே நீ சென்று விட்டாய்
உனை இழந்த தவிப்போடு
உலாவுகின்றோம் நாம் இங்கே
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்