அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய பணியின் 559 வது தடவையாக நடைபெற்ற சிறப்பு அறப்பணி நிகழ்வு!
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகக் கொண்டவரும், மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலய பஞ்சதர்ம கத்தாக்களில் ஒருவருமாகிய அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின்
6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு-15.04.2019 செவ்வாய்க்கிழமை இன்று-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும்-முதியோர்களுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டதுடன் மேலும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து விடுவிக்கப்பட்ட பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல மண்டைதீவு கண்ணகை அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி….
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்