அன்பான உறவுகளுக்கு மண்பறிபோகும் தருணத்தை மாற்றி அமைப்போம் வாரீர்
J/07 மண்டைதீவு கிழக்கு கடற்படை முகாம் அமைந்துள்ள தனியார் காணி சுவீகரிப்பு தொடர்பாக வரும் 11.04.2019 காலை 09 மணிக்கும் தொடர்ந்து வரும் நாட்களிலும் காணி அளவிடும் ஞபணி இடம்பெறும் என காணிச் சொந்தக்காரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே ஆன காரணங்களை எடுத்தியம்பி அவர்களுடன் இணைந்து காணி சுவீகரிப்பினை தடுப்பதற்கான வழிமுறைகளை கையாள்வதற்கு வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் ,பா . மன்ற உறுப்பினர்கள், முன்னால் மாகாணசபை உறுப்பினர்கள் , எமது பிரதேச பொது ஸ்தாபன பிரதிநிதிகள் ஆகியோரின் பங்களிப்பைக் கோரியுள்ளோம். அந்த வகையில் காணி உரிமைக்காரர்களையும் , அவர்கள் சார்ந்த அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் மற்றும் மண் பற்றாளர்களையும் , அன்றைய தினம் காலை 08 மணிக்கு முன்னதாக வேப்பந்திடல் அருள் மிகு முத்துமாரி அம்பாள் ஆலய முன்றலில் ஒன்று கூடுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
அன்பன்
அருளானந்தம் ஸ்ரீபத்மராசா
( உறுப்பினர் வேலணைப் பிரதேச சபை )
05.04.2019.
மண்டைதீவு கடற்படை முகாமிற்காக அவர்கள் சுவீகரிக்கும் நிலம், காலம் காலமாக எம்மவர்களின் ஜீவாதார பூமி .அதை இழந்தால் மண்ணை நம்பும் நாம் யாரும் அங்கு வாழமுடியாது. எனவே அன்பான உறவுகளே எம் உந்துதல் மூலமாகவும் அங்கிருக்கும் உறவுகளை இந்த எதிர்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வைத்து மண்ணை மீட்பதற்கு உதவுவோம்.
Somu saba
காணிகளின் விடிவிற்பிற்காய் அன்பான உறவுகளின் கவனத்திற்கு ஒற்றுமையாய் நாம் கூடி நம் எதிர்பை காட்டினால்தான் ஏதேனும்
விமோசனம் கிடைக்கும் எனவே தயவு செய்து காணிக்காறர் மாத்திரம் கூடி பயன் அற்று போகாமல் எதிரவரும் நாளிள் எல்லோரும் அளைப்பை எதிர்பாராது தானாகவந்து இணைந்து வாழவைத்த நிலங்களை மீழப்பெற வாரீர் தலையாயபிணக்கு தீர்து
தார்மீகபயன் பெற உறவுகளுக்காகவும் உங்களுக்காகவும்
விழிபுறுங்கள். நடுவீட்டு துரோகிகளைவிரட்ட எதிர்வரும் 11,04,19இல் பலனாக்கி மகிழுங்கள் அரை நாளை நன்றி
Sri ravi
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்