காத்திகேயன் கட்வித்த
சாலை பாடசாலை அங்கே
காலடியை எடுத்து வைத்த
ஐந்து வயது பாலன் இவன்
இன்று போல் இருக்கு அந்த நாளை
சரஸ்வதிக்கு பூசை நல்ல நாளில்
சிவப்பிரகாசம் என்னும் ஆசான்
வாரி எனை அணைத்து கதைகள்
சொல்லி தன்மடியில் இருத்தி
தாம்பாழ தட்டதனில் அரிசிதனை
பரப்பி ஆட்காட்டி விரல் கொண்டு
ஆனாவை எழுத வைத்த நன்நாள்
நான் மதிகொள்ள அரிச்சுவடை
அடிஎடுத்த முதல் முதல்நாள்
அன்று தொட்டு இன்றுவரை
அழியாத ஒளி நாடாவாய் இன்றும்
என் மனமகலா பதிவு தனை
ஒரு சிலவற்றை உங்களுடன்.
நீண்ட நெடிய உடல் கம்பீர நடை
கனிவான பேச்சு கண்டிப்பில்
மாறும் வீச்சு கைநீட்டச் சொல்லி
பிரம்படி கொடுக்கும் அந்த
நல்ல ஐயா வாத்தியார்
கணக்கு மரிய தாஸ் இவர்
கண்டிப்பில் வேறு விதம்
கற்பித்தலின் பின்பு எழுப்பி
கேள்வி தனை கேட்டு நிற்பார்
பதில் பிளைக்கு ஆண்களுக்கு
பெண்களும்,பெண்களுக்கு
ஆண்களுமாய் குட்டிவிப்பார்
கீதபொன்கலன், லலிதா,
தர்மலிங்கம்,க,சிவப்பிரகாசம்,
அருந்ததி,ஞானமணி,இன்னும்
பல ஆசான்களும்,ஆசிரியைகளும்
எங்களூர் இளையோராய்
சுதா,அவர் பாரியார் றாயேஸ்வரி
என என்நினைவிற்க்கு
உள்பட்டோரைபதிவாக்கி
பால் மாவும் பணிசும் விஸ்கற்றும்
எல்லாம் அழியா நினைவுகளாய் இன்றும்
எம்முடன் இருக்க பளையோரும்
பாடசாலையும் இன்று நம்முடன்
இல்லை உயிர் இழப்புக்கள் நியதி
என்றாலும் பாடசாலையின்
இழப்பை எப்படி கூறுவது
யாழ் நூல்நிலையத்துக்கு
இணையானது இனவாத
அழியாச் சின்னமாய் புனர் அமைப்பும்
இன்றி பாரமுகத்துடன் இன்றும்
புனரமைப்பு இல்லை என்ற ஏக்கம்
தான் இந்த ஆக்கம்.
அருள் ஈசன்.
ஆர்வலர் மேலும் எளுதவும் கவனம் எடுத்து காரியசித்தியாக்க முடிந்தவர்கள் முயலுங்கள் தாழ்தையுடன் வேண்டுகிறோம்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்