புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தை மற்றும் மண்டைதீவை சார்ந்த பிரபாகரன்( Global upholstery) சரவணைகிழக்கை சார்ந்த கௌரி அவர்களின் அன்பு மகன் ரஜீத் அவர்கள் (வயது 25) 11 March, 2019 திங்களன்று அகால மரணம்
அடைந்துவிட்டார் என்ற மரணச்செய்தி மிகவும் ஆழ்ந்ததுயரையும் உளவியல் ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தியி ருக்கிறது.
Toronto கனடாவை பிறப்பிடமாகவும் Bradford ஐ வாழ்விடமாகவும் கொண்ட ரஜீத் பிரபாகரன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுவதுடன் 🙏🙏🙏 இத்துயர்
இழப்பின் மூலம் நீங்காத்துயர் கொண்டிருக்கும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்து
கொள்வதுடன் இத்துயர மரணம் போல் இனி வரும் காலங்களில் வேறு மரணங்கள் நிகழாதிருக்க எம்சமுதாய கட்டமைப்பை பலப்படுத்தி விழிப்புணர்வு கொள்வோமாக.
ரஜீத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் குறித்தமேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
ஓம் சாந்தி. சாந்தி. சாந்தி💐💐💐.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்