
யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். இல 16, மடம் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத் துயரம் கொண்டேன்
ஐயா உம்
ஆருயிர்தனை இழந்து
ஆறாண்டாகியும்
ஆறுதல் அடையா எம் மனம்
ஆற்றலற்ற கடிகார ஊசல் போல்
அல்லாடுகிறது ஐயா
கண்னெதிரில் காண்போம் – இன்று
கண்ணை மூடி நினைக்கின்றோம்
கண்ணிருந்தும் கடவுள்
உமை காண வரம் கொடுக்கவில்லையே
என்னுயிரான உமக்கு
இவ் ஆறாம் ஆண்டில்
எம் மன உருகலை
மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்!!!
ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
தகவல்: குடும்பத்தினர்
Filed under: Allgemeines | Leave a comment »