![]() பிறப்பு : 6 டிசெம்பர் 1928 — இறப்பு : 19 யூன் 2018 யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா சபாபதிப்பிள்ளை அவர்கள் 19-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை(இராசதுரை) அவர்களின் அன்பு மனைவியும், கமலாதேவி, இரட்ணகுமார்(GS, கனடா), விஜயகுமார், ஜெயக்குமார், உதயகுமார், காலஞ்சென்றவர்களான சந்திரகுமார், லீலாவதி, விமலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற கனகநாதன், புனிதவதி, உதயராணி, காஞ்சனா, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான தியாகராசா, நடராசா, சோதிநாதன், சுப்பிரமணியம், சங்குவதி, புனிதவதி, விநாயகமூர்த்தி, தில்லையம்மா, கைலாயநாதன், சண்முகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2018 வியாழக்கிழமை அன்று கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் |
தொடர்புகளுக்கு | ||||||
|
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்