சண்முகரட்ணம் டார்வின்
கொக்குவில் இந்துக்கல்லூரி, சென்ஜோன்ஸ் மாணவன்
(2017 A/L)
பிறப்பு – 13.02.1998 இறப்பு – 15.11.2017
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் கொக்குவில்மேற்கு தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகரட்ணம் டார்வின் அவர்கள் (15.11.2017) புதன்கிழமை அகாலமரணம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அமரர் சண்முகரட்ணம் வல்வாம்பிகை அவர்களின் அன்பு மகனும் டயானந்தா, திரியம்பகியின் அன்பு சகோதரனும், சிவசரணம் – யோகாம்பிகையின் பாசமிகு பேரனும், சந்திரபாலு – மகாராணியின் மருமகனும், பரஞ்சோதிநாதன் – சந்திரவதனாவின் சிறியமகனும், சத்தியசீலனின் மரு மகனும், சக்திதாஸன் – மங்களா (டென்மார்க்) மருமகனும், றஜீவ், கிரி, விஜய், கௌரி, மதுரா (டென்மார்க்) ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் இறதிக்கிரியைகள் 17.11.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்.
077 774 3489
(டயானந்தா)
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்