யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி உமாபதி புஸ்பலதா அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(தம்பிஐயா), யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும் வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், உமாபதி அவர்களின் பிரியமான மனைவியும்,
கல்யாணி(சுவிஸ்), சசிதரா(ஆசிரியை- கோண்டாவில் இராமகிருஸ்ணா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற பரமேஸ்வரி, விஜயலட்சுமி, அரங்கநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இளங்கோ(சுவிஸ்),செந்தூரன்(முன்னாள் முகாமையாளர் – வேலணை கிளை ப. நோ. கூ. சங்கம்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற கனகரத்தினம், கனகலிங்கம்காலஞ்சென்ற உலகேஸ்வரி, விஜயலட்சுமி, காந்தமலர், நடனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், அபிரா(சுவிஸ்),அக்ஷயா(சுவிஸ்), ஐஸ்வரியா(சுவிஸ்), அபிஷயன், அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மனியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்இஉறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வன்னியசிங்கம் வீதி,
கோண்டாவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்