திரு கணபதிப்பிள்ளை நடராசா |
(முன்னாள் சேர்மன்) |
மண்ணில் : 30 மார்ச் 1939 — விண்ணில் : 17 ஒக்ரோபர் 2017 |
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராசா அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தில்லைவனம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கெங்காதரன் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், அறிவழகன்(அறிவு- பிரான்ஸ்), அன்பழகன்(பிரான்ஸ்), மதியழகன்(மதிபோட்டோ- பிரான்ஸ்), ரவியழகன்(ரவி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான ராசரட்ணம், வியாழம்மா, காமாட்சி, கனகம்மா மற்றும் பரமானந்தம், சோதிலட்சிமி, சரஸ்வதி, முத்துலட்சிமி் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சத்தியசீலி(பிரான்ஸ்), யூஜினி(பிரான்ஸ்), துர்க்காதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற காங்கேசன், காமலாசினி(பங்கசம்), லோகேஸ்வரி, பூங்கோதை, கலாவதி, காலஞ்சென்ற ரஞ்சினி, சிவகுமார், தயாளன், விமலன், அம்பிகை(சூரி), அம்பிகைபாகன், மங்கலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சயந்தன், அனுசியன், ஆகாஸ், மதுசா, அபினாஸ், ரதுயா, வினுயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
மனைவி, மகன்மார்கள் |
|
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்