ஆப்பிள் சீடர் வினிகர் குடிப்பதால் நம் உடலிற்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது.
ஆனால் மருத்துவர்களின் முறையான அனுமதியின்றி இதனை தொடர்ந்து பயன்படுத்துவதனை தவிர்க்கவும்.
இதனை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
- ஆப்பிள் சீடர் உடலில் செரிமானத்தை துரிதப்படுத்தும், தூக்க கலக்கம் நீங்கி புத்துணர்ச்சி தந்து உடலை சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
- ஆப்பிள் சீடர் குடித்ததும் வயிற்றுக்கு எரிச்சல் தந்து கெட்ட கொழுப்புகளை நீக்க உதவுகிறது.
- காலையில் ஆப்பிள் சீடர் வினிகரை குடித்தால் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும், கார்போஹைட்ரேட் செரிமானம் ஆவதை தாமதப்படுத்தும்.
- உயர் இரத்த அழுத்தம் குறையும், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியை அதிகரிக்கும். இது இரத்த நாளங்களுக்கு ஓய்வு அளித்து சிறப்பாக செயல்பட உதவும்.
- ஆப்பிள் சீடர் வினிகர் வயிற்று பசியை கட்டுப்படுத்தும், மேலும் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் உடல் பொலிவை தரும்.
- உடலில் ஆன்டிபாக்டீரியல் பண்பை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலின் அமைப்பை கட்டுப்படுத்தி செரிமான வேலையை அதிகரிக்கும்.
- நீங்கள் கால் பிடிப்புகள் பாதிக்கப்பட்டிருந்தால், ஆப்பிள் சீடர் வினிகருடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து காலையில் குடித்து வாருங்கள். வினிகரில் உள்ள பொட்டாசியம் கால் பிடிப்புகளை சரிசெய்யும்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்