எல்லா சமயத்தவரும் இறை மக்களே என்று
எண்ண வேண்டும். அனைத்துக் கோயில்களில்
இருப்பதும் ஓர் இறைவனே என்று நம்ப வேண்டும்.
எங்கெல்லாம் வழிபாடு நடைபெறுகிறதோ,
அங்கே அதுவும் அவன் வழிபாடே என்று முழு
நம்பிக்கையோடு வழிபடவேண்டும்.
–
‘தன் பெண்டு தன் பிள்ளை’ என்று எண்ணிப்
பணம் சேர்க்கும் பண்பில் வளராமல், இறைவன்
கொடுத்த வளம் அவன் மக்களுக்கும் என்று எண்ணி
செயல்பட்டால் உள்ளம் அவன் கோயிலாகிறது.
–
அந்த கோயிலுக்குள் தீய சிந்தனை என்னும் அழுக்கு
ஒருபோதும் சேராது… மன அழுக்கு இல்லாத உடலில்
கடவுள் குடியிருப்பார்.
–
அவர் குடியிருக்கும் கோயிலுக்கு நலமும் வளமுமே
வாய்க்கும். அத்தகைய வளத்தோடு வாழ்வதற்கான
வழிகளை நாமும் தேடுவோம்
> பாப்பையா.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்