ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் ஆண்டவன் அடியில்
12, 04. 1927 22. 04. 2012
திதி 27.04.2017.
மண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் montreux சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வேலுப்பிள்ளை நடராசா பாலசுந்தரம் .
(முன்னாள் பல . நோக்கு கூட்டுறவு ச் சங்க முகாமையாளர் .)
(முன்னாள் மண்டைதீவு கிராமசபை அங்கத்தவர் .)
காலமெல்லாம் எம்முடன் கனிவுடன் வாழ்ந்திர்கள்
காலனவன் விதித்த விதிதனை விலக்க (மாற்ற) முடியவில்லை
ஐந்தாண்டு காலம் உங்களை நாம்
உறவால் பிரிந்து உள்ளம் வாடுகின்றோம் ஜயா
காலம் கரைந்தோடியது — எங்கள்
கனவெல்லாம் நனவாகியது அதைக்காண
நீங்கள் இல்லையே — எம்முடன்
உங்கள் நினைவுகள் நிழலாகத் தொடர்கின்றது ஐயா
பாசமாய் இருந்தோம் பரிவோடும், பணிவோடும் உங்களை
பார்த்தோம் அறுபது மாதங்கள் ஆனதே இன்றோடு —
பார்க்காமல் தவிக்கின்றோம் பாசத்திற்காய் ஏங்குகின்றோம்
மறவோம் நாம் உங்களை மறந்தும் எம் வாழ்நாளிலே.
அன்பிலே சிறந்தவராய் மண்ணிலே உதித்தீரே
பாசத்தை ஊட்டி எங்களை சுவாசிக்க வைத்தீரே
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் — ஐயா
உங்களை போல் ஓர் உறவு வருமா ஐயா ???
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும் மனைவி , பிள்ளைகள் ,மருமக்கள் , சகோதரர்கள் , பெறாமக்கள் , பேரப்பிள்ளைகள் .
தகவல்
மகன் -பாலேந்திரா (ராசன் ) சுவிஸ் 021. 964 16 37.
Filed under: Allgemeines | Leave a comment »