மிதுனம் (மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்)
நேருக்குநேராகப் பேசுபவர்களே!
ராசிக்கு 6-ல் சனி வலுவாக இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், பல சாதனைகளைச் செய்வீர்கள். இழுபறியான வேலைகள் விரைந்து முடியும். வழக்கு களில் வெற்றி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் நீங்கும். எனினும், செவ்வாய் 12-ல் இருப்ப தால், சகோதரர்களுடன் மன வருத்தம் ஏற்படலாம்.வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் செலவுகள் அதிகரிக்கும். ஆவணி முதல் மகிழ்ச்சி உண்டாகும்.
1.9.17 வரை குரு 4-ல் இருப்பதால், அலைச்சலும் ஏமாற்றங்களும் உண்டு. தாயாரின் உடல்நலன் பாதிக்கும். 2.9.17 முதல் குரு 5-ல் அமர்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். கௌரவப் பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். ஆனால், 14.2.18 முதல் 13.4.18 வரை குரு வக்கிரகதியிலும் அதிசாரத்திலும் 6-ல் சென்று மறைவதால், பணத் தட்டுப்பாடும் சிறுசிறு கடன் பிரச்னைகளும் வந்து நீங்கும்.
18.12.17 வரை சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
ஆனால், 19.12.17 முதல் சனிபகவான் 7-ல்அமர்வதால், கணவன் – மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். வாழ்க்கைத் துணைவருக்கு சிறுசிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம்.
26.7.17 வரை ராகு 3-ல் தொடர்வதால், தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிநாடு, வெளி மாநிலங்களில் உள்ளவர்களால் ஆதாயம் உண்டாகும். ஆனால், கேது 9-ல் இருப்பதால், தந்தை வழி உறவினரோடு சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். 27.7.17 முதல் ராகு 2-லும் கேது 8-லும் தொடர்வதால், கணவன் – மனைவிக்குள் கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால், உடனே மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.மற்றவர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
15.10.17 முதல் 2.12.17 வரை செவ்வாய் 4-ல் அமர்வதால், தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். 10.3.18 முதல் 13.4.18 வரை செவ்வாயும் சனியும் 7-ல் அமர்வதால், வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். சொத்து விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
வியாபாரத்தில் செப்டம்பர் முதல் பற்று, வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். ஆனால், 19.12.17 முதல் சனி பகவான் 7-ல் மறைவதால், பங்குதாரர்களுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கூட்டுத் தொழிலில் ஈடுபட வேண்டாம். பெரிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை வியாபாரம் நன்றாக நடக்கும். உணவு, துணி, ஏற்றுமதி – இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். செப்டம்பர் முதல் குரு பகவான் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு, வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.
மாணவ-மாணவிகள் திறமை களை வளர்த்துக்கொள்வார்கள். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்த்த பாடப் பிரிவுகளில்- விரும்பும் பள்ளி, கல்லூரி களில் சேரும் வாய்ப்பு உண்டு. உங்களால் பெற்றோருக்கு புகழும் கௌரவமும் கூடும்.
கலைத் துறையினரே! உங்களுடைய யதார்த்தமான படைப்பு கள் அனைவராலும் பாராட்டப்படும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. சம்பள பாக்கி கைக்கு வரும். புகழ்பெற்ற கலைஞர் களின் ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டின் முற்பகுதி செலவுகளையும், ஆரோக் கியக் குறைவுகளையும் தருவதாக அமைந்தாலும், வருடத்தின் மையப் பகுதி முதல் குடும்பத்தில் மகிழ்ச்சியை யும் பணவரவையும் உண்டாக்கும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்