Posted on 21. ஏப்ரல் 2017 by mandaitivu
மண்டைதீவு 3ம் வடடாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா செல்லையா அவர்கள் 20.04. 2017. அன்று காலமானார் அன்னாரின் பூதவுடல் 21.04.2017. அன்று மண்டைதீவு தலைக்கிரி இந்து மைதானத்திற்கு எடுத்து தகனம் செய்யப்பட்ட்து என்பதை உறவினர் உற்றார் நண்பர்கள் அனைவருக்கும் தெரியபடுத்துகின்றோம் .
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 21. ஏப்ரல் 2017 by mandaitivu
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)
மற்றவர்களின் நலனுக்காக உழைப்பவர்களே!
உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான குரு பகவானின் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சந்திரன் 4-ல் இருக்கும்போது புது வருடம் பிறப்பதால், வீடு மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. வீடு வாங்கவும் கட்டவும் வங்கிக் கடன் கிடைக்கும். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 21. ஏப்ரல் 2017 by mandaitivu
மிதுனம் (மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்)
நேருக்குநேராகப் பேசுபவர்களே!
ராசிக்கு 6-ல் சனி வலுவாக இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், பல சாதனைகளைச் செய்வீர்கள். இழுபறியான வேலைகள் விரைந்து முடியும். வழக்கு களில் வெற்றி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் நீங்கும். எனினும், செவ்வாய் 12-ல் இருப்ப தால், சகோதரர்களுடன் மன வருத்தம் ஏற்படலாம்.வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் செலவுகள் அதிகரிக்கும். ஆவணி முதல் மகிழ்ச்சி உண்டாகும். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 21. ஏப்ரல் 2017 by mandaitivu
கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்)
வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்களே!
சந்திரன் 6-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், திடீர் பயணங்கள் உண்டு. ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், உங்கள் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 21. ஏப்ரல் 2017 by mandaitivu
மேஷம் (அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்)
ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர்களே!
சுக்கிரன் ராசிக்கு 12-ல் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் ஹேவிளம்பி புத்தாண்டு பிறப்பதால், வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தேவையான வங்கிக் கடனும் கிடைக்கும். குருபகவான் 1.9.17 வரை 6-வது வீட்டில் மறைந்திருப்பதால், செலவுகளும் கடன் பிரச்னைகளும் இருந்தபடி இருக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம், வெளிநாட்டுப் பயணம் போன்ற விஷயங்கள் சற்று தடைபட்டே முடியும். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 21. ஏப்ரல் 2017 by mandaitivu
தொலைதூர சிந்தனை கொண்டவர்களே!
சந்திரன் 2-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிநாடு, வெளி மாநிலங்களுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளால் கௌரவம் உயரும். மகளின் திருமணத்தை நல்லபடி நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். குலதெய்வப் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »