
2.உங்க கோபம்..எல்லோரையும் ..உங்க கிட்டே இருந்து அந்நியப்படுத்தி விடும்.
3.எண்ணங்கள் தான்.. வாழ்க்கை..நம் எண்ணங்கள் தான்..நம் குணத்தை..நம் வாழ்வை தீர்மானிக்கின்றன.
4.தீபத்தின் ஒளியில்..திருக்குறளும் படிக்கலாம்…ஒரு ஊரையும் கொளுத்தலாம்.
5.வளைஞ்ச மூங்கில் பல்லக்கு ஆகும்..வளையா மூங்கில் பாடையாகும்.
6.நமக்கு தேவையில்லாததை வாங்க ஆரம்பிச்சா..நம்ம கிட்டே இருக்கிற தேவையானதை விற்க வேண்டி இருக்கும்
7.வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..செலவுக்கு ஏத்த வரவுன்னு அலையக் கூடாது.
8.உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பாருங்கள்..தேவைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்..வாய்ப்புகளை கண்டு பிடியுங்கள்..அவற்றை வெற்றியாக்கிடுங்கள்.
9.லட்சியத்தை மறந்துட்டு..மனுஷ உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
10.எல்லாம் உனக்குத் தெரியும் என்ற இறுமாப்பு வேண்டாம்…ஆனான பட்ட ஔவைக்கே சுட்டப்பழத்தை சொன்னவன் யாதவ சிறுவன்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்