• ஏப்ரல் 2017
    தி செ பு விய வெ ஞா
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,394 hits
  • சகோதர இணையங்கள்

விட்டு கொடுக்காதே…..

kathal 1நம்மைச் சுற்றிலும் விசுவாசமுடையவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். விசுவாசம் என்றால் என்ன பொருள் என்று அவர்களது வாழ்க்கை நமக்குக் கூறுகின்றது. நாமும் அவர்களைப்போல் வாழவேண்டும். நம் முன் நடக்கும் பந்தயத்தில் நாமும் பங்கெடுத்து ஓடவேண்டும்.

ஐந்தாம்  ஆண்டு நினைவஞ்சலி .

ஐந்தாம்  ஆண்டு நினைவஞ்சலி

nadarasa 2
அன்னை மடியில்                      ஆண்டவன் அடியில்
12, 04. 1927                                    22. 04. 2012
திதி  27.04.2017.
மண்டைதீவு 6ம் வட்டாரத்தை  பிறப்பிடமாகவும் சுவிஸ் montreux சை  வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்  வேலுப்பிள்ளை நடராசா  பாலசுந்தரம் .
(முன்னாள் பல . நோக்கு  கூட்டுறவு ச் சங்க  முகாமையாளர் .)
(முன்னாள் மண்டைதீவு கிராமசபை அங்கத்தவர் .)

 
காலமெல்லாம் எம்முடன் கனிவுடன் வாழ்ந்திர்கள்
காலனவன் விதித்த விதிதனை விலக்க (மாற்ற) முடியவில்லை
ஐந்தாண்டு காலம்  உங்களை நாம்
உறவால்  பிரிந்து உள்ளம் வாடுகின்றோம்  ஜயா

 

காலம்  கரைந்தோடியது — எங்கள்
கனவெல்லாம்  நனவாகியது  அதைக்காண
நீங்கள் இல்லையே — எம்முடன்
உங்கள்  நினைவுகள்  நிழலாகத் தொடர்கின்றது  ஐயா

 
பாசமாய்  இருந்தோம்  பரிவோடும், பணிவோடும்  உங்களை
பார்த்தோம்  அறுபது  மாதங்கள்  ஆனதே  இன்றோடு —
பார்க்காமல்  தவிக்கின்றோம்  பாசத்திற்காய்  ஏங்குகின்றோம்
மறவோம்  நாம் உங்களை  மறந்தும் எம் வாழ்நாளிலே.

 
அன்பிலே  சிறந்தவராய் மண்ணிலே  உதித்தீரே
பாசத்தை  ஊட்டி  எங்களை சுவாசிக்க  வைத்தீரே
ஆயிரம்  உறவுகள்  இருந்தாலும் — ஐயா
உங்களை போல்  ஓர்  உறவு  வருமா ஐயா ???

 
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும்  மனைவி , பிள்ளைகள் ,மருமக்கள் , சகோதரர்கள் , பெறாமக்கள் , பேரப்பிள்ளைகள் .
தகவல்
மகன் -பாலேந்திரா (ராசன் )  சுவிஸ் 021. 964 16 37.

மரண செய்தி திருமதி தர்மநாயகம் புவனேஸ்வரி (புவனம் )

puvanam akka

வெள்ளை மனம் வேண்டும்!

திருவள்ளுவர் சொன்னபடி,”கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக…’ என்பது, வாழ்வில் மிக, மிக முக்கியம். படிப்பதன் நோக்கம், பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. “அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்…’ என்று, முதல் வகுப்பில், ஆசிரியர் கற்றுக் கொடுத்ததை, கடைசி வரை கடைபிடிப்பவனே நிஜமான கல்வியாளன். இதற்காகவே, சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுகிறோம்.

Continue reading

உன்னை குறை கூறும் பலருக்கு…..

உன்னை குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு

—————————–

வெற்றியை விட தோல்விக்கு பலம்
அதிகம்
வெற்றி சிரித்து மகிழ வைக்கும்
தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்

இன்றைய மரண செய்தி

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 3ம் வடடாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா செல்லையா அவர்கள் 20.04. 2017. அன்று காலமானார் அன்னாரின் பூதவுடல் 21.04.2017. அன்று மண்டைதீவு தலைக்கிரி இந்து மைதானத்திற்கு எடுத்து தகனம் செய்யப்பட்ட்து என்பதை உறவினர் உற்றார் நண்பர்கள் அனைவருக்கும் தெரியபடுத்துகின்றோம் .

தமிழ் புது வருட பலன்கள் கடகம் ராசிக்கு …

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

மற்றவர்களின் நலனுக்காக உழைப்பவர்களே!

உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான குரு பகவானின் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு  பிறப்பதால், நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சந்திரன் 4-ல் இருக்கும்போது புது வருடம் பிறப்பதால், வீடு மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. வீடு வாங்கவும் கட்டவும் வங்கிக் கடன் கிடைக்கும். Continue reading

தமிழ் புது வருட பலன்கள் மிதுனம் ராசிக்கு …

மிதுனம் (மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்)

நேருக்குநேராகப் பேசுபவர்களே!

ராசிக்கு 6-ல் சனி வலுவாக இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், பல சாதனைகளைச் செய்வீர்கள். இழுபறியான வேலைகள் விரைந்து முடியும். வழக்கு களில் வெற்றி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் நீங்கும். எனினும், செவ்வாய் 12-ல் இருப்ப தால், சகோதரர்களுடன் மன வருத்தம் ஏற்படலாம்.வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் செலவுகள் அதிகரிக்கும். ஆவணி முதல் மகிழ்ச்சி உண்டாகும். Continue reading

தமிழ் புது வருட பலன்கள் ரிஷிபம் ராசிக்கு

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்)

வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்களே!

சந்திரன் 6-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், திடீர் பயணங்கள் உண்டு. ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், உங்கள் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். Continue reading

தமிழ் புது வருட பலன்கள் மேஷம் ராசிக்கு

மேஷம் (அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்)

ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர்களே!
சுக்கிரன் ராசிக்கு 12-ல் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் ஹேவிளம்பி புத்தாண்டு பிறப்பதால், வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தேவையான வங்கிக் கடனும் கிடைக்கும். குருபகவான் 1.9.17 வரை 6-வது வீட்டில் மறைந்திருப்பதால், செலவுகளும் கடன் பிரச்னைகளும் இருந்தபடி இருக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம், வெளிநாட்டுப் பயணம் போன்ற விஷயங்கள் சற்று தடைபட்டே முடியும். Continue reading