• மார்ச் 2017
    தி செ பு விய வெ ஞா
    « பிப்   ஏப் »
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,094,537 hits
  • சகோதர இணையங்கள்

இது நகைச்சுவைக்காக …

kathal01

1.கணவன்:
என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப
போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு
இருக்க
வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து
சாப்பிடலாம்!

மனைவி:
இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா
சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி
போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க
அதுக்குதான்.

# இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.

——————————————
2. கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு,
ஆம்லெட் தொட்டுக்க

கணவன்: அவ்ளோதானா?

மனைவி: முடியலைங்க!

#இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

—————————————–

3. கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?

மனைவி:
இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய
வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

#இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!

—————————————–

4. கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம
ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு
தெரியும்லே?

மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன?
எல்லாத்தையும் நானே செய்யனுமா?

# இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

——————————————-

5.கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய
கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது
சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய?சும்மா குறை
சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

# இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!

——————————————-

6.கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….
நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.
ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து
வாய்ச்சிருக்கு!

# இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!

——————————————-

7.கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று
வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு
சாப்பிடுங்க!

# இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!

————————————————

8.கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல்
செய்யனும்?

மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா?
எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க…!

—————————————-

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: