கொட்டாவி விடுவது ஆபத்தா? அதனால் கண்ணீர் வருவது ஏன்?

இந்தக் கொட்டாவியானது, நமக்கு வரும் போது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தொடரும் இதனால் கொட்டாவியை தொற்றுச் செயல் என்று கூட கூறுவார்கள்.
கொட்டாவி வருவதற்கான காரணம் என்ன?
கொட்டாவியானது அதிக சோர்வு, சலிப்பு, மன அழுத்தம் மற்றும் ஆர்வமின்மை போன்ற காரணத்தினால் ஏற்படுகிறது.
நாம் சோர்வாக இருக்கும் போது, நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் குறைவாக கிடைப்பதால், மூச்சு விடுவது மெதுவாக இருக்கும்.
அந்த நேரத்தில் கொட்டாவி விடும் போது, நமது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதுடன், ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கார்பன்-டை-ஆக்ஸைடு உடலில் இருந்து வெளியேற்றப் படுகின்றது.
இயல்பு நிலையில் இருக்கும் போது, இப்படி கொட்டாவி விடுவதில் எவ்வித பாதிப்புகளும் இல்லை.
இதுவே வாயை பெரிதாக பிளந்து, சத்தத்துடனும் கூடிய கொட்டாவி அடிக்கடி வந்தால், அது நுரையீரல் பிரச்னையாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இது குறித்து அறிவியல் பூர்வமான தகவல் சேகரிப்பு இன்னும் முழுமை அடையவில்லை.
கொட்டாவி விடும் போது கண்ணீர் வருவது ஏன்?
கொட்டாவி விடும் போது அதிகப்படியான அழுத்தம் காரணமாக, கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்பட்டு, கண்களின் ஓரத்தில் நீர் வருவதற்கு காரணமாக உள்ளது.
இதனால் தான் கொட்டாவி விடும் போது, கண்களை மூடிக் கொள்ளும் இயல்பு நிலை கூட ஏற்படுகிறது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்