• பிப்ரவரி 2017
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,766 hits
  • சகோதர இணையங்கள்

உங்களைப்பற்றி நீங்களே தெரிந்து கொள்ளுங்க…..

kathal01இங்கு யாருமே முழுமையாக நல்லவர்களாக இருக்க முடியாது, கெட்டவர்களாகவும் இருக்க முடியாது. அனைவரும் இரண்டும் கலந்த கடவுள் பாதி, மிருகம் பாதி என்ற இனம் தான். கெட்ட குணாதிசயங்கள் என்பது நாச வேலைகள் செய்வதோ, கொலை, கொள்ளையடிப்பதோ இல்லை.

பல நேரங்களில் நாம் தேவையின்றி வெளிப்படுத்தும், கோபம், பேராசை, சுயநலம் போன்றவை தான் இங்கு தீய குணாதிசயங்கள் என குறிப்பிடப்படுகிறது. நாம் பெரிதாக செய்யும் தவறுகளை விட, நமக்கே தெரியாமல் நம்முள் நாம் கடைபிடிக்கும் சில குணாதிசயங்கள் தான் நம்மையும், நமது உறவுகளையும் சிதைக்கிறது.

மேஷம்

உள்ளுக்குள் மிருகத்தனமான கோபம் இவர்களுக்கு இருக்கும். பிடிக்காத நிகழ்வுகள், சம்பவங்கள் நடந்துக் கொண்டிருக்கும் போது இருக்கைக்கு முன்னால் இவர்கள் அமைதியாக இருப்பது போன்ற முகபாவம் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் கோபக் கனலுடன் குமுறிக் கொண்டிருப்பார்கள்.

ரிஷபம்

பிடிவாதம், பேராசை போன்றவை ரிஷப ராசிக்காரர்கள் மத்தியில் இருக்கும் பொதுவான கெட்ட குணாதிசயங்களாக கருதப்படுகிறது. ஒரு பொருள் அல்லது நபரின் மீது அதீத பற்றுக் கொள்வது மற்றவர்கள் உங்களை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க காரணியாக இருக்கிறது.

மிதுனம்

சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக் கொள்வது, ஆர்வத்திற்கு ஏற்பட மாறிக் கொண்டே இருப்பது. இது மற்றவர்களுடனான உங்களது உறவில் உணர்ச்சி ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த குணாதிசயங்கள் உங்களை ஒரு தனித்து அல்லது சுயநலமாக ஈடுபடுபவர் போல எடுத்துக் காட்டும். இதை தவிர்க்கு, உங்கள் சூழலை மற்றவருடன் பகிர்ந்துக் கொள்வது நல்லது.

கடகம்

நுண்ணிய உணர்வு நிலை, அதாவது சட்டென்று இவர்களது உணர்ச்சி நிலை மாறி அதிகரித்துவிடும். மகிழ்ச்சி, கோபம், அழுகை என அது எதுவாக இருப்பினும், உடனடியாக அதிகப்படியாக வெளிப்படுத்திவிடுவர்கள். இது பல சமயங்களில் சிறுபிள்ளைத்தனமான செயலாக தான் மற்றவர்கள் உணர்வார்கள். எனவே, இதை மாற்றிக் கொள்ளுங்கள்.

சிம்மம்

நண்பர்கள் கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம், நான் தான் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆசை போன்றவை ஓர்நாள் நண்பர் மத்தியிலான உறவை கெட்டுபோக வைத்துவிடும்.

கன்னி

தாழ்வு மனப்பான்மை தான் கன்னி ராசிக்காரர்களின் கெட்ட குணாதிசயம். இது இவர்களின் வளர்ச்சியை, உறவுகளை, உற்பத்தி திறனை வெகுவாக பாதிக்கும்.

துலாம்

தயக்கம், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், இதை செய்யலாமா? வேண்டாமா? என மற்றவர் கருத்தின் பால் தயக்கம் கொள்வது துலாம் ராசிக்காரர்கள் தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்

ரகசியமாகவே இருப்பது, அச்சுறுத்தும் வகையில் நடந்துக் கொள்வது, ஆக்ரோஷமாக செயல்படுவது போன்றவை விருச்சிகம் ராசிக்காரர்கள் தவிர்க்க வேண்டும். இது உங்களுக்கு நெருக்கமான உறவில் கூட விரிசல் விழ கருவியாகிவிடும்.

தனுசு

கலாச்சாரம், ஆன்மிகம், அமைதி என தனிமையில் இனிமை காணும் நபர்கள். இது இவர்களது பொதுவான குணாதிசயங்களில் ஒன்று. இதனால் இவர்களை சுற்றி இருக்கும் கூட்டம் மிக குறைவான எண்ணிக்கையில் இருக்கும். முடிந்த வரை மற்றவருடனும் சேர்ந்து வாழ்க்கையை இரம்மியமாக வாழ முயற்சிக்கலாம்.

மகரம்

தொழில், படிப்பு, வேலை என அனைத்திலும் போட்டி மனப்பான்மையுடன் வாழ்பவர்கள். லட்சிய பயணம் என்ற பெயரில் இவர்கள் தங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், உறவினர்களை மறந்துவிடுவார்கள். கவனம் முழுக்க தொழில் மட்டுமே இருக்கும். வாழ்க்கையில் முழுமையான வெற்றி என்பது உறவுகளோடு சேர்ந்து வாழ்வது தான். இதில் சற்று கவனம் செலுத்த வேண்டியது நல்லது.

கும்பம்

எதற்கும் அடிபணிந்து போகாமல் இருப்பது நல்லது தான். ஆனால், அனைத்து செயல்பாடுகளிலும் தனித்தே ஈடுபடுவது தவறு. நீங்கள் புத்திசாலி, திறமைசாலி எனிலும் கூட மற்றவர்களோடு சேர்ந்து ஈடுபடும் போது வெற்றியின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது அல்லவா.

மீனம்

சுதந்திரமாக எதையும் யோசிக்க மாட்டார்கள், உறுதியற்ற மற்றும் சந்தர்ப்பவாத மனோபாவம் பேரழிவை உண்டாக்கும். மேலும் இது மற்ற நபர்கள் உங்களோடு ஒன்றிணைந்து செயல்படாமல் போக முக்கிய காரணியாக மாறிவிடும்..

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: