கனவு காணாத மனிதர்களே இல்லை. கனவுகள் மகிழ்ச்சியளிக்கக் கூடியவையாகவோ அச்சுறுத்தக்கூடியவையாகவோ இருக்கலாம். மனித இனத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது, பல்வேறு அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களுக்குக் காரணமாகவும் பல தீர்க்கதரிசனங்களை முன்அறிவிப்பதாகவும் கனவுகள் இருந்திருக்கின்றன. இந்த நிகழ்வுகள், கனவு என்றால் என்ன? அது சொல்ல வரும்
விஷயம் என்ன? என்று நமக்குள் ஒரு தேடுதலையே ஏற்படுத்திவிட்டன. அறிவியல் என்னதான் பல மடங்கு முன்னேறிவிட்டாலும், கனவு பற்றிய புரிதல் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. கனவுக்கும் தூக்கத்துக்கும் தொடர்பு இல்லை. உண்மையில், கனவுகள் நம் விழிப்போடு தொடர்பு உடையவை. நம் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் கனவுகள். இவை பலதரப்பட்டவை. வயதுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப கனவுகளும் மாறுபடும். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »