மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருகிற தை அமாவாசை தினத்தன்று 27.01.2017.வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00.மணிக்கு மண்டைதீவில் இறந்த அனைவருக்காகவும் இறைவழிபாட்டு பூசையும் ஆத்ம சாந்திப்பிராத்தனையும் தொடர்ந்து மகேஸ்வரப்பூசையும் (அன்னதானம் ) நடைபெறவுள்ளது அத்தருணம் அம்பாளின் அருளையும் பெற்று நம்மவர்களின் (இறந்தவர்கள் ) ஆசியையும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
பிராத்தனையின் நோக்கம் ……..
ஆடி அமாவாசையன்று, பூமிக்கு வருகின்றனர் பிதுர்கள்; இதை, தட்சிணாயண காலம் என்பர். இந்த காலத்தில், தேவர்கள் ஓய்வெடுப்பதாகக் கருதப்படுவதால், முன்னோர், நம்மைப் பாதுகாக்க வருகின்றனர். உத்தராயண காலம் எனப்படும், தை மாத அமாவாசையில், இவர்கள் தங்கள் இருப்பிடமான, பிதுர்லோகத்துக்கு திரும்புகின்றனர். அவர்களை வரவேற்கவும், வழியனுப்பவும் நாம் தர்ப்பணம் செய்தாக வேண்டும்.
தை அமாவாசை, அம்பாளுக்கும் உகந்தது. அமாவாசை திதியை, பவுர்ணமி என்று மாற்றிச் சொன்ன, அபிராமி பட்டரை காப்பாற்ற, அம்பாள் தன் காதணியை, வானில் வீசி, நிலவாக்கிய நாள். இந்த புண்ணிய நாளில், நம்மை வாழ வைத்த தெய்வங்களை நினைவு கூர்வோம்.
நன்றி
அம்மன் பக்தர்கள்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்