ஏழைகளின் ஆப்பிள்’ என கொய்யாவைச் சொல்வார்கள். அந்த அளவுக்கு கொய்யாவில் சத்துக்கள் நிரம்பியுள்ளன. கொய்யாவில் பலவகைகள் உண்டென்றாலும், இரண்டு முக்கியமான வகைகளை நாம் சுலபமாகக் கவனிக்க முடியும். கனியின் உட்புறத்திலுள்ள சதைப்பகுதி வெண்மையாக இருக்கும். மற்றொன்று சிவப்பு நிறத்தில் இருக்கும். பெஸ்ட் பழம் கொய்யா
நெல்லிக்கனிக்கு அடுத்தபடியாக அதிக அளவு வைட்டமின் சி உள்ள ஒரே கனி கொய்யாதான். ஆரஞ்சுப் பழத்தில்கூட கொய்யாவை விடக் குறைந்த அளவிலேயே வைட்டமின் சி உள்ளது. கொய்யாக் கனியின் காம்புப் பகுதியில் சதையைவிட அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. ஆனால், மிக அதிகமாகப் பழுத்து கனிந்து விட்ட கொய்யாவில் வைட்டமின் சி சத்துக்கள் குறையத்தொடங்கி விடும்.
கொய்யாப் பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இவை வயிறு மற்றும் செரிமான உறுப்புகளுக்கு பெரிய அளவில் நன்மை தருகின்றன. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு கொய்யா மிகச்சிறந்த மருந்தாகத் திகழ்கின்றது. வயிற்றிலுள்ள பூச்சிகளை வெளியேற்றுவதற்கு கொய்யா உதவுகிறது.
உப்பு மற்றும் மசாலாப்பொடிகளுடன் கொய்யா பழத்தைச் சாப்பிடக் கூடாது. உப்பு, கொய்யாவில் உள்ள ஊட்டச்சத்துக்களை நீர்த்துப்போகச் செய்துவிடும்.
கொய்யாக் குச்சிகளைப் பல் துலக்கும் ப்ரஷ்ஷாக பயன்படுத்தும் வழக்கம் கிராமங்களில் உள்ளது. கொய்யா இலையை, வெயிலில் நன்கு உலர்த்தி, வறுத்து, தூள் செய்து பல்பொடியாகவும் உபயோகிக்கிறார்கள்.
தோலைச் சீவாமலும், கொட்டையைத் துப்பாமலும் சாப்பிட்டால்தான் கொய்யாவின் முழுப் பலனையும் நாம் பெற முடியும்.
சத்துக்கள் ஏராளம்
கொய்யாவில், நீர்ச்சத்து 76 சதவிகிதம், புரதம் – 1.5 சதவிகிதம், கொழுப்பு 0.2 சதவிகிதம், கார்போஹைட்ரேட் – 14.5 சதவிகிதம், கால்சியம் – 0.1 சதவிகிதம், பாஸ்பரஸ் – 0.4 சதவிகிதம் உள்ளன.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்