யாழ்ப்பாணத்தில் சர்வதேச
கிரிக்கெட் அரங்கு ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது.
இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் மண்டைதீவு பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வுசெய்தனர்.
அத்துடன் இந்த மைதான நிர்மாணப்பணிகள் இவ்வருடம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ ஒரு நாடு ஒரு அணி “ எனும் பொதுவான இலக்கின் கீழ் யாழ்ப்பாணம் மற்றும் பொலநறுவையில் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் கிரிக்கெட் அரங்கு எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்