• ஜனவரி 2017
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,853 hits
 • சகோதர இணையங்கள்

simmamசிம்ம ராசி பலன்கள்
(மகம், பூரம், உத்தரம் – 1ம் பாதம்

(மா – பி – மு – மே – மோ – மௌ – ட – டி – டே) போன்ற எழுத்துகளில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்கள் ஆவணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு – இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்)

வான மண்டலத்தில் 5வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசி நாதன் ஆகிய சூரியபகவான் நவக்கிரகங்களில் முதலாவது கிரகமாகும். உலக உற்பத்திக்கும், உயிர்கள் வாழ்வதற்கும் சீராக தன்னுடய கதிர்களை வாரி வழங்கும் வல்லமை பெற்ற சூரியன் கிரகங்களில் நம்முடைய கண்களுக்கு தெரியும் முதல் கிரகமும் ஆகும், மற்றும் எல்ல கிரகங்களுக்கு தலைமையாக உள்ள சூரிய பகவான் ராசி நாதனாக பெற்ற சிம்ம ராசியில் மகம், பூரம் உத்திரம் என்ற 3 நட்சத்திரங்களை தன்னகத்தே கொண்டது.

நவக்கிரகங்களில் முதன்மையானது சூரியன் ஆகும். அதுபோல் அரசாளும் யோகமும், எதிலும் முதன்மையாகவும் விளங்க விருப்பமுடையவர்கள். நீங்கள் பொன்னையும் பொருளையும் பெரிதாக மதிக்கும் இவ்வுலகில் புகழுக்காக இவ்வுலகில் எதையும் துணிந்து செயல்படுவீர்கள். நிர்வாகத் திறமை ஆட்சி அதிகாரம் மற்றும் பேச்சாற்றலுக்கு உரியவரான நீங்கள் எதையும் விட்டு கொடுக்காத தன்மையும் உண்மைக்கும், நேர்மைக்கும் போராடி வெற்றி பெறுவீர்கள் இக் குணநலன்கள் உடைய உங்களுக்கு சனிபகவான் தனுசு ராசியிலிருந்து சஞ்சாரம் செய்து அளிக்ககூடிய பலன்களை பார்க்க இருக்கிறோம்.

உங்களது ராசிக்கு 5ம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வது இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடைபெற கூடிய வாய்ப்பாகும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பாகும். சனிபகவான் பாபக்கிரகம் என்பதால் உங்களது ராசியின் 5ம் இடமான புத்தி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது புத்தியின் தன்மைகேற்ப செயல்படுவீர்கள், சிலசமயம் நல்ல அறிவும் ஆற்றலுடன் சிந்திக்கும் குண்முடைய நீங்கள் சில சமயங்களில் மறதியும், கவனச் சிதறலும் உடையவராக இருப்பீர்கள்.

உடல் ஆரோக்யம் சீராகி மகிழ்ச்சியாக இருக்கும் காலம். தீர்க்க முடியாத பிணி மற்றும் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். பணப் புழக்கம் தாரளமாக இருந்து வரும் பேச்சில் சாமர்த்தியம் நன்மை உண்டாக்கும். குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேரும். புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்பீர்கள். நம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதையும் தீர ஆராய்ந்து முழு மூச்சுடன் செயல்பட வெற்றி கிட்டும். தாயாரின் உடல் நிலையில் ஆரோக்யம் காணப்படும்.

வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டும் தாராக மந்திரமாக எண்ணி செயல்களில் வெற்றி பெற முடியும். பெரிய மனிதர்கள் சகவாசம். அதிகாரிகளின் சலுகை இவையெல்லாம் கிட்டும். குழந்தைகளால் பிரச்சனை ஏற்பட்டு நிம்மதியற்ற சூழல் ஏற்படும். அதே சமயம் நன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களது உழைப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். உங்கள் பணம் பொருள் கண் முன்னே களவு போனது போல் காணாமல் போகும் அல்லது பறிபோகவோ திருடு போகவோ வாய்ப்பிருக்கிறது. விருந்து கேளிக்கைகளில் நாட்டம் குறையும். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு விலகும். பூஜை, புனஸ்காரங்கள், கோவில், குளம், பக்தி பிரார்த்தனைகள் இவற்றில் அதிக ஈடுபாடு ஏற்படக் கூடிய காலமாக உள்ளது.

காதல் விஷயங்கள் உற்சாகமாக இருந்து வரும். காதல் கை கூடி திருமணத்தில் ஒரு சிலருக்கு முடியும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். வழக்குகள் ஜெயிப்பது போல் தோன்றினாலும் எதிரி வலுவாக இருக்க வாய்ப்புண்டு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையிலே உங்களை இயங்க வைப்பார். பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு கூடாது. விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்தல் நலம்.

ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் அதிகக் கவனம் தேவை. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும். விரதம் போன்ற விஷயங்களைக் கைவிட்டு உணவு விஷயத்தில் அதிக கவனம் தேவை. சக ஊழியர்களின் எதிர்பாராத உதவியும் அவர்களின் ஒத்துழைப்பும் நமக்கு சாதகமாக இருந்து வரும். நண்பர்களால் தேவையற்ற வருத்தங்கள் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு வலுவான போராட்டத்திற்கு பிறகே குழந்தை பாக்யம் அமையும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிபோடவோ ஒத்தி போடவோ கூடாது. காரியத்திலே கண்ணாய் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் போட்டியான உலகத்தில் ஜெயிக்க முடியும்.

வேலை அல்லது உத்யோகம் (JOB)

உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படுத்துவார். கிடைத்த வேலையில் நிம்மதி இல்லாமல் இருக்கச் செய்வார். பார்க்கும் வேலையை அவசரபட்டு விட்டுவிடக் கூடாது. அடுத்த வேலை கிடைக்க கால தாமதம் ஆகும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் மன வருத்தம் கொள்ளச் செய்வார். உத்யோகத்தில் உயர்வை காண்பது சற்று கடினமாக இருக்கும். ஊதிய உயர்வும் எதிர்பார்த்த அளவு இருக்காது. எனவே கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்த பின் உங்களை ஸ்த்திரபடுத்திக் கொள்ளுங்கள் எதிரிகள் விஷயத்தில் அலட்சியம் காட்டுதல் கூடாது. வேலயின் காரணமாக இடமாற்றம் ஒரு சிலருக்கு அமையும்.

தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். கூட்டாளிகளே லாபம் அடைவார். எனவே முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பணம் பொருள் மாட்டிக் கொள்ளும். எனவே கவனம் தேவை. சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள் ஓரளவு லாபகரமாக அமையும். உற்பத்தி சார்ந்த துறைகள் ஏற்றமாகவும் நல்ல லாபம் ஈட்டுவதாகவும் இருக்கும். கமிஷன் ஏஜென்ஸிஸ், புரோக்கரேஜ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி, போக்குவரத்து, தகவல் தொடர்பு லாபகரமாக இருக்கும். ரேஸ், லாட்டரி, ஷேர் மார்கெட்டில் தேவையற்ற முதலீடு கூடாது. இரும்பு, எஃகு, சிமெண்ட், இரசாயனம் சற்று சுமாராக இருக்கும். உணவு, ஆடை, ஆபரணம், எரிபொருள், எண்ணெய், நிலக்கரி, பெட்ரோல், டீசல் இவைகளில் சற்று லாபம் குறைந்து காணப்படும். கனரகத் தொழில்களில் பெரிய அளவில் முதலீடு கூடாது. சினிமா, தொலைகாட்சி, பத்திரிக்கை, சுற்றுலா, திரையரங்குகள் லாபகரமாக இருக்கும். நிதி, நீதி,வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் நல்ல லாபகரமாக அமையும். பள்ளி கல்லூரி, பல்கலைக் கழகங்கள் போன்றவற்றில் லாபம் குறைந்தும் மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல், கட்டுமானம், ரியல் எஸ்டேட் ஏற்றமுடன் விளங்கும். பிளாஸ்டிக், மரம், உணவு பொருட்களில் லாபம் அதிகரித்து காணப்படும். கப்பல், நீர், மீன் உற்பத்தி தொழில்கள், உப்பு மருந்துப் பொருட்கள் லாபகரமாக இருந்து வரும்.

விவசாயம்

சாகுபடிகள் சாதகமாக இருக்கும். காய், பழம், பூ, போன்றவற்றில் லாபம் அதிகரித்தும் கரும்பு, நெல், கோதுமை, பருப்பு, பயறு வகைகள் சற்று லாபம் குறைந்து காணப்படும். விவசாயக் கடன்கள் அதிகரிக்கும். கடலை, தென்னை, வாழை மற்றும் பருவ விளைச்சல்களில் லாபம் குறைந்து காணப்படும். புதிய சொத்துக்கள் அல்லது நிலங்கள் வாங்கவும் ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும். தேவையில்லாமல் கடன் வாங்குவதல் கூடாது.

அரசியல்

நெருக்கடியான நேரங்களில் சரியான முடிவு எடுத்தல் வேண்டும். சமூகத்தில் பெயர், புகழ் அந்தஸ்து ஏற்பட்டாலும் அரசாங்க விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. தேவையற்ற போட்டிகள் தவிர்த்தல் நலம். எதிரிகள் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். பண விஷயங்களில் அதிகக் கவனம் தேவை. தேவையில்லாத விரயங்கள் நஷ்டங்கள் ஏற்படும். உங்களுக்கென்று இருக்கும் தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் வாழ்க்கையை ஓட்டுதல் வேண்டும்.

கலை

ஒப்பனை, உடை, அலங்காரம், நடிப்பு, டப்பிங் வாய்ஸ், கிராபிக்ஸ் போன்ற கலைத்துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலமாகும். இசை, நடனம், நாடியம், ஒவியம், சிற்பக்கலையில் இருப்பவர்களுக்கு இது ஏற்றமான காலமாகும். பரிசுகளும், பாராட்டுகளும் தாமகவே ஒரு சிலருக்கு தேடி வரும். மறைமுகமான எதிர்ப்பு போட்டி பொறாமைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். திறமையாளர்கள் மேலே வரவேண்டிய தருணம் உங்கள திறமையானவர்கள் அதிகரித்து கொள்ளுங்கள்.

மாணவர்கள்

விளையாட்டுகளில் அதிகக் கவனம் செல்லும். தேவையற்ற விஷயங்களில் மனதை ஈடுபடுத்துதல் கூடாது. சந்தேகம் அவநம்பிக்கை தாழ்வு மனப்பான்மை விட்டு ஒழித்தல் வேண்டும். சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். கல்விக் கடன்கள் கிடைப்பதில் தடைகள் ஏற்படும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க போராட வேண்டியது வரும். உயர்கல்வி பயில ஒரு சிலர் வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.

பெண்கள்

காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும், சாதகமாகவும் அமையும். இதுவரை நடை பெறாமல் தள்ளிப் போன திருமணம், குழந்தை பேறு போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை அதுவாக வந்து சேரும். கணவன் மனைவி உறவு சற்று மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்து வரும். 2வது திருமணத்தில் இருந்த தடை நீங்கி ஒரு சிலருக்கு 2வது திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டாகும். விவகாரத்துக்கள் இழுபறியாக இருந்து வரும். பொருளாதாரம் ஏற்றமுடன் இருந்து வரும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் வருகையால் மகிழ்ச்சி அமையும். பார்க்கும் வேலையில் அதிக கவனம் தேவை. அவசரப்பட்டு வேலையை விட்டு விடுதல் கூடாது. புதிய வேலை கிடைக்க தாமதமாகும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குழந்தைகளால் உற்சாகமும் நன்மையும் அதிகரிக்கும். நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். இடம், மனை, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும். பகுதி நேரமாக உயர்கல்வி பயிலவோ அல்லது வேலை பார்க்கவோ வாய்ப்புகள் அமையும்.

உடல் ஆரோக்யம்

உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. உடம்பில் ஏற்பட்ட நோயின் தன்மை குறைவது போல் தோன்றினாலும் நோயின் தன்மை அதிகரித்துக் கொண்டே இருக்கும். உடம்பில் சளித் தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நலம். அடிக்கடி உடல் அசதி, சோர்வு அலைச்சல்களால் கால்வலி, அடிவயிற்று பிரச்சனைகளை சமாளித்து கொள்ள வேண்டி வரும்.

சனி பகவானின் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள் (மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)

மூலம்

சனிபகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். காதல் கனிந்து திருமணத்தில் முடியும். தேவையற்ற வழக்குகளை சந்திக்க வேண்டியது வரும். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பர்கள். மேலும் பார்க்கும் வேலையை அவசரபட்டு விட்டுவிடுதல் கூடாது. விருந்து கேளிக்கைகள் உல்லாச சல்லாபங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். போட்டு பந்தயங்களில் வெற்றி கிட்டுவது நிச்சயம் என்று கூற முடியாது. எழுத்துத் தேர்வில் எதிர்பார்த்த வெற்றியில் தடையேற்படும். கலைத்துறையில் எதிர்பாராத பணவரவு, பொருள்வரவு ஏற்படும். சுபகாரியங்கள் நல்லபடியாக நடந்தேறும். நேரத்தை வீணாக்காமல் செயல்படுதல் வேண்டும். நண்பர்களால் எதிர்பாராத பணவரவும் பொருள்வரவும் ஏற்படும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். கடன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். கொடுத்த பணம் பொருள் வருவதில் தடை ஏற்படும்.

பூராடம்

இதுவரை முடியாமல் இழுத்தடித்த விஷயங்கள் ஒரு முடிவுக்கு வரும். எதிலும் முடிவு எடுக்க முடியாமல் இருந்த விஷயங்கள் ஒரு முடிவுக்கு வரும். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் ஏதாவது ஒன்றை படித்த்க் கொண்டும் எழுதிக் கொண்டும் வாசித்துக் கொண்டும் இருப்பீர்கள். அடிக்கடி பிரயாணங்கள் அமையும் அவை மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்து வரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமையும் அமையும் நிலவும். உங்களை அறியாமல் இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்கள் சீராகும். சுய தொழில்கள் சிறு தொழில்கள் உற்பத்தி சார்ந்த துறைகள் ஓரளவு லாபகரமாக இருக்கும். படிப்பதற்கான வழிவகைகள் தாரளமாக அமையும். அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி வரும். உழைப்புக்கேற்ற ஊதியம் ஒரளவு கிட்டும். உடன் பிறந்தவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். நெருங்கிய உறவினர்களால் எதிர்பாராத நன்மைகள் அமையும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும்.

உத்தராடம்

இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். விருந்து கேளிக்கைகளில் அடிக்கடி ஈடுபட வேண்டியது வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் சற்று அதிகரித்து காணப்படும். மற்றவர்களை தவிர்க்காமல் அவர்களோடு ஒத்துழைத்து வாழ பழகிக் கொள்ளல் வேண்டும். சுயத்தொழில்கள் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது. கொடுக்கல் வாங்கலில் அதிகக் கவனம் தேவை. கொடுத்த பணம் பொருள் எதுவும் எளிதில் வந்து சேராது. பார்க்கும் வேலையில் அதிக எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் புது உறுப்பினர் வருகையால் உங்களுக்கு தேவை இல்லாத பிரச்சனைகள் தோன்றி மறையும்.

கேட்டை

வேலையில் அதிக கவனம் தேவை. தாயாரின் அன்பும் ஆதரவும் அவர்களால் நன் மதிப்பும் அதிகரிக்கும். தாய் மாமன்களின் அன்பும் அவர்களால் சகாயமும் ஏற்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன் வாங்கி வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். வேலை இல்லாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். கையில் தாரளமாக பணப்புழக்கம் இருந்து வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். உறவினர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

மகம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு கேது பகவான் உங்கள் ராசிக்கு 7, 6, 5, ராசிகளில் சஞ்சரிப்பது ஒரு பக்கம் சாதகம் என்றாலும் மற்றொரு பக்கம் சுமாரான பலன்கள் உண்டாகும். வழக்குகள் இருப்பின் இழுபறியாகவே இருந்து வரும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மனவருத்தங்களும் வந்து சேரும். காதல் விஷயங்களில் தேவையற்ற பிரச்சனைகளும் போராட்டங்களும் ஏற்படும். பார்க்கும் வேலையில் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும். பாஸ்போர்ட் விசா போன்றவற்றில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சரியாகி விடும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுபட மனம் விரும்பும். குழந்தைகளால் தேவையற்ற பிரச்சனைகளும் மனவருத்தங்களும் வந்து சேரும். கலைத்துறையில் எதிர்பாராத பணவரவும், பொருள் வரவும் கிட்டும். அடிக்கடி ஆலய தரிசனம் மற்றும் தெய்வ தெரிசனம் கிட்டும். மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி தாண்டவமாடும். கொடுத்த பணம், பொருள் திரும்ப வருவதில் தடையேற்படும். வேலையில் மாற்றம் அமையும். வேலையின் காரணமாக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வந்து சேரும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

புதுப்புது விஷயங்களைக் கற்பதில் ஆர்வமாக இருப்பீர்கள், புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற பாடுபடுவீர்கள். இளைய சகோதர சகோதரிகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அடிக்கடி குறுகிய தூரப் பயணங்கள் ஏற்படும். அது நன்மையாகவே முடியும். இதுவரை மனதில் குடி கொண்டிருந்த இனம் தெரியாத பயம் குழப்பம் நீங்கி தெளிவான முடிவுக்கு வர வாய்ப்பு அமையும். கடன் வாங்கியவர்கள் கடனை திரும்பத் தவணை முறையில் கொடுப்பார்கள். கையை விட்டு போன பொருட்கள் திரும்ப வர ஆரம்பிக்கும். பத்திரங்கள், நகைகள் திரும்ப கைக்கு வந்து சேரும். வேலையில் முன்னேற்றமும் எதிர்பாராத ஊதிய உயர்வும் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், அதனால் எதிர்பாராத தனவரவும், பொருள் வரவும் கிட்டும். சுபகாரியங்கள் நடக்க கூடிய வாய்ப்பும் மற்றும் அதிர்ஷ்ட காற்று சற்று பலமாகவும் வீசும்.

உத்தரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

எந்திர வாழ்க்கை வாழ்ந்து வந்த உங்களுக்கு உங்களுடைய திறமை, முக்கியத்துவத்தை மற்றவர்கள் உணர ஆரம்பிப்பர். உங்கள்து திறமையை முழுமையாக புரிந்து அதற்கேற்ப உங்களை பயன்படுத்தும் காலம் இதுவாகும். கணவன் மனைவி உறவு ஒரே சீராக இருந்து வரும். குடும்பத்தில் இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வலம் வருவீர்கள். உங்களை அறியாமலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். மனசஞ்சலம் தடுமாற்றம் இல்லாமல் ஒரே சீராக எடுத்த காரியத்தை முடிக்க முயல்வீர்கள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் அமையும். புத்ர பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். செலவினங்கள் கட்டுக்குள் இருக்கும். இதுவரை தீராத நோயின் தன்மை குறைந்து மகிழ்ச்சி அமையும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். கடன்கள் அடையும் வீட்டு உபயோகப் பொருட்கள் தானாகவே வந்து அமையும். விசா, பாஸ்போர்ட் வந்து சேரும். தொழில் தொடங்குவதில் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீட்டை தவிர்க்கவும்.

 

சனியின் 3ம் பார்வை பலன்கள்

சனி பகவான் 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7ம் இடத்தை பார்ப்பதால் திருமணம் சற்று தாமதமானாலும் எல்லாமே நன்மையாக முடியும். 7ம் இடத்தை பார்க்கும் காலங்களில் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. சுய தொழில் அல்லது கூட்டுத் தொழில் செய்ய வேண்டுமானால் ஜனன ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து அதன்பின் செயல்படுதல் வேண்டும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். காதல் திருமணம் நடக்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் அதிகரிக்கும். வேலையாட்களால் மன திருப்தியும் ஒத்துழைப்பும் கிட்டும். வெளிநாட்டு தொடர்பால் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஏற்றுமதி இறக்குமதி சீராக இருந்து வரும். வெளிநாடு செல்வதில் தேவையற்ற தடைகள் ஏற்படும்.

சனி பகவானின் 7ம் பார்வை பலன்கள்

சனி உங்கள் ராசிக்கு 7ம் பார்வையாக 11ம் இடத்தை பார்ப்பதால் உங்களுடைய ஆசைகள் அபிலாஷைகள் பூர்த்தியாகும். இதுவரை இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகி உங்கள் எண்ணம் பூர்த்தியாகும் மூத்த சகோதர சகோதரிகள் அன்பும் ஆதரவும் கிட்டும். அவர்களுக்கு சுபகாரியங்கள, சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். எடுக்கும் புது முயற்சிகள் நல்லபடியாக அமையும். அடிக்கடி பயணங்கள் அமையும். அவை மகிழ்ச்சிகரமாகவும் லாபகரமாகவும் இருக்கும். குடும்பத்தில் புதுவரவுகள் அதிகரிக்கும். அதனால் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வண்டி வாகனம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும், நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும் விரும்பியதில் சற்று தடையேற்பட்டாலும் இறுதியில் திருப்தியாக எல்லாம் நடந்தேறும்.

சனிபகவானின் 10ம் பார்வை பலன்கள்

சனிபகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 2ம் இடத்தை பார்ப்பதால் இதுவரை நிலுவையில் இருந்து வந்த வராத பணம், நகை, பொருட்கள் எல்லாம் தவணை முறையில் வந்து சேரும். பேச்சில் எச்சரிக்கை தேவை. தேவையற்ற பேச்சுக்களைக் குறைத்தல் வேண்டும். பணம், பொருள் சாதகமாக இருந்து வரும். கூட்டு குடும்பத்தில் சிற்சில சண்டை சச்சரவுகள் வந்து சேரும். குடும்பத்தில் புது வரவால் சிற்சில குழப்பங்கள் வந்தாலும் அது நன்மையிலே முடியும். நேரத்திற்கு உணவு உண்ணுதல். வேலையின் நிமித்தமாக வரவேண்டிய பி.எப், இன்சூரன்ஸ், கிராஜிவிட்டி போன்றவைகள் சற்று தாமதமாக வந்து சேரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு, பொருள் வரவு கிட்டும். வேலையில் நல்ல முன்னேற்றம் அமையும். முகம், கண், பல், போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக அடிவயிற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கூடியவரை விரதம் இருப்பதை தவிர்த்தல் நலம். சமூகத்தில் சற்று மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
kannkiகன்னி ராசி
உத்தரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2

(டோ, ப, பா, பி, பூ, வி, ள, ட, பே, போ என்ற எழுத்துகளில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்களும் புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்

வான மண்டலத்தில் 6வது ராசியாக வலம் வரும் கன்னி ராசியின் அதிபதியான புதன் உங்கள் ராசிநாதன் ஆவார். கல்விக்கும் வித்தைக்கும் ஞானத்துக்கும் அறிவிக்கும் ஆற்றலுக்குமான புதபகவான் வீட்டில் பிறந்த நீங்கள் எதையும் நின்று நிதானித்து செயல்படும் ஆற்றல் உடையவர்கள். எந்த காரியத்தையும் பல முறை யோசித்து செயல்படும் நீங்கள் விரைவாகவும் வேகமாகவும் செயல்படுவீர்கள். மாற்றம் என்ற சொல்லுக்கு நீங்களே எடுத்துக் காட்டாகும். எண்ணிய எதையும் செய்யும் ஆற்றலும் துணிச்சலும் உடைய நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

அறிவிக்கும் சேமிப்புக்கும் சிக்கனத்திற்கும் உரியவரான நீங்கள் தேவையற்ற செலவினங்களை குறைத்து தேவைக்கு மட்டும் செலவு செய்யும் இயல்பு உடையவர்கள் மாற்றம் என்ற கருத்தை உடனே ஏற்றுக் கொள்ளும் தன்மையுடைய உங்களுக்கு இந்த சனிபகவான் இதுவரை உங்களுடைய ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரித்தவர் இனி 4ம் இடத்தில் தனசு ராசியில் சஞ்சாரம் செய்வார். இது அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். இதை நினைத்து பயப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம். அவரவர் பிறப்பு ஜாதகத்தை பொறுத்து இதன் தன்மை மறுபடும். எனவே அர்த்தாஷ்டமச் சனி நடக்கப் போகிறதே என்று ஒரு போதும் கவலையோ பயமோ கொள்ள வேண்டாம்.

உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும் 6ம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் 4ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் முதலில் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு திருப்தியற்ற வேலையாக இருந்தாலும் திருப்தியாக செயலாற்ற வேண்டும். மேலும் 4ம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுப்பதைத் தவிர்த்தல் வேண்டும். மேலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும், 6ம் வீட்டிற்கும் அதிபதியாக வருவதால் வேலையில் கவனம் தேவை. 5ம் இடம் என்பது பார்க்கும் வேலையை விட்டு வெளியே வருவது அல்லது வெளியேற்றபடுவது என்பதைக் குறிக்கும். எனவே அவசரபட்டு வேலயை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலை உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும்.

சமூகத்தில் இதுவரை இருந்த வந்த நிலை மாறி சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும். வேலையின் காரணமாக உயர்வு ஏற்படும். அதே சமயம் அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையை சனி பகவான் உருவாக்குவார். எனவே உழைப்புக்கு அஞ்சாமல் வேலையில் சளைப்பில்லாமல் விரும்பி செய்தல் வேண்டும். அப்பொழுது தான் வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். இல்லையெனில் வேலையில் அலுப்பும் சலிப்பும் தோன்றி வேலையை விட வேண்டியது வரும்.

உங்களது லக்னத்தின் 2ம் வீட்டிற்கு அதிபதி சுக்ரன் ஆவார். அதனால் இதுவரை இருந்த வந்த பொருளாதார தேக்க நிலை மாறி பணவரவும் பொருள் வரவும் அதிகரிக்கும். இதுவரை கையை விட்டுப்போன பொருட்கள் நகைகள் பத்திரங்கள் திரும்ப வீடு வந்து சேரும். பேச்சில் சாமர்த்தியமும் அதிகரித்து காணப்படும். பொருளாதார நிலை மேம்படும். சுறுசுறுப்பும் ஊக்கமும் உற்சாகமும் அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த மந்தம் தயக்கம், குழப்பம், தேக்கம், தடுமாற்றம் மாறி பொறுப்புணர்வுடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.

புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது சற்று கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. சகோதர சகோதரர்களில் அன்பும் ஆதரவும் இருந்தாலும் அவர்களால் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும் நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சற்று தாமதித்து சாதகமாக வந்து சேரும். இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும். தாயாரின் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. குறிப்பாக உங்களது உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் குறிப்பாக சளித் தொல்லையால் அவதிப்பட நேரிடும்.

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிகக் கவனம் தேவை. அதில் மகிழ்ச்சியற்ற செயல்கள் நடந்தேறும். குழந்தைகளால் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் சற்று தாமதத்திற்குப் பின் இனிதே நடந்தேறும். நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். வழக்குகள் சாதகமாக இராது. தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும்.

கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். வலுவான போராட்டத்திற்கு பின் காதல் நிறைவேறும் காதலால் தேவையற்ற மன வருத்தங்களும் வேதனைகளும் வந்து சேரும். தொழில் முதலீட்டில் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது. தொழிலில் கூட்டாளிகளுக்கு ஆக உழைக்க வேண்டி வரும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகளும் நன்மைகளும் வந்து சேரும். உயரதிகாரிகளின் அன்பும் ஒத்துழைப்பும் இருந்து வரும். கடை, தொழில் நிலம் தோட்டம், பண்னை, பயிர் செய்யும் நிலம் வாங்கவும் கடை, அலுவலக கட்டிடம் கட்டவும் ஒரு சிலருக்கு வாய்ப்புகள் உருவாகும். எதையும் தள்ளிப் போடுவது ஒத்திப் போடுவது கூடாது. அன்றைய வேலைகளை அன்றே செய்து முடிக்க வேண்டும்.

வேலை அல்லது உத்யோகம் (JOB)

உங்களது ராசிக்கு 4ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் ஒரு சிலருக்கு வேலையில் திருப்தி இல்லாமல் பார்க்கும் வேலையை விட்டுவிட வாய்ப்பு அமையும் எனவே அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டு விடுதல் கூடாது. வேலை நிமித்தமாக ஒரு சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். உங்களுடைய பொறுப்பு உணர்ச்சிக்கு சற்று சோதனை ஆன காலமாகும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். பதவி உயர்வு ஒரு சில இழுபறிக்கு பின் ஈடேறும். அரசு வேலை கிடைக்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் இதில் எதிர்பார்த்த திருப்தி இராது.

தொழில் (BUSINESS) வியாபாரம் (JOB)

உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆரம்பத்தில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் நல்ல லாபம் ஏற்படும் சிறு தொழில்கள் ஓரளவு லாபகரமாக இருக்கும். சுய தொழில்கள் முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது. சாலையோர வியாபாரம் நல்ல லாபகரமாக அமையும். இரும்பு எஃகு, சிமெண்ட், நிலக்கரி மற்றும் கனிம வளங்கள் துறை சற்று லாபகரமாக இருக்கும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் நல்ல லாபகரமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸீஸ், புரோக்கர்ஸ், கான்ட்ரக்ட், கன்சல்டன்சி, கட்டுமானம் சற்று லாபம் குறைந்து காணப்படும். தகவல் தொடர்பு, போக்குவரத்து, வண்டி வாகனங்கள் உற்பத்தி நல்ல லாபகரமாக அமையும். பெட்ரோல், டீசல், நிலக்கரி இயற்கை எரிவாயு லாபகரமாகவும், ரேஸ், லாட்டரி, சூதாட்டம் ஆரம்பத்தில் லாபம் குறைந்தும் பின்னால் லாபகரமாகவும் இருக்கும். பங்குச் சந்தை ஆரம்பத்தில் லாபம் அதிகரிக்கும் பின்னால் லாபம் குறைந்தும் காணப்படும். ஆடை, ஆபரணங்கள், பிளாஸ்டிக் தொழில்கள் லாபகரமாகவும் அமையும். மருத்துவம், விஞ்ஞானம், நிர்வாகம் நல்ல சாதகமாக அமையும். உணவு, ஓட்டல், சுற்றுலாத் துறைகள் சற்று லாபம் குறைந்து காணப்படும். பள்ளி கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் சற்று லாபம் குறைந்து காணப்படும். விதை, உரத் தொழில் சற்று லாபம் அதிகரிக்கும். உப்பு நீர், கப்பல், மீன் பிடித் தொழில்கள் நல்ல லாபகரமாக அமையும். முகவர்கள், வியாபாரப் பிரதிநிதிகள் மிக அதிக பலன் அடைவார்கள். மருந்து பொறியியல், மருத்துவ பொருட்கள் சற்று லாபம் குறைந்து காணப்படும். பத்திரிக்கை, எழுத்து படைப்பு, உற்பத்தி, தகவல் தொடர்பு சீரும் சிறப்புமாக அமையும்.

விவசாயம்

புதிய நிலபுலன்கள் வாங்க ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும். பயிர் வளம் ஓரளவு நல்ல செழித்து வளரும். லாபம் சற்று அதிகரித்து காணப்படும். கரும்பு, நெல், கோதுமை, சோளம், பருப்பு வகைகள் சற்று லாபம் அதிகரிக்கும். பழங்கள் காய்கறிகள் நல்ல வருமானம் தருபவையாக இருக்கும். வாழை, தென்னை, கடலை மற்றும் பருபயிர்கள் விளைச்சல்கள் அதிகரித்து காணப்படும்.

அரசியல்

அரசியல் வாழ்வு சற்று சுமாராக இருந்து வரும், தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருந்தாலே போதுமானதாகும். எதிரிகள் அதிகரித்த வண்ணம் இருப்பர். தேவையற்ற போட்டிகளைத் தவிர்த்தல் நலம். அரசியலில் உயர்ந்த இடத்தை பிடிக்க தேவையான தகுதிகளை வளர்த்து கொள்ளல் வேண்டும். சட்டச் சிக்கல்களில் மாட்டமலும், எதையும் தாக்குபிடிக்கும் சக்தி, உடனுக்குடன் உடன் முடிவெடுக்கும் திறமை நீங்கள் வளர்த்து கொள்ளல் வேண்டும். சொத்துகள் நிறைய சேரும் தருணம்.

கலை

உங்களது முழு திறமையை வெளிபடுத்தினால் மட்டுமே உங்களால் பிரகாசிக்க முடியும். உங்களை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படுதல் வேண்டும். ஜோதிடம் இசை, நடனம், நாட்டியம், ஒவியம், சிற்பத்துறையில் இருப்பவர்களுக்கு சற்று சுமாரான காலமாகும். ஒரு சிலருக்கு பரிசும் பதவிகளும் தாமதமாக வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு லாபகரமாக இருக்காது. சினிமாத்துறை சற்று சுமாராக இருந்து வரும்.

மாணவர்கள்

நல்ல மதிப்பெண் எடுக்க கடுமையாக உழைக்க வேண்டியது வரும். மந்தமும், சலிப்பும் படிப்பு விஷயத்தில் தோன்றாமல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்குதல் வேண்டும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்க கடுமையாகப் போராட வேண்டி வரும். விளையாட்டுகளில் கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்த கூடாது. கல்விக் கடன் கிடைப்பதில் இழுபறியாக இருந்து வரும். கூடிய வரை தேவையற்ற நட்பு வட்டாரத்தை தவிர்க்கவும்.

பெண்கள்

வேலை தேடுபவர்களுக்கு முதலில் கிடைத்த வேலையில் அமரவும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை மற்றும் அமைதியற்ற நிலை ஏற்பட்டாலும் வெறுப்பு இல்லாமல் வேலையைப் பார்த்தல் வேண்டும். வேலையில் அடிக்கடி லீவு போட வேண்டி வரும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடக் கூடாது. வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் ஒரு சிலருக்கு அமையும், படிப்பு நன்கு அமையும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி உறவு சற்று சந்தோஷமாக இருக்கும். பேச்சில் இனிமை கூடும். குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேரும். குழந்தை பாக்யத்தில் நிறைய தடைகள் ஏற்பட்டு. விலகும். குழந்தைகளை விட்டுப் பிரிய நேரிடும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை மற்றும் வீடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்துதல் கூடாது. உறவினர்களால் நன்மையும், சக ஊழியர்களால் எதிர்பாராத நன்மையும் ஏற்படும். கணவனின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.

உடல் ஆரோக்யம்

உடம்பில் சளித் தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிவயிறு, பாதம் நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனைகள் வராமல் நிறைய ஓய்வு எடுத்து கொள்ளல்; வேண்டும். நேரத்திற்கு உணவும் மருந்தும் உட்கொள்ளுதல் வேண்டும்.

சனி பகவானின் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள் (மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)

மூலம்

சனிபகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் முன்னேற்றமும் உயர்வும் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றியும், அதனால் வெலையும் பரிசும், பணமும் ஆரம்பத்தில் அமையும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். கொடுத்த பனம் பொருள் வந்து சேரும். உடல் ஆரோக்யத்தில் பிரச்சனைகள் வந்து பேகும். வழக்குகள் சாதகமாக வந்து சேரும். எழுத்துத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் பிரச்சனைகள் ஏற்படும். நண்பர்களின் நட்பும், ஒத்துழைப்பும் நன்கு கிட்டும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். விவசாயம் சாதகமாக இருக்கும். பங்குச் சந்தை சாதகமாக இருக்கும். விருந்து கேளிக்கைகளில் மன ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையில் எதிர்பார்த்த பண வரவும், பொருள் வரவும் அமையும். அரசியல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.

பூராடம்

சனி பகவான் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதார வளம் சற்று அதிகரிக்கும். பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். இதுவரை விலகிச் சென்ற உறவுகள் தாமாகவே வந்து சேர வாய்ப்பு அமையும். கொடுத்த பணம் பொருள் வந்து சேரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். சொத்துக்கள் தாமாகவே வந்து சேரும். நல்ல வசதியான வாழ்க்கை உருவாவதற்கு உரிய சூழ்நிலை அமையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். பங்குச் சந்தையில் சற்று லாபம் அதிகரிக்கும். சுயதொழில்கள் சற்று லாபகரமாகவும் உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று தடுமாற்றத்துடன் இருந்து வரும். தள்ளிப் போனத் திருமணம் நடைபெறும் காலம். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை ஒரு சிலருக்கு அமையும். வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். பாஸ்போர்ட், விசா போன்றவை எளிதில் கிடைக்கும்.

உத்தராடம்

அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரிய அளவில் தொழிலில் முதலீடு செய்ய கூடாது. உடல் ஆரோக்யத்தில் அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவை. தந்தையாரின் உடல் நலத்தில் அதிக அக்கறைத் தேவை. இதுவரை தள்ளி போன வெளிநாட்டு பயணம் இனிதே நடந்தேறும். யாருக்கும் தேவை இல்லாமல் ஜாமீன் போன்ற விஷயங்களில் கையெழுத்து போடுவது கூடாது. குழந்தைகள் உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. குழந்தைகள் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். குடும்பத்தில் தேவை இல்லாத சண்டை சச்சரவுகளை தவிர்த்தல் நலம். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் இராது. சுய தொழில் சற்று சுமாராக இருந்து வரும். அரசியலில் எதிர்பார்த்த உத்யோகத்தில் எதிர்பாராத இடமாற்றம், மனை மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். உழைப்புகேற்ற ஊதியம் இராது.

கேட்டை

எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிட்டும். கையில் பணப்புழக்கம் சரளமாகப் புரளும் நேரம். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

உத்தர நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு சனிபகவான் 4ம் இடத்தில் சஞ்சரிப்பது ஓரளவு சுமாரான பலன் தரும். இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள் இவற்றில் முதலிடு செய்ய வேண்டி வரும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கரைத் தேவை. வேலையில் தேவையற்ற மன உலைச்சல்கள் ஏற்படும். வெளிநாடு செல்வதில் தடை ஏற்படும். காதல் விஷயங்கள் சற்று சுமாராக இருந்து வரும். குழந்தைக்காக தெய்வ அனுகூலத்தை கூட்டவும் கொடுத்த பணம், பொருள் வருவதில் சற்று தாமதம் ஏற்படும். விவாகரத்து எளிதில் கிடைக்கும் தருணம். பங்கு சந்தை லாபகரமாக இருக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். நீண்ட தூரப் பிரயாணம் ஏற்படும் வெளிநாட்டு வாய்ப்பு வந்து அமையும். தொழிலாளர்கள் மற்றும் வேலையாட்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

உங்களது எண்ணங்களும், ஆசைகளும் நிறைவேறும் காலம் இதுவரை நடவாமல் தள்ளி போன சுபகாரியங்கள் நடக்கும் காலம். தாயாரால் எதிர்பாராத நன்மை ஏற்படும். வீடு, வண்டி, வாகனங்கள் நிலம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பான காலமாகும். வேலையில் முன்னேற்றம் காணும் காலம். வெளியூர், வெளிநாடு செல்லவும் மற்றும் உயர்கல்வி பயில வாய்ப்பு அமையும். அந்நிய மனிதர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். அரசியல் மற்றும் சுயதொழில் உற்பத்தி சார்ந்த துறைகள் நல்ல லாபகரமாக இருக்கும். எப்பொழுதும் உற்சாகதுடனும் மகிழ்ச்சியுடனும் விளங்குவீர்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

உங்களுடைய பெயருக்கும் புகழுக்கும் உயர்வுக்கும் கடுமையாக உழைக்கும் காலம். சகோதர சகோதரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். அதே சமயம் மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும் அரவணைப்பும் கிட்டும். தேவையற்ற முயற்சிகளில் இறங்கக் கூடாது. தாயார் உடல் நலத்தில் கவனம் தேவை. போக்குவரத்து வண்டி, வாகனங்களில் எச்சரிக்கை தேவை. பத்திரங்கள் நகைகள் இவைகளைப் பத்திரமாக கையாள வேண்டும். தேவையற்ற ஜாமீன் கையெழுத்து கூடாது. நேரம் என்ற ஒன்றை சரியாக கனித்து செயல்பட வேண்டும். பெண் வேலையாட்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் விஷயத்தில் கவனம் தேவை. உங்களைப் பற்றிய வீண் வந்தந்திகள் பரவுகின்ற காலம். மனதில் உறுதியாகவும் தைரியமாகவும் எந்த ஒரு காரியத்திலும் இறங்க வேண்டும். தந்தையாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிநாடுப் பயணங்களில் அதிக முன் எச்சரிக்கை தேவை.

 

சனி பகவானின் 3ம் பார்வை பலன்கள்

சன் பகவான் 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6ம் இடத்தைப் பார்ப்பதால் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் உயர்ந்த் காணப்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன் வாங்கி வீடு, வண்டி, வாகனங்கள், மனை வாங்க வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த வேலையாட்கள், கூலியாட்கள் அமைவர். கடன்கள் அதிகரிக்கும், உடல் ஆரோக்யம் சற்று பாதிக்கப்படும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். குழந்தைகளால் எதிர்பாராத தன வரவு அமையும். சுய தொழிலில் முதலீடு செய்யும் முன் ஜனன ஜாதகத்தை ஆராய்ந்து பின் செய்ய வேண்டும். தாய்மாமன்களால் நன்மை ஏற்படும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நன்மை ஏற்படும். ஓட்டல், சுற்றுலா, உணவு, உடை துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவர்.

சனி பகவானின் 7ம் பார்வை பலன்கள்

சனி பகவானின் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10ம் இடத்தை பார்வை செய்வது சிறப்பானது. 10ம் இடம் என்பது உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ், கீர்த்தி அதிகரிக்கும் இடமாகும். தொழிலில் முதலீடு செய்யவும் உங்களை தொழில் முனைவோர் ஆக்கவும் செய்வார் வழி வகுக்கும். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள் மூலமாக பரிசும் பதவியும் கிட்டும். சமூகத்தில் மதிப்பு கூடும். அரசியல் வாழ்வு சிறப்பாக இருக்கும். விருப்பங்கள் தடை ஏற்பட்டு பூர்த்தியாகும். அரசாங்க வேலையில் ஒரு சிலருக்கு முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருங்கிய நண்பர்கள் பிரிந்து செல்வர். வெளிநாடு செல்வதில் நிறைய தடைகள் வந்து சேரும். தொழில் நல்ல லாபம் கிட்டும். தந்தையாரால் எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். பெரிய மனிதர்கள் நட்பு கிடைக்கும்.

சனி பகவானின் 10ம் பார்வை பலன்கள்

சனி பகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் சோம்பலை தள்ளி சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். எந்த செயலையும் தள்ளிப் போடாமல் அன்றே முடிக்க வேண்டும். எதிலும் அவசரமில்லாமல் நிதானமாகச் செயல்பட வேண்டும். சனி பார்வை உங்கள் ராசி மீது படும்போது சோம்பல், சுறுசுறுப்பில்லாமை, தள்ளிப் போடுதல் போன்ற செயல்கள் நடைபெறும். அவரின் பிடியிலிருந்து விடுபட்டாலே பாதி வெற்றிய அடைய முடியும். எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதமாக வந்தாலும் இறுதியில் சாதகமாக அமையும். எது செய்வதாயினும் ஜன ஜாதகத்தை வைத்து ஒரு முறை ஆய்வு செய்த பின் முயற்சியில் இறங்குதல் வேண்டும்.
dhulamதுலாம் ராசி பலன்கள்
சித்திரை 3, 4,ம் பாதங்கள், சுவாதி, விசாகம்

(ர, ரா, ரி, ரு, ரே, ரோ, த, தா, நி, து, தே) போன்ற எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்களும் ஐப்பசி மாதத்தில் பிறன்ந்தவர்களுக்கு இப்பலன் பொருந்தும்)

வான மண்டலத்தில் 7வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதனான சுக்ரன் – நவக்கிரகங்களில் சுபக்கிரகமாகவும் உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பும், சந்தர்ப்பத்தையும் வழங்கவல்லவராக இருக்கிறார். கலை என்ற வார்த்தைக்கு சுக்ரன் என்று அர்த்தம் உள்ள சுக்ரன் வீட்டில் பிறந்த நீங்கள் நல்ல வசீகர தோற்றமும் நல்ல வார்த்தைகளைப் பேசுபவராகவும் விளங்குவீர்கள். உங்களுடன் தொடர்பு கொள்ள பலர் விரும்புவர். யாருக்கும் தீங்கு நினைக்காத உங்களுக்கு எல்லா வய்ப்புகளும் தேடி வருவதையே விரும்புவீர்கள். கடமை உணர்வோடு செயல்படுவதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் வல்லவர் நீங்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் செல்லென்னா துயர், வேதனைகளையும், விரயங்கள் மற்றும் பிரச்சனைகளை கொடுத்து வந்தார். அவர் இப்பொழுது உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பு ஆகும். இதுவரை பட்ட கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலமாகும். இக்காலங்களில் உங்கள் மனதில் இனம்புரியா உற்சாகம் இருந்து கொண்டே இருக்கும். இதுவரை நடவாமல் தள்ளிபோன சுபகாரியங்கள் நடைபெறும் காலமிது. எடுக்கும் முயற்சியில் வெற்றியும், புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் கூடும். தனவரவு பொருள் வரவுடன் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். அதிக நேரத்தில் அலைச்சல்களும் ஏற்பட கூடிய காலம். பிரயாணங்களில் நன்மை உண்டு. உடன் பிறந்தவர்கள், உறவினர்களால் நன்மை உண்டாகும்.

புது உறவுகளால் நன்மை ஏற்பட கூடிய நேரம். அதிகப்படியான உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. வேலையில் இடமாற்றம் ஊர் மாற்றம் மற்றும் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி அதன் மூலம் வருமானம் வரக்கூடிய காலம். உங்களைப் பற்றிய வதந்திகள் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் கவனம் தேவை. கல்வியில் கவனம் தேவை. சொத்துக்களை வாங்கி விற்க நேரிடும்.

காதல் விஷயங்கள் சந்தோஷமாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். இனி சுபகாரியங்கள் நடக்கும் காலம். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்கள் படிப்பு, வேலை, வெளிநாடு இவைகள் சாதகமாக இருந்து வரும். பங்கு சந்தை மற்றும் ரேஸ், லாட்டரி, கிளப், விருந்து, உல்லாசம் நல்ல லாபகரமாகவும். பொருட்களை அடகு வைக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.

வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை, வேலையில் உற்சாகம், சுறுசுறுப்பு மற்றும் வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வும் ஏற்படும், உங்களது ராசிக்கு இன் 4ம் மற்றும் 5ம் இடத்திற்கு சனிபகவான் அதிபதியாக இருப்பதால் தாங்கள் பார்க்கும் வேலையில் மிக கவனத்துடன் இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும். வரும் பணத்தை முறையாக சேமித்தல் நலம். எதையும் நன்கு ஆராய்ந்து பின் கடன் கொடுக்கவோ, வாங்கவோ ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டிய சமயம். கடன் வாங்குவதை தவிர்க்கவும். மனதில் இனம் புரியாத பயம், குழப்பம் தோன்றும் காலம் எனவே சிந்தித்து செயலாற்றவும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நன்மை ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற மனச் சஞ்சலம் ஏற்படும். தாய் மாமன்கள் ஆதரவு கிட்டும். தாயாரின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் காலம் வெளிநாட்டு தொடர்பு சாதகமாக இராது. ஆன்மீக பயணங்கள் தொடரும் நண்பர்கள் பிரிந்து இணையும் காலம். கணவன் மனைவி உறவு சுமூகமாக சந்தோஷமாக இருக்கும்.

வேலை அல்லது உத்யோகம் (JOB)

வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு வேலையில் திருப்தியான நிலை மற்றும் விருப்பமான வேலை, எதிர்பார்த்த வருமானத்துடன் கூடிய வேலை வந்து சேரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் உண்டு. வேலையில் இதுவரை இருந்து வந்த இறுக்க நிலை தளர்ந்து நற்பலன் உண்டாகும். வெளியூர், அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.

தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

சிறு தொழில்கள், சாலையோர வியாபாரம், கமிஷன் ஏஜென்ஸிஸ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி, புரோக்கர், தகவல் தொடர்பு போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி இறக்குமதி போன்ற அனைத்து துறைகளும் லாபகரமாக இயங்கும். புதிய தொழில்கள் மற்றும் கூட்டாளிகளுடன் தொழில் தொடங்க வாய்ப்பும் ஏற்படும். மற்றும் உடல் உழைப்பு சார்ந்த துறைகள், இரும்பு, எஃகு, சிமெண்ட், ரசாயனம், கனிம வளங்கள் நல்ல லாபகரமாக இயங்கும். சாலையோர விற்பனையாளர்கள், விளம்பரப் பிரதிநிதிகள் நல்ல லாபம் அடையும் காலம். மற்றும் தகவல் தொடர்பு, பத்திரிக்கை, உல்லாச கேளிக்கைகள், வர்த்தக நிறுவனங்கள் எதிர்பார்த்த லாபம் பெறுவர். உற்பத்தி சார்ந்த துறைகள் வளர்ச்சி குன்றியும். அதில் விற்பனை துறைகள் ஏற்றமுடன் இயங்கும், மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல், கல்விதுறை, நிதி, நீதி, அழகு சாதன துறை லாபகரமாகவும் பங்கு சந்தை வளர்ச்சி குறைந்தும் பத்திரிக்கை, எழுத்து சாதகமாக இருக்கும். கப்பல், மீன், நீர், உப்பு சார்ந்த துறைகள் சற்று லாபகரமாக அமையும்.

விவசாயம்

விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்க சற்று போராட வேண்டியது இருக்கும். இருப்பினும் வருமானம் தாரளமாக இருந்து வரும். கடலை, வாழை, தென்னை, எள், பயறு வகைகள் நல்ல லாபகரமாகவும், கோதுமை, பருப்பு மற்றும் காய்கறிகள் பழங்கள் இவற்றில் லாபம் சற்று குறைந்தும் காணப்படும். புதிய நிலங்கள் வாங்கவும் ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும்.

அரசியல்

அரசியல் வாழ்வு சாதகமாக இருந்து வரும். தொண்டர்களின் உண்மையான அன்பும் ஆதரவும் கிட்டும். பட்டம், பதவி, பொறுப்புகள் தாமாக வந்து சேரும். பொருளாதார நிலையில் நல்ல ஏற்றம் காணப்படும். சொத்துக்கள் வந்து சேரும். அரசால் ஆதாயம் ஏற்படும். வழக்குகள் சாதகமாக வந்து சேரும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். எதிரிகளால் தொல்லைகள் குறையும். எதையும் தைரியமாக சந்திக்கும் ஆற்றலும் சந்தர்ப்பமும் அமையும்.

கலை

இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் இனி இனிதே நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அதனால் பெரிய அளவில் லாபமும் வருமானமும் கூடும். ஜோதிடம், இசை, நடனம், நாட்டியம், ஓவியம், சிற்பக்கலை லாபகரமாக இருந்து வரும். தேவையற்ற பேச்சுகளைக் குறைத்து உழைப்பை அதிகமாக சிந்தி பணத்தை சம்பாதிக்கும் நேரம் இது. உழைப்பை தாரக மந்திரமாக வைத்திருக்கவும். சினிமா, நாடகம், போன்ற துறைகளில் நல்ல வருமானம் வந்து சேரும். ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வந்து சேரும்.

மாணவர்கள்

படிப்பில் அதிகக் கவனம் தேவை. 3ம் இடத்தில் சனி சஞ்சாரம் ஞாபக சக்தியை குறைப்பார். சோம்பலை அதிகபடுத்துவார்.படிப்பில் நாட்டத்தை குறைப்பார். எனவே தொடர்ச்சியாக டியூசன் சென்று வருதல் நலம். தேவையற்ற விஷயங்களில் மனைதைச் செலுத்துதல் கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படும். பரிசும் பாராட்டும் வரும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் சேர்வதில் நிறைய தடைகள் ஏற்பட்டு விலகும்.

பெண்கள்

இதுவரை தடையான நல்ல விஷயங்கள் இனிதே நடந்தேறும். எதிர்பார்க்கும் செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய முயற்சிகளில் ஈடுபட புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் அமையும். உடன் பணிபுரிவர்களின் அன்பும் ஒத்துழைப்பும் கிட்டும். அடிக்கடி பயணங்கள் அமையும். அதனால் நன்மைகளும் அதே சமயம் அலைச்சல்களும் கூடும். உடலும் உள்ளமும் சமயங்களில் சோர்ந்து விடும். உடலில் அடிக்கடி சளித் தொல்லைகள் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடவோ, சிந்திக்கவோ கூடாது. குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை சாதகமாக அமையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். காதல் விஷயங்கள் மகிச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு சுமூகமாக இருந்து வரும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அவர்களால் நன்மையும் ஏற்படும். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் அடிக்கடி அமையும். வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் அமையும்.

உடல் ஆரோக்யம்

நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். சர்க்கரை வியாதி, உப்பு சத்து இருப்பின் அதனைக் கட்டுக்குள் வைத்துப் பழகவும். உடலில் சளித் தொல்லைகள், தேமல், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளல் அவசியம்.

சனி பகவானின் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள் (மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)

மூலம்

சனி பகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பார்க்கும் வேலையில் அதிக கவனம் தேவை. தேவை இல்லாமல் வேலை மாற்றம் மற்றும் கம்பெனி மாற்றம் கூடாது. அலைச்சல்கள் அதிகரிக்கும் நேரம். உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதம் ஆனாலும் நல்லபடியாக அமையும். நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். காலி மனை வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை ஒரு சிலருக்கு அடிக்கடி அமையும். குழந்தைகளை விட்டுப் பிரிய நேரிடும். இல்லையேல் குழந்தைகளுக்காக நிறையச் செலவிடுதல் வேண்டும். வெளி வட்டார பழக்கங்கள் கூடும். புது நண்பர்கள் அல்லது உறவுகள் அமையும். தாயாரின் உடல் நலத்திலும் உங்களுடைய உடல் நலத்திலும் அதிகக் கவனம் தேவை. பாஸ்போர்ட், விசா கிடைக்காதவர்களுக்கு விரைவில் வந்து சேரும். காதல் விஷயங்கள் சற்று சுமாராக இருந்து வரும்.

பூராடம்

இதுவரை வராமல் இருந்த பணம், பொருள் எல்லாம் வந்து சேரும். முன்னோர்கள் சொத்து அல்லது கணவன் மனைவி மூலம் பொருள் வரவு அல்லது எதிர்பாராத தனவரவு வந்து சேரும். வெளிநாடு செல்வதில் நிறைய தடைகள் ஏற்பட்டுப் பின் செல்ல வாய்ப்பு அமையும். காதல் விஷயங்களில் நிறைய தடை ஏற்பட்டு விலகும். எடுக்கும் புது முயற்சிகளில் அதிக கவனம் தேவை. யாருக்கும் பணமோ பொருளோ தேவையில்லாமல் கொடுத்தல் கூடாது. உங்களது உழைப்பு மற்றவர்களுக்கு ஆதாயம் ஆகும். வேலையில் நிதானம் தேவை. தந்தையாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. உழைப்புகேற்ற ஊதியம் கிடையாது. எதிர்பார்த்த லாபம் முடங்கி கொள்ளும். அல்லது மாட்டிக் கொள்ளும். வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. அரசு மற்றும் அரசு ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுதல் கூடாது.

உத்தராடம்

இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன சுப காரியங்கள் இனிதே நடந்தேறும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் அமையும். விருந்து கேளிக்கைகளில் மன ஈடுபாடு அதிகரிக்கும். அடிக்கடி சுற்றுலா செல்ல வாய்ப்புகள் வந்து போகும். விசா, பாஸ்போர்ட் விரைவில் வந்து சேரும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். பார்க்கும் வேலையை அவசரபட்டு விட்டுவிடகூடாது. உழைப்புகேற்ற ஊதியம் சரியாக அமையாது. சுய தொழில்கள், சிறு தொழில்கள் செய்ய சாதகமான சூழ்நிலை வந்து சேரும். விளையாட்டுகளில் ஆர்வமும் உற்சாகமும் அதிகரிக்கும்.

கேட்டை

உயர்கல்வி பயில சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் யோகமும் ஒரு சிலருக்கு அமையும். விரயச் செலவுகள் அடிக்கடி வந்து போகும். வீடு மற்றும் ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு வந்து சேரும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற கடன் வாங்குதல் கூடாது. உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். புது முயற்சிகளில் அதிக கவனமுடன் இருக்கவும். அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். அதனால் அலைச்சல்களும் அசதியும்தான் அதிகரிக்கும்.

துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

புதிய தொழில் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரித்துக் காணப்படும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். தேவையற்ற பிரச்சனைகள் வந்து போகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்பு வந்து சேரும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக அமையும். கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். வண்டி வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். சகோதர சகோதரிகளுக்கு சுப காரியங்கள் இனிதே நடந்தேறும். பயணங்களில் எதிர்பாராத தடையேற்பட்டுப் பின் பயணம் தொடரும். வேலையில் மாற்றங்கள் ஏற்படும். நிலம், சொத்துப் பிரச்சனைகள் இழுபறியாகவே இருந்து வரும். அரசாங்கம் மற்றும் அரசாங்க காரியங்கள் எளிதாக நடந்தேறும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து போகும். வேலைக்கு ஏற்ற ஊதியம் கைக்கு வருவதில் தடைகள் இருந்து வரும்.

துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

எடுக்கும் முயற்சிகள் சாதகமாக வந்து சேரும். அரசால் பெரிய மனிதர்களால் எதிர்பாராத நற்காரியம் நடந்தேறும். அந்நிய பாஷை பேசும் மனிதர்களால் எதிர்பாராத நன்மைகள் அமையும். மூத்த சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் நடந்தேறும். அவர்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். வெளிநாடுகள் செல்வதில் நிறையத் தடைகள் ஏற்படும் உயர்கல்வி பயில சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பம் அமையும். உற்பத்தி சார்ந்த துறைகள், சிறு தொழில்கள் லாபகரமாக இருக்கும். வேலையில் முன்னேற்றமும் எதிர்பார்த்த ஊதியம் வந்து சேரும். நண்பர்களிடம் இதுவரை இருந்து வந்த பிணக்குகள் நீங்கி நட்பு பாராட்ட வாய்ப்பு அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு திருமணத்தில் முடியும். குழந்தை பாக்யம் இலலதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும். நெருங்கிய உறவினர்களின் அன்பும் ஆதரவும் வந்து சேரும்.

துலாம் ராசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

விசாக நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு சனிபகவான் இதுவரை வேலையில் இருந்த தடைகளை நிவர்த்தி செய்து வேலையில் அமர்த்தி அழகு பார்ப்பார். எதிர்பார்த்த ஊதியத்துடன் வேலை கிடைக்கச் செய்வார். தேவையான பணப்புழக்கம் இருக்கும். வழக்குகளில் எதிர்பாரத வெற்றியை அளிப்பார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கச் செய்வார். திருமணத்தில் நிறைய தடைகளை உண்டு பன்ணி பின் சுபகாரியத்தை நடத்துவார். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யத்தை அளிப்பார். தொழில் லாபத்தை குறைத்து அளிப்பார். புதுத் தொழிலில் தொடங்குவதில் அதிக கவனம் தேவை. குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கச் செய்வார். வெளிநாடு செல்வதில் இதுவரை இருந்து வந்த தடைகளை நிவர்த்தி செய்து வெளிநாடிற்கு அனுப்பி அழகு பார்ப்பார். அதனால் வருமானத்தையும் அதிகரிக்க செய்வார்.

 

சனி பகவானின் 3ம் பார்வை பலன்கள்

சனி பகவான் 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம் இடத்தை பார்வை செய்வதால் காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். அதே சமயம் விருந்து கேளிக்கைகள் சுற்றுலா இவற்றில் ஆர்வமும் ஆசையும் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கச் செய்வார். கட்டிய வீடு வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். பார்க்கும் வேலையை விட்டு வெளியே வரச் செய்வார். பணம், பொருள் இவற்றை மொத்தமாக முடக்கி வைப்பார். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ளச் செய்வார். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவார். பணம் கொடுக்கல் வாங்கலில் தேவையற்ற மனஸ்தாபத்தை உருவாக்குவார். வழக்குகள் சாதகமாக இராது. அரசு வேலை கிடைப்பதில் தாமதப்படுத்துவார். குடும்பத்தில் புது வரவு வரச் செய்வார். வீடு, கடை இவைகளில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வைப்பார்.

சனியின் 7ம் பார்வை பலன்கள்

சனி பகவான் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 9ம் இடத்தை பார்வை செய்வதால் உயர்கல்வி பயிலுவதில் இதுவரை இருந்து வந்த தடைகளை நிவர்த்தி செய்வார். வெளியூர் வெளிநாடு அல்லது நீண்ட தூர பயணம் குறிப்பாக நீண்ட தூர ஸ்தல யாத்திரை செய்ய வைப்பார். குடும்பத்தில் பேரன், பேத்திகள் போன்ற புது வரவுகளை வர வைப்பார். ஒரு சிலருக்கு 2வது திருமணம் நடக்கும் அமைப்பை கொடுப்பார். அரசாங்க வேலையை விடச் செய்வார். தந்தையாரால் எதிர்பாராத அன்பும் ஆதரவும் கிடைக்கச் செய்வார். அடிக்கடி ஆன்மீகம் மற்றும் தெய்வீக விஷயங்களில் நாட்டம் கொள்ள செய்வார். சுப காரியங்களில் அடிக்கடி கலந்து கொள்ளச் செய்வார். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த துறைகளில் இறங்க செய்வார். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களை செய்ய வைப்பார்.

சனியின் 10ம் பார்வை பலன்கள்

சனி பகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12ம் இடத்தை பார்ப்பது புதிய விஷயங்களில் முதலீடு செய்ய வழி வகுக்கும். வெளிநாடு செல்வதில் உள்ள தடை விலகும். தேவையற்ற சோம்பல் உருவாக்குவார். அன்றைய வேலைகளை தள்ளி போடாமல் முடிப்பது நலம். நல்ல உறக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. பெரிய விஷயங்களில் தலையிடுதல் கூடாது. தேவையற்ற கடனோ, தேவையற்ற துறைகளில் முதலீடோ கூடாது. அடிக்கடி உடல் ஆரோக்யம் பாதிக்கப்படும். வைத்திய செலவுகள் அதிகரிக்கும். அடிவயிறு நரம்பு சம்பந்தமான மற்றும் கிறுகிறுப்பு போன்ற உடல் உபாதைகளை உருவாக்குவார். தாய் தந்தை உடலில் கவனம் தேவை. சுபச் செலவுகளை விரும்பி ஏற்று செயல்படுத்துதல் அவசியமாகும்.
viruchigamவிருச்சிகம் ராசி
(விசாகம் 4ம் பாதம், அனுஷம் கேட்டை)

(தோ, ந, நா, நி, நீ, நு, நூ, நே, நோ, ய, யா, யு) போன்ற எழுத்துக்களில் பெயரை முதலாகக் கொண்டவர்களுக்கும் கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்)

வான மண்டலத்தில் 8வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதனான செவ்வாய் பகவான் நவக்கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுவார். இவரை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் உடல்பலமும், உள்ள பலமும் கொண்டவராக திகழ்வீர்கள். தனக்கு மேல் ஒரு சக்தி இயங்குகிறது என்பதில் நம்பிக்கையுடனும் மற்றவர்களிடம் இருந்து தனித்தும், சுயமாக சிந்திக்கும் ஆற்றல் உடையவராகவும், எதையும் தலைமை ஏற்று நடத்தும் திறம் கொண்டவர்களாகவும், மற்றவர்களை வசியப்படுத்தி தங்கள் வழிக்கு கொண்டு வருவதில் வல்லவர்களாகத் திகழ்வீர்கள்.

இத்தகைய வல்லமை உடைய உங்களது ராசியில் இதுவரை ஜென்மச் சனியாக சனிபகவான் சஞ்சரித்து வந்தார். இதுகானும் தேவையற்ற செலவினங்களையும் எதிர்பார்த்த உழைப்புகேற்ற பலனும் இல்லாமல் எக்காரியத்திலும் தடையும் தள்ளிபோடும் நிலையும் உருவாகி இருந்த நிலை மாறி – சனி பகவான் சற்று உங்கள் ராசி மாறி உங்களுடைய 2ம் இடமான தன ஸ்தானம் மற்றும் குடும்ப வாக்கு ஸ்தானம் வருவது சற்று பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எந்த வேலையும் முடிக்காமல் தள்ளி போட்ட நிலை மாறும் இதுவரை உங்கள் ராசு ஜென்மராசியாக இருந்தவர் மாறி 2ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ், ஓரளவு காப்பாற்றப்படும். இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். இதுவரை தேகத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பும் வேகம் விவேகம் ஆரம்பமாகும். சமூகத்தில் சற்று பிரபலமாக வலம்வர வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். இதுவரை இருந்த வந்த கவலை, வேதனை, அசிங்கம் அச்சம், அவமானம் கஷ்டம் இவற்றிலிருந்து விடுபட்டு புதுவிதமான வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பயணம் ஆரம்பிக்கும்.

உங்கள் ராசிக்கு 3ம் வீட்டிற்கும் 4ம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் 2ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பசனி – குடும்பத்திற்கு ஆகாது. என்றே கூறுவர். அதை பற்றிய கவலைகளை தூக்கி எறிந்து விடவும். சனிபகவான் 3ம் வீட்டிற்கும் 4ம் வீட்டிற்கு அதிபதியாகி அவர் 2ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். உறவினர்களால் பொருள் வரவு அல்லது சகாயம் ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டியது வரும். அந்தப் பயணங்களால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.

உங்களை பற்றிய வீண் வதந்திகள் உலவிக் கொண்டிருக்கும். உங்களை பற்றிய விமர்சனங்களையும் தூக்கு எறிந்து எண்ணிய செயலில் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்த்த வெற்றி நிச்சயம். இதுவரை வராமல் நிலுவையில் இருந்து வந்த பணம், பொருள், நகை, பத்திரங்கள் தாமகவே வந்து சேரும். விடு மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு அடிக்கடி அமையும். காலிமனை, கட்டிய வீடு, வண்டி வாகனங்களால் மற்றும் நிறைய வீட்டு உபயோக பொருட்கள் தாமகவே வீடு வந்து சேரும். தாயாரின் அன்பும் ஆதரவும் அவர்களால் நன்மையும் ஏற்படும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை.

பேச்சில் அதிக கவனம் தேவை. தேவையற்ற விஷயங்கள் பேசுவதோ எழுதவோ கூடாது. மற்றவர்கள் விஷயங்களில் அநாவசியமாக தலையிடுதல் கூடாது. கூடியவரை அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்து வருதல் வேண்டும். பணவரவு பொருள் வரவு தாரளமாக இருந்து வரும். தேவையற்ற செலவினங்களும் வரும். கூடிய வரை சுபச் செலவுகள் செய்துவர நன்மை ஏற்படும். யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. கொடுத்த பணம் வருவதில் சற்று தடை ஏற்பட்டாலும் கண்டிப்பாக தவணை முறையில் வந்து சேரும்.

காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் திருமணம் என்று வரும்பொழுது சற்று போராட்டமே ஆகும். கூட்டு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் வரும் புது வரவால் நன்மையும் தீமையும் கலந்தே காணப்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். அரசாங்க கடன் விஷயத்தில் அதிக கவனம் தேவை. வழக்குகள் சாதகமாக இருந்து வரும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு அதிகம். தேவையற்ற விஷயங்களை இருவரும் பேசுதல் கூடாது. தேவையில்லாமல் மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் இழுக்க கூடாது. வேலையில் அதிக முன்னேற்றம் அமையும். சுய தொழில்களால் நன்மை ஏற்படும். பங்கு சந்தைகள் ஓரளவு சாதகமான பலன் தரும். நண்பர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்வதில் சற்று தடைகள் ஏற்பட்டு பின் நிவர்த்தியாகும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் அதிகரித்து காணப்படும்.

வேலை அல்லது உத்யோகம் (JOB)

உங்களுடைய ராசிக்கு 3, 6ம் அதிபதியாக குரு சாதகமான இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் எதிர்பார்த்த வேலை அமைய வாய்ப்பு அமையும். அதே சமயம் 2ம் இடம் சனி என்பதால் எப்பொழுதும் பற்றாக்குறையான சூழ்நிலை உலவி வரும். வேலை தேடுபவர்களுக்கு ஓரளவு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அதே சமயம் அதிக உழைப்பு குறைந்த வருமானம் என்ற அளவில் சனியின் தன்மை இருக்கும். வேலை காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். வேலையில் முன்னேற்றமும் உயர்வும் ஏற்படும். அடிக்கடி வேலை மாற சந்தர்ப்பங்கள் வந்து சேரும். வேலையில் அலைச்சல் அதிகரிக்கும். சக ஊழியர்களால் நன்மை ஏற்படும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும்.

தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

சுய தொழில்கள், சிறு தொழில்கள் உற்பத்தி சார்ந்த துறைகள், கனரகத் தொழில்கள் ஓரளவு சாதகமாக இருந்து வரும். முதலீடு சாதகமாக இருந்து வரும். கொள்முதலில் ஓரளவு கவனமாக இருத்தல் வேண்டும். தேவைக்கேற்ப கொள்முதல் அவசியம், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் தகவல் தொடர்பு துறைகள் லாபகரமாக அமையும். இரும்பு, எஃகு, சிமெண்ட், நிலக்கரி, எண்ணெய் வித்துக்கள், ரசாயனம், கனிம வளங்கள், நல்ல லாபகரமாக அமையும். ஆடை, ஆபரணம், தோல், ஈயம், தகரம், சற்று சுமாராக இருந்து வரும். ஓட்டல், சுற்றுலா, உணவு லாபகரமாக இருந்து வரும். தகவல் தொடர்பு போக்குவரத்து வண்டி வாகனங்கள், பத்திரிக்கை சாதகமாக இருந்து வரும். சாலையோர வியாபாரம் நல்ல லாபகரமாகவும் கூட்டுத் தொழில் சுமாரகவும் இருந்து வரும். ஏற்றுமதி இறக்குமதி சீராக இருந்து வரும். விஞ்ஞானம், ரசாயனம், பொறியியல், கட்டுமானத் துறைகள் சற்று லாபம் குறைந்தும் ரியல் எஸ்டேட், கமிஷன் ஏஜென்ஸீஸ், புரோக்கர்ஸ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி சாதகமாக இருந்து வரும். பள்ளி கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஓரளவு சாதகமாக இருந்து வரும். கப்பல் நீர், மீன் பிடித் தொழில் சுமாராக இருந்து வரும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் உயர்ந்தும், பிளாஸ்டிக், மரம், உரம் இவைகள் லாபம் குறைந்தும் காணப்படும். சினிமா, ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகள் சிறந்து விளங்கும்.

விவசாயம்

பயிர்சாகுபடி பரப்பு ஒரு சிலருக்கு அதிகரித்துக் காணப்படும். பூ வகைகள், தானியங்கள், பருப்பு வகைகள் எண்ணெய் வித்துக்கள் ஓரள்வு லாபகரமாக அமையும். காய்கறிகள், பழங்கள் உற்பத்தி அதிகமாக இருப்பினும் விளைச்சலுக்கேற்ற விலை கிடைப்பதில் சற்று சிரமமாக அமையும். வண்டி வாகனங்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு வந்து சேரும். வாழை கரும்பு, நெல், கோதுமை, தேயிலை, ஏலம், கிராம்பு போன்ற பணப்பயிர்கள் ஓரளவு சாதகமாக இருக்கும். பருவத்தை அனுசரித்து சாகுபடி செய்வது நலம்.

அரசியல்

உங்களைப் பற்றிய அவப் பெயர்கள் வந்து போகும். அரசியலில் புது எழுச்சிப் பெறுவீர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய காலம் இதுவாகும். மறைமுக எதிரிகள் இருப்பினும் அவர்களை எளிதில் வெற்றி கொள்ளும் அறிவும் சாமர்த்தியமும் பலமும் தானகவே வந்து சேரும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்தல் நலம். அரசியலில் உயர்பதவி அந்தஸ்து கூடி வரும். மக்களின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் இயற்கையாகவே வந்து சேரும். உங்களது மதிப்பை நீங்கள் உயர்த்தி கொள்ள வேண்டிய தருணம்.

கலை

உங்களுடைய இருட்டான வாழ்க்கை மறைந்து ஓரளவு ஓளிமயமான வாழ்க்கை உருவாகும். உங்களது அறிவு திறமை வெளிப்பட வேண்டிய தருணம். புது ஒப்பந்தங்கள் தாரளமாக அமையும். அதனால் பொருள்வரவும் பணவரவும் அமையும். ஒப்பனை, அலங்காரம், சினிமா, இசை, நடனம், நாட்டியம், ஓவியம் சிற்பம், ஜோதிடம் சிறந்து விளங்கும். கலைஞர்களுக்கு ஓரளவு ஏற்றமான காலமாகும். மக்களின் வரவேற்பு, பாராட்டு, ஆதரவு, பரிசு, பட்டங்கள் தாமகவே ஒரு சிலருக்கு வந்து போகும்.

மாணவர்கள்

மறதி என்பதை மறைந்து உற்சாகமாக இருக்கப் பழகுங்கள். புதிய விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். விளையாட்டுகளில் ஆர்வமும், பரிசும் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பை ஒழுங்காக படித்தல் அவசியம். கல்வி கடன்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க சற்றும் போரட வேண்டி வரும்.

பெண்கள்

நல்ல வேலையாட்களுக்காகப் போராடிய உங்களுக்கு நல்ல வேலையாட்கள் அமைவார்கள். இதுவரை இருந்து வந்த அலைச்சல்கள் குறைந்து சற்று நிம்மதியான சூழ்நிலை உருவாகும். இதுகானும் மனதில் இருந்து வந்த இனம் தெரியாத பயம், கவலை, மனக் குழப்பம் நீங்கி அதிலிருந்து விடுபட வாய்ப்புகள் அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். எடுக்கும் புது முயற்சிகள் சாதகமாக இருந்து வரும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் புது வரவு அமையும். அதனால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை அமையும். வேலையில் உயர்வும், பொறுப்பும் அதிகரிக்கும். புதிய ஆடை ஆபரணம், வீடு வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். வெளிநாடு செல்வதில் நிறையத் தடைகள் ஏற்படும். விருந்து கேளிக்கை, சுற்றுலா இவைகளில் மனம் மகிழ்ச்சி அடையும். சமூகத்தில் சற்று மதிப்பும் மரியாதையும் கூடும்.

உடல் ஆரோக்யம்

உடம்பில் தேமல், சொறி, சிரங்கு இவைகள் வராமல் அல்லது பரவாமம் பார்த்துக் கொள்ளல் அவசியம். நேரத்திற்கு அவசியமாக உணவருந்துதல் வேண்டும். சர்க்கரை நோய் இருப்பின் அதை கட்டுக்குள் வைத்து பழகவும். தலை, முகம் அடி வயிறு போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனை, கால், பாதம் இவற்றில் நோய் வராமல் மற்றும் பரவாமல் பார்த்துக் கொள்ளவும்.

சனி பகவானின் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள் (மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)

மூலம்

சனிபகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது உங்களது முயற்சிகளில் போராட்டம் இருப்பினும் இறுதியில் வெற்றி கிட்டும். உங்களைப் பற்றிய வீண் வந்தந்திகள் பரவியபடி இருக்கும். அவை நல்ல செய்திகளாக இராது. வீடு வாங்க சொத்து வாங்க சந்தர்ப்பம் அமையும். உயர்கல்வி பயில வாய்ப்பு கிட்டும். விவசாயம் நல்லவிதமாக அமையும். சுயதொழில், சிறு தொழில் உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று லாபாரமாக இருக்கும். பங்கு சந்தை சாதகமாக அமையும். கலைத் துறை ஏற்றம் மிகுந்து காணப்படும். பெயர், புகழ் கிட்டும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் சற்று தடை ஏற்படும். பாஸ்போர்ட் விசா, எளிதில் வந்து சேரும். வெளியூர், வெளிநாடு செல்வதில் இழுபறி நிலை இருக்கும். பழைய கடன்களை அடைக்கவும், புதிய கடன் வாங்கவும் வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலை ஓரே சீராக இருக்கும். பணப்புழக்கப் தாரளமாக இருந்து வரும். நெருங்கிய உறவினர்களைப் பிரிய நேரிடும்.

பூராடம்

சுப நிகழ்ச்சியான இதுவரை நடை பெறாமல் தள்ளிப் போன திருமணம், குழந்தை பாக்யம் அமைய வாய்ப்பு அமையும். சுய தொழில் கூட்டுத் தொழிலில் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீடுகளைத் தவிர்த்தல் நலம். இளைய சகோதர சகோதரிகளுக்கு வேலை மற்றும் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் அவசியம். யாரையும் தூக்கி எறிந்து பேசாமல் இதமாக பேசிப் பழகுதல் வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி துறைகள் சற்று சுமாராக இருந்து வரும். லாபம் சற்று குறைந்து காணப்படும். வழக்குகள் சற்று இழுபறியாக இருந்து வரும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்கக் கூடாது. பார்க்கும் வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை ஏற்பட்டாலும் வேலையை விட்டு விடுதல் கூடாது.

 

உத்தராடம்

அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள் மூலமாக சாதகமான பலன்கள் நடந்தேற வாய்ப்புகள் உண்டு. கௌரவம் அந்தஸ்து புகழ் ஏற்படும். முதலாளி என்ற அந்தஸ்து உள்ளவர்களின் புகழ் கூடும். வெளிநாடு செல்வதில் நிறைய தடைகள் ஏற்பட்டு விலகும். உற்பத்தி சார்ந்த துறைகள், கனரகத் தொழில்கள் விவசாயம் சாதகமாக இருந்து வரும். அடிக்கடி விருந்து கேளிக்கை சுற்றுலா இவற்றில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை இருப்பினும் பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக்கூடாது. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் சற்று அதிகரிக்கும். முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பங்குச் சந்தை சாதகமாக இருக்கும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிடைக்கும். அரசியல் வாழ்வு மிகவும் ஏற்றமுடன் இருந்து வரும். நண்பர்கள் பிரியும் நேரம் அவர்களால் மனவேதனைகளும் ஏற்படும்.

கேட்டை

எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கிட்டும். முன்னோர்கள் சொத்து கணவன் அல்லது மனைவி மூலம் வருமானம் வந்து சேரும். கொடுத்த பணம் வட்டியுடன் வந்து சேரும். பென்ஷன், பி.எப். கிராஜிவட்டி, போனஸ் போன்ற வராத பணங்கள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபகரமாக அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். எதிர்பார்த்த வேலையாட்கள் வந்து சேர்வார். மனை, வீடு, வண்டி வாகனங்களை முதலில் கொடுத்து விட்டுப் பின் புதிதாக வாங்க சந்தர்ப்பம் அமையும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்க சந்தர்ப்பம் அமையும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

விசாகம் 4ம் பாதத்தில் பிறந்த உங்களுக்கு சனி பகவான் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் ஓரளவு சுப காரியங்களில் ஈடுபடச் செய்வார். காதல், திருமணம், குழந்தை போன்ற விஷயங்களில் மகிழ்ச்சியும், சந்தோஷத்தையும் உண்டு பண்னுவார். குழந்தைகளுக்கு சுபகாரியம் நடக்க வைப்பார். யாருக்கும் தேவை இல்லாமல் பணம் கடன் கொடுத்தல் கூடாது. பார்க்கும் வேலையை விட்டுவிடக் கூடாது. மனதில் இனம்புரியாத மகிழ்ச்சியும் சந்தோஷமும் இருந்து வரும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். விருந்து கேளிக்கை சுற்றுலா போன்ற விஷயங்களில் ஈடுபாடும் மகிழ்ச்சியும் ஏற்படும். அடிக்கடி ஆலா தரிசன்ம், தெய்வ தரிசனம் அமையும். பெரிய மனிதர்கள் அன்பும் நட்பும் ஆதரவும் கிட்டும். பாஸ்போர்ட், விசா இவற்றில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் மாற்றம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் நீங்கும். சுய தொழிலில் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீட்டை தவிர்த்தல் உத்தமம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

அனுஷம் நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களில் பணவரவும் பொருள் வரவும் சீராக இருந்து வரும். இடமாற்றம் மனை மாற்றம் ஒரு சிலருகு ஊர் மாற்றமும் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதமாக வந்தாலும் சாதகமாக வந்து சேரும். புதிய முயற்சிகளில் அதிக கவனம் தேவை. உற்பத்தி சார்ந்த துறைகளில் நல்ல லாபம் ஏற்படும். சிறு தொழில், சுய தொழில், சாலையோர வியாபாரம் சாதகமாக இருந்து வரும். பணப்புழக்கங்கள் தாரளமாக இருந்து வரும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக கவனம் தேவை. ஏற்றுமதி இறக்குமதி சாதகமாக இருந்து வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் நிறையத் தடைகள் ஏற்படும். பழைய பொருளை விற்று புதுப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம ஏற்படும். தாயாரால் எதிர்பாரத நன்மைகள் ஏற்படும். வேலை கிடைத்தாலும் திருப்தியற்ற சூழ்நிலையும் மந்தமான போக்கும் அமையும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும

எப்பொழுது பரபரப்புடனும் வேகத்துடனும் செயல்பட வைப்பார். எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கொடுக்க வைப்பார். கணவன் அல்லது மனைவி மூலம் பொருள் வரத்தை கொடுப்பார். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இதுவரை வராமல் இருந்த வந்த பணம், பொருள், நகைகள், பத்திரங்கள், தவணை முறையில் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் கூடும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் நடந்தேறும். அவர்களுக்கு வேலை திருமணம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். புதிய உறவுகள் அமையும். எதிர்பாராத நண்பர்கள் சந்திப்பும் அதனால் நன்மையும். விபத்து அறுவை சிகிச்சை போன்ற விஷயங்கள் நடந்தேற வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். கணவன் மனைவி உறவு சாதகமாக இருந்து வரும். வெளிநாட்டுத் தொடர்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்யத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு விலகும்.

 

சனியின் 3ம் பார்வை பலன்கள்

சனிபகவான் 3ம் பார்வையாக உங்கள் ராசியின் 4ம் இடத்தை பார்ப்பதால் தடைபட்ட உயர் கல்வி தொடரும். தாயருக்கு வரவேண்டிய பண வரவுகள் வந்து சேரும். தாயாரின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். இடம், வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்படும். அடிக்கடி உடல் நல குறைபாடு ஏற்படும். விருந்து, கேளிக்கை, சுற்றுலாக்களில் மனம் விரும்பாது. குழந்தைகள் உங்களை வீட்டுப் பிரிய நேரிடும். அல்லது குழந்தைகளுக்க்காக நிறையச் செலவு செய்ய வேண்டி வரும். பார்க்கும் வேலையில் ஒரு திருப்தியற்ற நிலையும் அமையும். சுய தொழில்களில் லாபம் குறைவாக இருக்கும். அதே சமயம் சாலையோர, வியாபாரம், சிறுந்தொழில், குறுந்தொழில், கைவினைப் பொருட்கள் நல்ல லாபகரமாக அமையும். அடிக்கடி உடல் சோர்வு, மன உலைச்சல்கள் ஏற்படும்.

சனியின் 7ம் பார்வை பலன்கள்

சனி பகவான் 7ம் பார்வையாக உங்களது ராசிக்கு 8ம் வீட்டை பார்ப்பதால் தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் கவனமாக சென்று வருதல் வேண்டும். அறுவை சிகிச்சை செய்ய உகந்த காலமாகும். கடன் வாங்குவதில் கவனம் தேவை. தேவையற்ற கடனை தவிர்த்தல் நலம் தந்தையாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. உயர் கல்வி பயிலுவதில் தடைகள் வந்து போகும். வெளிநாடு செல்வதில் தடைகள் ஏற்படும். பார்க்கும் வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகள் ஒத்துழைப்பு குறைந்து காணப்படும். தேவையற்ற குழப்பங்களும் மன வேதனையும் ஏற்படும்.

சனியின் 10ம் பார்வை பலன்கள்

ஒரு பக்கம் 7ம் பார்வையாக 8ம் இடத்தைப் பார்க்கும் சனியானவர் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11ம் இடத்தை பார்ப்பது ஒரளவு அனுகூலமான விஷயம். எதிர்பாராத சொத்துகள் வந்து சேரும். உங்களது ஆசை, அபிலாஷைகளில் சிறிது தடை ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையில் முடியும்.. நண்பர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பர். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும். காதல் விஷயங்கள் கை கூடும். பார்க்கும் வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். வெளிநாட்டு தொடர்பு சாதகமாக இருந்து வரும். சுய தொழில் மற்றும் கூட்டுத் தொழிலில் ஓரளவு லாபம் வந்து சேரும்.

Advertisement

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: