• ஜனவரி 2017
  தி செ பு விய வெ ஞா
   1
  2345678
  9101112131415
  16171819202122
  23242526272829
  3031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,697 hits
 • சகோதர இணையங்கள்

சுப ஸ்ரீ துன்முகி வருஷ பலன்கள் 2017 ரிஷப மிதுன கடக ராசி பலன்~

rishapaரிஷப ராசி பலன்கள்
கார்த்திகை 2,3,4 ம் பாதங்கள், மோகினி, மிருகசீர்ஷம் 1,2 ம் பாதங்கள்

இ, ஈ, உ, எ, ஞ, வ, வா, வி,வீ, வு, வே, வை ஆகிய எழுத்துக்களை முதலில் பெயர் எழுத்துக்களாக உள்ளவர்களும் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இங்கு குறிப்பிட படும் பலன் கள் ஓரளவு பொருந்தும்.

வான மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் 2வது ராசியாக நவகிரகங்களில் சகல சுகங்களையும் அனுபவிக்க வல்ல கிரகமான சுக்ரன் வீட்டிற்கு உரியவரான ரிஷபராசி நேயர்களே யாரையும் புன்னகை தவழும் முகத்துடன் இனிமையான குரலுடன் எதிர்கொண்டு வரவேற்பவர்கள்.

மற்ற கிரகங்களைக் காட்டிலும் அள்ளிக் கொடுக்கும் ஆற்றல் மற்றும் வல்லமை பெற்ற கிரகமாக விளங்கும் சுக்ரபகவான் உங்கள் ராசிநாதனாக உள்ளார். அவர் நல்ல படிப்பிற்கும், பேச்சுக்கும், பணப் புழக்கத்திற்கும் சகல சௌபாக்கியத்தையும் இவ்வுலகில் அனுபவிப்பதற்கு காரணமாக உள்ளார். அப்படிப்பட்ட சுக்ரபகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு / உங்களது ராசிக்கு இதுவரிய இதுவரை 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்த சனி பகவான் இனி 8ம் வீடான அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சற்று சுமாரான பலன் தான் என்றே கூற முடியும்.

இதுவரை 7ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் கண்ட சனியாக நம்மை வாட்டி வதைத்து ஒரு வழி பண்ணிவிட்டார் என்றாலும் ஒரு சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. இனி அவர் அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சற்று சுமாரான பலன் களையே அளிப்பார் என்று கூற வேண்டும்.

உங்களது ராசிக்கு 8ம் ராசியான தனுசுராசி சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமை என்று ஒரு ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். எதிலும் தலைமையேற்று நடத்துவதை சற்று தள்ளிப்போட்டு விட்டு, மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடத்தல் வேண்டும்.

தேவையில்லாமல் பேசுவது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அதற்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதே சமயம் உங்கள் ராசிக்கு 2ம் அதிபதியாக புதன் வருவதால் பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். எதிர்பாராத தனவரவு பொருள்வரவு மற்றும் மனைவி மூலம் தனவரவு ஒரு சிலருக்கு வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் எதிர்பாராத நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் வந்து சேரும். நெருங்கிய உறவினர்களை பிரிய நேரிடும்.

பயணங்கள் அடிக்கடி அமையும். அதனால் அலைச்சல்களும் வேதனைகளும் தான் மிஞ்சும். புதிய முயற்சியில் கஷ்டப்பட்டு முன்னேற வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு பழைய இடத்தை கொடுத்து புதுமனை வீடு வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் போராட்டங்கள் ஏற்பட்டு இறிதியில் வெற்றி கிட்டும்.

தாயாரால் எதிர்பாராத நனமைகள் கிட்டும். தாயாரின் அன்பும் ஆதரவும் ஒரு சிலருக்கு கிடைக்கும் அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும் அதனால் நனமையும் விருந்து கேளிக்கைகளில் ஈடுபட மனம் விரும்பும் சுற்றுலா விருந்து விழாக்களில் கலந்து கொண்டாலும் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். அதில் நிறைய தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும். குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வந்து மறையும். குழந்தைகளை எச்சரிக்கையாக வளர்த்து வருதல் அவசியம். அவர்களின் செயல்பாடுகளை நன்கு கண்காணித்து வருதல் வேண்டும்.

வழக்குகள் தேவையற்ற மனச்சஞ்சலங்களை உண்டு பன்னிக் கொண்டிருக்கும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். வட்டி பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத பணங்கள் பொருள்கள் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் அரசாங்க விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்து கொண்டு அதன் பின் எதிர்பார்த்த வேலைக்கு முயற்சி செய்யவும் நல்ல வேலை கிடைக்கும். வேலைக்காரர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையும் உண்டாகும். உணவு பழக்க வழக்கத்தில் அதிக கட்டுப்பாடு அவசியம். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும்.வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நனமையே ஏற்படும். தாய்மாமங்களின் உறவு நன்கு அமையும்.

சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். பாஸ்போர்ட் விசா போன்ற விஷயங்களில் தடையேற்பட்டாலும் அதனால் நன்மையேயாகும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி அளிக்கும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டாலும் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும். எனவே எதற்கும் கவலைப்படாமல் முயற்சி என்ற ஒன்றை விடாமல் மேற்கொள்ளல் வேண்டும்.

வேலையில் போட்டி பொறாமைகள் நிறைய தடைகள் மற்றும் விருப்பமில்லாமல் இருந்தாலும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். அடிக்கடி ஆலயதரிசனம், சாமி தரிசனம், பெரியவர்களை மதித்துப்போற்றி வணங்கி வர அஷ்டமசனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வந்து வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். தந்தையாரின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர், வெளிநாடு செல்ல நிறைய தடைகள் ஏற்பட கூடுமாகையில் முடிந்தவரை குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குலத் தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.

அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதிலும் நிதானமாக கையாளுதல் வேண்டும். யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகும். நம்புவர்கள் துரோகம் செய்வார்கள். எந்த காரியத்திற்கும் மற்றவரை நம்பாமல் முன் கூட்டியே திட்டமிட்டு சிந்தித்து செயல்பட்டால் தோல்வியிலிருந்து விடுபட்டு வெற்றி நிச்சயம் அமையும். எதற்கும் அவசரப்படுதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. ஆபரேஷன் போன்ற விஷயங்களை நன்கு ஆராய்ந்து அதன்பின் அறுவை சிகிச்சை செய்தல் வேண்டும்.

வேலை அல்லது உத்யோகம் (Job)

உங்கள் ராசிநாதனான சுக்ரனே உங்கள் ராசிக்கு 6ம் அதிபதியாக வருவதால் வேலையில் இதுகாறும் இருந்து வந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் ஆயின் கிடைத்த வேலையில் முதலில் அமர்ந்து பின் பிடித்த வேலையை தேடுதல் வேண்டும். உங்கள் ராசிக்கு 9,10 ம் அதிபதியான சனிபகவான் உங்களது ராசிக்கு 8ம் இடத்தில் அமர்வதால் அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகளால் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு. அதே சமயம் ஒரு சிலருக்கு விருப்ப ஓய்வு பெறவும் வாய்ப்பு அமையும் இதுவரை வராமல் தடையாக இருந்த பென்ஷன், பி.எப், கிராஜூவிட்டி போன்ற விஷயங்கள் தடையின்றி வந்து சேரும். சக ஊழியர்களின் அன்புன் ஆதரவும் கிட்டும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைக்காக அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது.

தொழில் (Business) வியாபாராம் (Trade)

தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு வந்து சேரும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவர். உற்பத்தி சார்ந்த தொழிலில் தேவைக்கேற்ப உற்பத்தி செய்தல் நலம். சிறு தொழில்கள் ஓரளவு லாபகரமாக அமையும். கமிஷன், ஏஜென்ஸீஸ், புரோக்கர்ஸ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி, துறைகள் ஓரளவு லாபகரமாக இருந்து வரும். பங்கு சந்தையில் அதிக கவனம் தேவை. ரேஸ், லாட்டரி, கிளப், சீட்டு இவைகளில் அதிக்க் கவனம் தேவை. தகவல் தொடர்பு எலக்ட்ரிக்கல், எலக்ட் ரானிக்ஸ், துறைகளில் லாபம் குறைந்து கொண்டே வரும். நிதி, நீதி, வங்கித்துறை, இன்சூரன்ஸ் துறைகள் நல்ல லாபகரமாக அமையும். இரும்பு, பிளாஸ்டிக், சிமெண்ட், கனிமவளங்கள் துறை நல்ல லாபகரமாக அமையும். உணவு, உடை, ஆடை, ஆபரணத்தொழில்கள் ஏற்றம் மிகுந்து காணப்படும். கப்பல், நீர், மீன்பிடித்தொழில்கள் சுமாராக இருந்து வரும். சுற்றுலா, விஞ்ஞானம், மருத்துவம், இரசாயனம் சுமாராக இருந்துவரும். . பத்திரிக்கை, தொலைக்காட்சி, சினிமா, திரையரங்கம் லாபகரமாக இருக்கும். பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்கள் போன்ற துறைகள் சற்று வளர்ச்சி குன்றியே காணப்படும். சாலையோர வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி நன்கு அமையும். அழகு சாதனங்கள், திரைப்பட விநியோகம் சற்று லாபம் குறைந்து காணப்படும்.

விவசாயம்

விவசாயம் சற்று சுமாராக இருந்து வரும் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழுது பயிர் செய்து அறுவடை செய்தாலும் லாபம் குறைந்தே காணப்படும். கனி வகைகளான வாழை, கொய்யா, மா, பலா, போன்றவற்றில் லாபம் அதிகரிக்கும். தேயிலை முந்திரி ஏலம் போன்ற பணப்பயிர்களில் லாபம் குறைந்து காணப்படும். நெல், கோதுமை, பயிறு, வகைகள் சற்று சாதகமாக இருந்து வரும். காய்கறிகளில் லாபம் குறைந்து காணப்படும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் ஓரளவு லாபம் குறையும். கடன்கள் அதிக அளவு வாங்க வேண்டியது வரும். அதனால் அதிக அளவு, வட்டியும் கட்ட வேண்டி வரும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

அரசியல்

நண்பர்கள், கூட்டாளிகள், சகாக்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதாக எண்ணி ஏமாந்து விடுதல் கூடாது. யார் எப்பொழுது எப்படி மாறுவர் என்று கூற முடியாது. எனவே எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். தேவையற்ற விஷயங்களைப் பேசுதல் கூடாது. வருமானத்தில் குறைவு இல்லையென்றாலும் அரசியல் எதிர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. யாரையும் நம்பி உண்மையை உரைத்தல் கூடாது. தொண்டர்களின் உண்மையான அன்பையும் ஆதரவையும் பெற தீவிரமாக பாடுபட வேண்டியிருக்கும். அரசாங்கத்தால் எதிர்பாரத துன்பங்கள் துயரங்கள் வந்து சேரும்.

கலை

உங்களது ஆசை, அபிலாஷைகள் பூர்த்தியாவதில் நிறைய தடைகள் ஏற்பட்டு விலகும். போட்டி, பொறாமை இடைஞ்சல்களை சந்திக்க வேண்டி வரும். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டபட்டு பின் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானம் கூடும். அதற்கேற்ப செலவினங்களும் கூடும் முழுத்திறமையும் வெளிப்படுத்தினால் மட்டுமே ஜெயிக்க முடியும். நடனம், நாட்டியம், இசை, சிற்பம், ஓவியம் சிறந்து விளங்கும். சினிமா சின்னத்திரை போட்டி மிகுந்து காணப்படும். எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், கவிஞர்கள், இசைக்கலைஞர்கள் ஏற்றம் பெறுவர்.

மாணவர்கள்

விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க சற்று போராட வேண்டி வரும். கல்வியில் அதிக கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்துதல் கூடாது. படிப்பில் கவனம் தேவை. படிப்பிற்காக வெளிநாடு செல்ல போராட வேண்டியது வரும். கல்விக் கடன் கிடைப்பதில் பெரிய போராட்டமே நடைபெறும். போட்டி தேர்வில் அதிக கவனம் தேவை. விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு ஏற்படும். அதனால் பரிசுகளும், வெற்றிகளும் பெற கடுமையாக போராட வேண்டியது வரும்.

பெண்கள்

உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் தேவையில்லாமல் பேசுதல் கூடாது. அடிக்கடி அலைச்சல்களும் அதனால் உடல் சோர்வுகளும் அசதியும் ஏற்பட்டு விலகும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. சுபகாரியங்களில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பும் சந்தர்ப்பமும் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். கணவன் மனைவி ஒற்றுமை சற்று சுமாரகவே இருந்து வரும். கணவரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.

வேலையில்லாமல் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். வேலையில் உத்யோக உயர்வு அமையும். நல்ல ஊதிய உயர்வுக்காக கடுமையாக போராட வேண்டி வரும். 2வது திருமணம் ஒரு சிலருக்கு அமையும். விவகாரத்து போன்ற விஷயங்கள் இழுபறியாகவே இருந்து வரும். உயரதிகாரிகள் ஒத்துழைப்பு சற்று சுமாராக இருந்து வரும். சக ஊழியர்கள் அன்பும் ஆதரவும் கிட்டும். குழந்தைகளால் ஒரு சிலருக்கு நன்மையும் அவர்களால் ஒரு சிலருக்கு தேவையற்ற மன வருத்தம் அமையும். வேலை நிமித்தமாக வெளிநாடு செல்வதில் நிறைய தடைகள் ஏற்பட்டு பின் விலகும். அடிக்கடி வெளியூர் செல்ல வாய்ப்பு அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக சென்று வருதல் வேண்டும்.

உடல் ஆரோக்யம்

உடலில் அடிவயிறு, கால், முழங்கால், பாதம் போன்ற உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். தேமல், சிரங்கு, வைரஸ் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு விலகும்.

சனிபகவான் வகரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள்
(மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)

மூலம் :

சனிபகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் அடிகக்டி ஆலயம் மற்றும் தெய்வ தரிசனம் மேற்கொள்ளல் வேண்டும். வேலையில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் பின் வேலை நிரந்தரமாகும். பொருளாதாரம் ஒரு பக்கம் சீராக இருந்தாலும் இன்னொரு பக்கம் கடன் வாங்கி வட்டி கட்ட நேரிடும். பிராயாணங்களில் கவனம் தேவை. பயணங்கள் அலுப்பாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் இருக்கும். அரசாங்க விஷயங்களில் சற்று எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருந்து வருதல் வேண்டும்.

உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உடன் பிறந்தர்களால் எதிர்பார்த்த நன்மைகளும் ஏற்படும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். இதுவரை நடவாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் சற்று சிரம்மத்திற்குள்ளாகி இனிதே நடந்தேறும். திருமணம் சற்று தாமதமாக நடந்தேறும் திருமணமாகி வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகம் ஒரு சிலருக்கு அமையும். சிலகாரியங்கள் ஆரம்பத்தில் சுபமாக தோன்றினாலும் பின் அதில் தடையேற்பட்டு தள்ளி போகும். தொழிலில் போட்டி பொறாமைகள் ஏற்படும். வேலையில் அதிக கவனம் தேவை.

ஒரு சிலருக்கு வேலையில் மாற்றமும் இடமாற்றம் அமையும். வழக்குகள் சற்று பயமுறுத்தினாலும் பெரிதாக பாதகம் ஒன்றும் வராது. விருந்து கேளிக்கைகளில் சற்று கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். தாயரின் அன்பும் ஆதரவும் நன்கு கிட்டும். உடன் பணிபுரிவர்களால் நன்மை ஏற்படும் எதிர்பாராத உதவிகளும் அதன் மூலம் எதிர்பார்த்த உங்கள் ஆசைகள் பூர்த்தியாகும் சமயம் இதுவாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது

சனிபகவான் சுக்ரனுடைய நட்சத்திரமாக பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது வேலையில்லாதவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும். அதே சமயம் அந்த வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைகளும் வந்து சேரும். எதிர்பார்த்த உத்யோக உயர்வில் தடைகள் ஏற்பட்டு விலகும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். அதே சமயம் கடனும் அதிகரித்து காணப்படும். சமூகத்தில் ஒரு பக்கம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பொறுப்புகளின் தன்மைகள் உங்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படும். எந்த வேலையும் கால தாமதம் செய்யாமல் அன்றாடம் அந்தந்த வேலைகளை முடித்தல் வேண்டும். புதிய முயற்சிகளை தொடரும் முன் நன்கு ஆலோசித்து சிந்தித்து செயலப்டுதல் வேண்டும். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் உற்சாகமாகவும் இருக்க பழகி கொள்ளுங்கள் பேச்சில் அதிக கவனம் தேவை.

அடிக்கடி தெய்வ தரிசனங்களை காணுதல் வேண்டும். தாயாரால் எதிர்பாரத நன்மைகள் ஏற்படும். சுய தொழில்கள் ஒரளவு லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகள் லாபம் அடைவர். சகோதர சகோதரிகளால் எதிர்பாராத மன வருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். வழக்குகள் சுமாரக இருந்து வரும். வேலையில் திருப்தியற்ற தன்மையே நிலவும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டு விடுதல் கூடாது. உயரதிகாரிகளால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். நேரத்திற்கு உணவு உண்ணுதல் வேண்டும். இல்லையேல் உடல் ஆரோக்யம் பாதிக்கப்படும். தாய்மாமன்களால் எதிர்பாரத நன்மைகள் ஏற்படும். காதல் விஷயங்களில் ஆரம்பத்தில் சற்று சுணக்கம் ஏற்பட்டாலும். இறுதியில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேரும். தேவையில்லாமல் ஆடம்பரச் செலவுகள் செய்தல் கூடாது.

உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது

உப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். எண்ணிய காரியங்கள் சற்று தடையேற்பட்டாலும் இறுதியில் வெற்றி நிச்சயமாகும். எதற்கும் மலைத்து போய் இல்லாமல் போராட்டமே வாழ்க்கை என்று முடிவெடுத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பணப்புழக்கம் சற்று சுமாராகவே இருந்து வரும். ஒரு சிலருக்கு சுபச் செலவுகள் அதிகரித்து காணப்படும். இடம், மனை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். உங்களை பற்றிய விமர்சனங்கள் இக்காலங்களில் குறையும். தேவையற்ற விஷயங்களில் முயற்சிப்பதை சற்று தள்ளி போடுதல் வேண்டும். உடன் பிறந்தவர்களுக்கு வேலையில் முன்னேற்றமும், அவர்களுக்கு சுபகாரியங்களும் இனிதே நடந்தேறும். காதல் விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். காதல் கை கூடுவதில் நிறைய தடைகல ஏற்படும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருந்து வரும். சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அதே சமயம் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் இருந்து கொண்டிருக்கும்.

தந்தையாரின் உடல் நலத்தில் அதிக கவனமுடன் இருத்தல் வேண்டும். வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் வேலை நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்லும் யோகமும் அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதில் சற்று சுணக்கம் ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். உயர் அதிகாரிகள் விஷயத்தில் தேவையற்ற பேச்சு வார்த்தை கூடாது. பாஸ்போர்ட், விசா, வருவது சற்று காலதாமதமாகும். குடும்பத்தில் புது உறுப்பினர் வருகையால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை.

கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது

சனிபகவான் வக்ரம் ஆகி கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் தடையேற்பட்டாலும் இறுதியில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். உங்களுடைய பொறுமையும். பொறுப்பு உணர்ச்சியும் சோதிக்கப்படுகின்ற காலம். எனவே சற்று கவனமுடன் செயல்படுதல் வேண்டும். பணப்புழக்கம் சற்று சுமாராக இருந்து வரும். கொடுத்த பணம், பொருட்கள் சற்று தாமதமானாலும் வந்து சேரும். பொன், பொருள், மனை, வீடு, இடம், வண்டி வாகனங்கள் வாங்க சற்று தடையேற்பட்டாலும் இறுதியில் வந்து சேரும். எந்த வேலையில் இறங்கினாலும் தாமதம், தடை ஏற்படத்தான் செய்யும். அவைகளை கடப்பது தான் புத்திசாலிதனம். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது, புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி பெற பாடுபட வேண்டி இருக்கும்.

உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு வேலை மாற்றம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடந்தேறும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு முன் நன்கு ஆலோசித்தல் வேண்டும். காதல் விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்பட்டு பின் விருப்பம் பூர்த்தியாகும். கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும். வேறு வேலை மாறும் முன் நன்கு ஆலோசித்து செய்யவும். தந்தையினரால் நன்மை ஏற்படும். வெளிநாட்டு செய்திகள் சாதகமாக வந்து சேரும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் அமையும். அதனால் அலைச்சல்களும் வேதனைகளும் ஏற்படும். பெண்கள் தங்கள் உடல் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

இக்காலங்களில் எதிர்பார்த்த செய்திகள் தாமதமாக வந்தாலும் இறுதியில் சாதகமாக அமையும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடையவர்களாக விளங்குவார்கள். சமூகத்தில் சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். பேச்சில் சாமர்த்தியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவுகள் சற்று தாமதமானாலும் தவணை முறையில் வந்து சேரும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்தபடி லாபகரமாக இருந்து வரும். தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் ஒரு சிலருக்கு அமையும். தாயருக்கு இதுவரை இருந்து வந்த நோய் நொடிகள் நீங்கும் அல்லது குறையும் உடன் பிறந்தவர்களின் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்தபடி அமையும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் வந்து சேரும். அலைச்சல்கள் அதிகரிக்கும், பயணங்கள் சாதகமாக இருந்து வரும். உங்களை பற்றிய வீண் வந்தந்திகள் அதிக அளவில் பரவியபடி இருக்கும். காதல் விஷயங்களில் எதிர்பார்த்த மகிழ்ச்சி சற்று குறைந்து காணப்படும். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படும். குழந்தை பாக்யம் கிட்டும். சுய தொழில்கள் சற்று சுமாராக இருந்து வரும். கூட்டுத் தொழில்களில் ஏற்றுமதி இறக்குமதி லாபகரமாக இருந்து வரும். பார்க்கும் வேலையை விட்டு விடுதல் கூடாது. வேலையில் கவனம் தேவை. வேலையின் நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டுப் பின் விலகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருந்து வரும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கை தேவை. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

எதிர்பார்த்த காரியங்கள் ஓரளவு நடந்தேறும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகத்துடனும் இருந்து வருதல் வேண்டும். எந்தவொரு காரியத்தையும் நாளை என்று தள்ளிப் போடாமல் அன்றே செய்தல் நலம். வாழ்வில் சுகபோகங்கள் நேரத்திற்கு கிடைக்காமல் போனாலும் சற்று காலாந்தாழ்ந்து கண்டிப்பாக நடந்தேறும். உங்களது உழைப்பை உபயோகமான வழிகளில் வெளியிடுதல் வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் எது வாழ்க்கைக்குத் தேவையோ அதில் மட்டும் தலையிட்டு வெற்றிக்கு பாடுபட வேண்டும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம். தேவையில்லாமல் கடன் வாங்குவதோ கொடுப்பதோ கூடாது. சமூகத்தில் எதிர்பார்த்த மதிப்பும் மரியாதையும் கூடும். எல்லோரையும் அனுசரித்துப் பழகுதல் வேண்டும். அடிக்கடி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டி வரும். அதனால் தேவையற்ற வருத்தங்களும் ஏற்படும். புதிய உறவுகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியம் நடந்தேறும், காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் கூடும். வேலையில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த பிணக்கம் மறைந்து சற்று உற்சாகம் ஏற்படும். ஊதிய உயர்வும், உத்யோக உயர்வும் கிட்டும். தாய்மாமன்களால் நன்மை ஏற்படும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். கடன்கள் அதிகரித்து கொண்டே செல்லும். தாய், தந்தையரின் உடல் நலத்தில் கவனம் தேவை. குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.

மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

இதுவரை நடை பெறாமல் தள்ளிப் போன காரியங்கள் ஓரளவு நடைபெற வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய சச்சரவுகள், தட்டுபாடுகள் கடுமையான போரட்டதிற்குப் பின் சுமூகமாக அமையும். செல்வம் செல்வாக்கு பாதிக்கப்பட்டாலும் இறுதியில் ஓரளவு நிலைமை சீராகும். தேவையற்ற பேச்சுகளைக் குறைத்து உழைப்பை உயர்த்துதல் வேண்டும். சோம்பல் உதறி சுறுசுறுப்பாக செயல்படுதல் வேண்டும். பணப்புழக்கம் ஓரளவு சுமாராக இருந்து வரும். கொடுத்த பணம், பொருள் தவணை முறையில் வந்து சேரும். தந்தையின் உடல் நலத்தில் ஆரோக்யம் ஏற்படும். உடன் பிறப்புகளால் நன்மை ஏற்படும், புதிய உறுப்பினர்கள் குடும்பத்தில் வந்து சேர்வர். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் ஒரு சிலருக்கு அமையும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். அதிக அளவில் தொழிலில் முதலீடு செய்ய வேண்டி வரும். முதலாளி, தொழிலாளி உறவு சுமூகமாக இருந்து வரும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனை இருந்து வரும். சுய தொழிலில் ஒரளவு போட்டி இருந்தாலும் லாபம் கைக்கு வந்து சேரும். கணவன் மனைவி உறவு சாதகமாக இருந்து வரும். காதல் விஷயங்களில் சுவாரஸ்யங்கள் குறைந்து காணப்படும். நண்பர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். குழந்தை பேறும் அமையும். உடலில் அடிக்கடி சுகவீனம் ஏற்பட்டு வைத்தியச் செலவுகள் வந்து சேரும். நண்பர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறைந்து மகிழ்ச்சி கூடி வரும் காலம்.

sani peyarchi 2017 சனி பகவான் உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சரித்து 3ம் பார்வையாக 10ம் இடத்தையும் 7ம் பார்வையாக 2ம் இடத்தையும் 10ம் பார்வையாக 5ம் இடத்தையும் பார்வையிடும் காலங்களில் ஏற்படும் பொதுப் பலன்கள்.

3ம் பார்வை பலன்கள்

சனி 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10ம் இடத்தையும் பார்ப்பது நன்மை, தீமை கலந்த பலன்கள் 10ம் இடம் என்பது ஒருவரது தொழில் ஸ்தானம். அந்த இடத்தைப் பார்ப்பதால் இதுவரை வேலையில்லாமல் அல்லது தொழில் இல்லாமல் இருப்பவர்களுக்கு வேறு வேலை கிடைக்க வழிவகை இருப்பவர்களுக்கு வேறு வேலை கிடைக்க வழிவகை செய்வர். அதே சமயம் வேலை ஸ்தானத்தைப் பார்ப்பதால் பார்க்கும் வேலையில் இடைஞ்சல்களையும் மனசஞ்சலங்களையும், திருப்தியற்ற வேலையை தருவர். ஷை இரண்டும் ஒரே சமயத்தில் நடைபெற வய்ப்புள்ளது. 10ம் இடம் என்பது அரசு, புகழ் மற்றும் கௌரவம் அந்தஸ்து இவற்றை கொடுத்து அதில் ஒரு சிறு குறையையும் கொடுத்து புகழை குறையச் செய்வர்.

7ம் பார்வை பலன்கள்

7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 2ம் இடத்தை பார்ப்பது ஒரு பக்கம் விசேஷம் என்று தான் சொல்ல வேண்டும். 7ம் பார்வையாக உங்கள் 2ம் இடமான தன ஸ்தானத்தையும் பார்ப்பது குடும்ப ஸ்தானத்தையும் பார்ப்பது உங்களுக்கு எதிர்பாரவிதமாக தனவரவு, பொருள் வரவு ஏற்பட வாய்ப்பு அமையும். முன்னோர் சொத்துகள் கணவன் அல்லது மனைவி மூலம் சொத்துக்கள் அல்லது பண வரவு அமைய வாய்ப்புகள் அமையும். அதே சமயம் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசவோ விவாதிக்கவோ கூடாது. கொடுத்த பணம், நகை, பொருள்கள் வீடு வந்து சேரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை.

உழைப்பு கேற்ற ஊதியம், லாபமும் கிட்டும். கொடுக்கல் வாங்கல் சீராக இருந்து வரும். பணப் புழக்கம் சரளமாக இருந்து வரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

10ம் பார்வை பலன்கள்

சனி பகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம் இடத்தை பார்ப்பதால் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும் 5ம் இடம் சுபகாரியங்களையும் சுப நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுவதுவாகும். அதே சமயம் குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்பட்டு குழந்தை பாக்யம் அமையும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுபட வேண்டியது வரும். உல்லாச பயணங்களில் சற்று பிரச்சனை ஏற்பட்டாலும் மகிழ்ச்சிகரமானப் பயணங்களாக அமையும். பார்க்கும் வேலையை விட வேண்டி வரும் கொடுத்த பணங்களை திரும்பி வாங்குவது அவ்வளவு எளிதல்ல, பணம், பொருள்கள், கண் முன் பறி போக வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் புது வரவுகள் ஏற்படும். மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும் நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். காதல் விஷயங்களில் ஆரம்பத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் இறுதியில் அது சுமுகமாகவே அமையும்.

mithunamமிதுன ராசி
மிருக சீரிஷம் 3-4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம், 1,2,3ம் பாதம்

(உங்கள் ரசி எது என்று தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தாக கா, கி, கு, கூ, க, ங, ச, சே, கோ, கை, ஹை மற்றும் ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இங்கு குறிப்பிட்ட பலன்கள் பொருந்தும்)

வான மண்டலத்தில் 3வது ராசியாக வலம் வரும் மிதுனராசியில் பிறந்த உங்கள் ராசி நாதன் புதன் ஆவார். இவர் புத்திக்கும், வித்தைக்கும், ஞானத்துக்கும் அதிபதியாவார். காக்கும் கடவுளான திருமால் புதனுக்குரிய தெய்வமாவார். எனவே திருமால் உலகத்தை காப்பது போல் நீங்களும் பலரை காப்பாற்றும் பொறுப்பு உடையவர்களாவீர்கள். பலருடைய சவால்களையும் பேச்சுகளையும், சிந்தனைகளையும் மாற்றிக் கொண்டே இருப்பீர்கள். எதையும் மனதால் கணக்கு போடும் உங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியானது சற்று சுமாராகவே இருந்து வரும்.

இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதும் இனி அவர் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் கணடச்சனியாக இருந்தது பலன் தருவார். 6ம் இடத்தில் இருந்தாலும் அலைச்சல், வேதனை, நோய்வாய்ப்படுதல் கடன் இவையெல்லாம் இல்லாமல் இல்லை. அதே சமயம் 7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் அதனுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். எதையும் சிந்தித்து செயல்படும் உங்கள் எண்ணம்தான் உங்கள் வாழ்க்கையின் முதல் என்று சொன்னால் அது மிகையாகாது.

சனியானவர் உங்களது ராசிக்கு 8 மற்றும் 9ம் வீட்டிற்கு அதிபதியாகி 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சற்று சுமாரான பலன் என்றுதான் சொல்ல வேண்டும். அதே சமயம் அவர் குரு வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அடிக்கடி ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும். உங்கள் ராசிக்கு சனி 8ம் அதிபதி என்றாலும் அவரே 7ம் அதிபதியாக இருந்து அவர் 7ல் பலம் பெற்று உங்கள் ராசியை பார்ப்பதால் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் சிலசமயம் வந்து சேரும்.

எனென்றால் 8ம் இடம் என்பது கஷ்டத்தை பற்றி சொன்னாலும் அதிர்ஷ்டத்திற்கு 9ம் இடமாகும். இரண்டுக்கும் அவரே அதிபதியாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் இக்காலங்களில் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் யார் என்று உலகிற்கும் மற்றவர்களுக்கும் தெரியவரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப் புழக்கம் தாரளமாக இருந்து வரும். கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். அந்த பணங்கள் பொருள்கள் தவணை முறையில் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் சிந்தனை சக்தியும் மிகுந்து காணப்படும்.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் இருந்து வரும். அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் வந்து சேரும். நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டு பிரிய நேரிடும்.

தன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும். எப்பொழுது எல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தீர்க்க இறைவன் ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைப்பார். தாயரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். தாயாரின் அன்பும் ஆசியும் கிட்டும். பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.

இதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும். காதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது.

வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். ஆனால் வேலையில் திருப்தியற்ற நிலைமையே அமையும். எனவே கிடக்கும் வேலையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடக் கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளல் வேண்டும். வேலையாட்களால் நன்மையும். அதே சமயம் அவர்களால் ஒரு சிலருக்கு தேவையற்ற பிரச்சனையும் வந்து சேரும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வீட்டு வளர்ப்பு பிராணிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். தேவையற்ற பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. விரதங்களை தவிர்ப்பது நன்று. தள்ளிப்போன திருமண சுபகாரியங்கள் குறிப்பாக காதல் திருமணங்கள் நடக்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வழக்குகள் இழுபறியாகவே இருந்தாலும் இறுதியில் வெற்றி கிட்ட வாய்ப்பு அதிகம். அரசாங்க விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. தேவையற்ற கடன் மற்றும் வட்டி கட்ட வேண்டி வரும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. சுயதொழில் கூட்டுத் தொழில் ஓரளவு சாதகமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக எச்சரிக்கை தேவை.

ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். வேலையில் உத்யோக உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். வேலையில் அதிக கவனம் தேவை. சக தொழிலாளர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் வந்து சேரும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு சுமாராக இருந்து வரும். நண்பர்களால் எதிர்பார்த்த, பாராத உதவிகள் வந்து சேரும். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். எனவே எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை.

வேலை அல்லது உத்யோகம் (JOB)

உங்கள் ராசிக்கு 6ம் அதிபதியாக செவ்வாய் வருவதால் அடிக்கடி வேலை மாற வேண்டியது வந்தாலும் வேலை மாறாமல் இருப்பது சிறப்பானது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் பார்க்கும் வேலையில் உங்களுடைய பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். அடிக்கடி லீவு போட வேண்டிய சூழ்நிலை வரும். அதை தவிர்த்தல் வேண்டும். கிடைத்த வேலையில் திருப்திகரமாக செயல்பட்டு உங்களுடைய திறமையையும் உழைப்பையும் அதிகரித்தல் வேண்டும். எந்த வேலையும் காலதாமதபடுத்தாமல் உடனே செய்தல் வேண்டும். வேலையில் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் ஒரு சிலருக்கு அமையும். உயரதிகாரிகள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடக் கூடாது. வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு வந்து சேரும்.

தொழில் (BUSINESS, வியாபாரம் (TRADE)

பார்க்கும் தொழிலில் சில இடைஞ்சல்கள் ஏற்பட்டாலும் தொழில் ஒரளவு சுமாராக இருந்து வரும். புதிய தொழில் மற்றும் கூட்டுத் தொழில் இருக்கும் வாய்ப்பும், சந்தர்ப்பமும் அமையும். தொழில்களில் தேவைக்கேற்ப முதலீடு செய்வது போதுமானது. சிறு தொழில்களில் ஒரளவு லாபம் இருந்து வரும். உற்பத்தி சார்ந்த துறைகளும் லாபகரமாக இருக்கும். சாலையோர வியாபாரம் சாதகமாக இருந்து வரும். பங்கு சந்தை முதலீட்டில் அதிக கவனம் தேவை.

ஏற்றுமதி இறக்குமதி சுமாராக இருந்து வரும். பெரிய அளவில் லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. கனரக தொழில் உற்பத்தி, விற்பனை, பழுதுபார்ப்பது லாபகரமாக இருந்து வரும். இரும்பு, எஃகு, சிமிண்ட், நிலக்கரி, பெட்ரோல், கிரானைட் போன்ற கனிமவளத் தொழில்கள் சற்று சுமாராக இருந்து வரும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொடர்பு துறைகளில் லாபம் குறைந்தும், ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறைகள் ஏற்றம் அதிகரித்தும் காணப்படும். உணவு உடை, ஆபரணத் தொழில்கள் லாபகரமாகவும், நீர், கப்பல், மீன்பிடித் தொழில்கள் சாதகமாக இருந்து வரும்.

நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் லாபகரமாகவும், சுற்றுலா, அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி விற்பனை அதிகரித்தும் காணப்படும், பத்திரிக்கை தொலைக்காட்சி, திரைப்பட தயாரிப்பு விற்பனை விநியோகம் சற்று லாபம் குறைந்து காணப்படும். மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் சாதகமாக இருந்து வரும். ஆடம்பரம் பொருட்கள், பிளாஸ்டிக், ரசாயன உற்பத்தி ஆரம்பத்தில் சற்று லாபம் குறைந்து விட்டாலும் பின்னாளில் நல்ல லாபகரமாக இருந்து வரும்.

விவசாயம்

ஆரம்பத்தில் விவசாயம் சற்று சுமாராக இருந்தாலும், பின்னாளில் ஓரளவு லாபகரமாக அமையும். பழவகைகள், காய்கறிகள் சற்று லாபம் குறைந்து காணப்படும். அதே சமயம் பூக்கள் லாபகரமாக இருக்கும். கடன் வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். ஒரு சிலருக்கு பணப்பயிர்களால் லாபம் ஏற்படும். கடலை, கம்பு, வாழை, தென்னை, மஞ்சள் ஆகியவற்றில் சற்று லாபம் கிட்டும். நெல், கோதுமை, ஏலம், மிளகு, கிராம்பு போன்றவற்றில் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்

அரசியல் வாழ்வில் அதிக கவனம் தேவை. மேலிடத்தில் தேவையில்லாத பிரச்சனைகள், தொண்டர்களிடம் நல்ல பெயர் எடுக்காமல் போய்விட வாய்ப்புகள் அதிகம். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பர். பணவரத்து அதிகமாக இருக்கும் அதே சமயம் வழக்குகளின் செயல்கள் பயமுறித்திக் கொண்டே இருக்கும். குரு விருச்சகத்திற்கு வரும் காலங்களில் வசதிகள் அதிகரித்தும் எண்ணங்கள் ஈடேறும். பாடுபட்டதற்கேற்ப பலன்களும் உண்டாகும்.

கலை

கவனமும், காலம் தவறாத உழைப்பும் உங்களுக்கு சமூகத்தில் நல்ல பெயரை ஏற்படுத்தி தரும். இசை, நடனம், நாட்டியம், ஓவியம், சிற்பம், சினிமா, சின்னதிரை, ஜோதிடம், சிற்ப துறைகள், நல்ல லாபகரமாக அமையும். ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பும் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படவும் அதனால் நன்மையும் ஏற்படும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். உழைப்புக் கேற்ற வருமானங்கள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு விருதுகளும், பட்டங்களும் தேடி வரும்.

மாணவர்கள் :

உயர்கல்வி பயில வாய்ப்புகள் அமைந்தாலும் நிறைய தடைகளை தாண்ட வேண்டியது வரும். படிப்பில் அதிகக் கவனம் தேவை. கல்விக் கடன்கள் எளிதில் கிடைக்கும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் அமைய போராட வேண்டி வரும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. எப்பொழுதும் சுறு சுறுப்பாக இருத்தல் வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக சென்று வருதல் வேண்டும்.

பெண்களுக்கு

உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது காதல் வயப்பட ஒரு சிலரைச் செய்யும். காதல் கனிந்து திருமணத்தில் முடிய கடுமையாக போராட வேண்டி வரும். எப்பொழுதும் சுறு சுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்து வருவீர்கள். நிறைய படிக்க, எழுத, புதிய விஷயங்களை கற்க அதிக நேரம் ஒதுக்க சந்தர்ப்பம் அமையும். விரும்பியதை கற்க சந்தர்ப்பம் அமையும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன திருமணம் மற்றும் குழந்தை பாக்யம் அமைய வாய்ப்பு அமையும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும்.

குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை அமையும். அடிக்கடி பயணங்கள் அமையும். பயணத்தினால் நன்மையும் தீமையும். கலந்தே காணப்படும். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். வேலையில் திருப்தியற்ற தன்மையே அமையும். சக ஊழியர்களினால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் வந்து சேரும். எல்லோரிடமும் எச்சரிக்கையாகப் பழகுதல் வேண்டும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. தேவையற்ற பேச்சுகளை தவிர்த்தல் நலம். உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் பரவி உலவிக் கொண்டிருக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். இரண்டாவது திருமணம் நடைபெறுவதிலும் ஒரு சிலருக்கு தடை ஏற்பட்ட பின் விலகும். ஆடை, ஆபரணங்கள் விரும்பியபடி அமையும். பணப்புழக்கம் எப்பொழுதும் போல் தாராளமாக இருந்து வரும். மனதை எப்பொழுதும் ஆன்மீக விஷயங்களில் செலுத்துவது நன்மை பயக்கும். சளித் தொல்லைகள் இல்லாமல் உடம்பை பாதுகாத்தல் வேண்டும். உடலில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடனே நல்ல மருத்துவரை அணுகவும்.

உடல் ஆரோக்யம்

தலை, கண், அடிவயிறு, ஜீரண உறுப்புகள், கால் போன்ற பகுதிகளில் பாதிப்புகள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். உடல் உள் உறுப்புகளில் தேவையற்ற உபாதைகள் ஏற்படும். கவனம் தேவை. அறுவை சிகிச்சைக்குரிய காலம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். உணவுக் கட்டுப்பாடு அவசியம் தேவை. யோகா, தியானம் போன்றவற்றில் மனதை செலுத்துதல் வேண்டும்.

சனி பகவான் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள்
(மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)

மூலம்

சனிபகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் கேது பகவான் உங்கள் ராசிக்கு 8 மற்றும் 9ம் இடங்களில் சஞ்சாரம் செய்வது சற்று சுமாரான பலன்கள் ஏற்படும். எதிர்பார்க்கும் செய்திகள் சற்று கால தாமதமாக வந்து சேரும். எடுக்கும் முயற்சிகள் கடுமையான போராட்டத்திற்குப் பின் நடந்தேறும். பேச்சில் எச்சரிக்கை தேவை. பணப்புழக்கம் எதிர்பார்த்த அளவு இராது. கொடுக்கல் வாங்கலில் தேவையற்ற மனச் சஞ்சலங்கள் நடந்தேறும். அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி வரும் அலைச்சல்கள் கூடும். வேலையில் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். தேவை இல்லாத விஷயங்களைப் பேசுவதோ எழுதுவதோ கூடாது. அடிக்கடி ஆலய தரிசனம் செய்து வருதல் வேண்டும். தெய்வ அனுகூலத்தை கூட்டுதல் வேண்டும். தேவை இல்லாமல் கடன் வாங்குதல் கூடாது. தாய், பாட்டி, உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வேலையில் அதிகக் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும். குழந்தைகளால் தேவையற்ற மன வருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். சுய தொழில்கள், முதலீட்டில் கவனம் தேவை. தேவையற்ற தொழில் முதலீடு செய்தல் கூடாது.

பூராடம்

சனிபகவான் பூராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஓரளவு நிறைந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். விருந்து கேளிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். காதல் விஷயங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும்.

அடிக்கடி வேலை மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். வேலையில் லீவு போட வேண்டிய சூழ்நிலை அமையும். அவசரப்பட்டு வேலையை விட்டுவிடக் கூடாது. கடன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இதரச் செலவுகள் சுப விரயங்கள் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை கிட்டும். நீண்ட காலமாக இருந்த நோயின் தன்மை குறைந்து காணப்படும். பணம் பொருள் கண் முன்னாலே பறிபோனது போல் இருக்கும். பொருட்கள் திருடு போக வாய்ப்பு அமையும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் வந்து சேரும். உல்லாச சல்லாபங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். புதிய உறவுகள் தாமாகவே வந்தமையும். புதிய நட்பு வட்டாரம் அதிகரிக்கும்.

உத்தராடம்

உத்திராடம் நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களில் உங்கள் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி நிச்சயம். எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதமாக வந்தாலும் வெற்றிச் செய்தியாக வந்து சேரும். புகழ் அந்தஸ்து சிறப்பு அமையும். பணப்புழக்கங்கள் தாரளமாக இருந்து வரும். போக்கு வரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. தாயரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். அதே சமயம் உங்களைப் பற்றிய தேவையில்லாத வதந்திகள் உலவிக் கொண்டிருக்கும். சகோதர சகோதரிகளின் நட்பும் அன்பும் அதிகரிக்கும், நெருங்கிய உறவினர்களால் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. புதிய விஷயங்களை கற்க வாய்ப்பு அமையும். வேலையின் நிமித்தமாக இடம், மனை மற்றும் ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. கூடியவரை அமைதியாக இருந்து வருவதே சிறப்பானது.

கேட்டை

கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களில் சற்று மகிழ்ச்சி குறைந்து காணப்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அதே சமயத்தில் எதிர்பார்த்த பொருள்வரவு வருவதில் சற்று காலதாமதம் ஏற்படும். தாயரால் எதிர்பாராத உதவி கிட்டும். உடன் பிறந்தவர்களால் தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும்.. எப்பொழுதும் சிந்தனை வயப்பட்டு கொண்டிருப்பீர்கள். உயர்கல்வி பயில சரியான சந்தப்பமிது. ஒரு சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். குழந்தைகளை விட்டுபிரிய நேரிடும் அல்லது அவர்கள் உங்களை விட்டு பிரிவார்கள். விருந்து கேளிக்கைகளில் சற்று நாட்டம் குறைந்து காண்பாடும். பொறுப்பும் குடும்ப பாரமும். தானாகவே வந்து உங்கள் தலையில் உட்கார்ந்து கொள்ளும். சுபகாரியங்கள் நடக்க சற்று போராட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்யத்தில் அதிகக்வனம் தேவை. அடிவயிற்றில் பிரச்சனை, நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்படாமல் உடலை பேணிக் காத்தல் வேண்டும். விரதத்தை தவிர்த்தல் நலம், நேரத்திற்கு உணவும் மருந்தும் உட்கொள்ளுதல் வேண்டும். வேலையில் அதிக கவனம் தேவை. எப்பொழுதும் டென்ஷனாக இருக்க வேண்டியது வரும். மனைதையும் உடலையும் இக்காலங்களில் சற்று ரிலாஸாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.

மிதுனம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு சனி பகவான் ஓரளவு நற்பலன்களை அளிக்க வல்லவராவார். இதுவரை ஏற்பட்டு வந்த தடங்கள் நிவர்த்தியாகி எதிர்பார்த்த பலன்கள் இனிதே நடந்தேறும். அதே சமயம் வலுவான போராட்டத்திற்கு பின் வெற்றி நிச்சயமாகும். முயற்சிகள் நற்பலன் கொடுக்கும். பெயர், புகழ், சம்பாத்தியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். சகோதர சகோதரர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது. கொடுக்கல் வாங்கல் சரளமாக இருந்து வரும். வண்டி வாகனங்கள் வீடு வாங்க வாய்ப்பு அமையும். பார்க்கும் வேலையில் அதிக கவனம் தேவை. அவசரப்பட்டு வேலையை விடக் கூடாது. காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. பிரயாணங்களில் அதிக அளவு ஈடுபாடும் விருப்பமும் அதிகரிக்கும்.

மிதுனராசி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

எதிர்பார்த்த எதிர்பாரத செய்திகள் சாதகமாக இருந்து வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல்கள், மன உலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்கள் நண்பர்களாவர். நண்பர்கள் எதிரிகளாவர். புது முயற்சியுடன், புது எழுச்சியுடன் செயல்படுவீர்கள் எடுத்த காரியங்கள் கைகூடும். புதிய முயற்சிகள் ஆரம்பத்தில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிட்டும். தைரியமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டு எடுத்த காரியத்தை வெற்றிப் பெற செய்வீர்கள். தாயரின் உடல் நலத்தில் அக்கறை தேவை.

உடன் பிறந்தவர்களால் நன்மையும் அதே சமயம் மன உளைச்சல்களும் ஏற்படும். நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். தாய்மாமன்களால் நன்மை ஏற்படும். வேலையாட்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. வேலையில் மாற்றம் அமையும் புதிய தொழில்களால் ஒரு சிலருக்கு இடமாற்றம் உண்டு. பொருளாதாரம் வலுவாக இருக்கும். நிலம், வீடு இவற்றில் முதலீடு அதிகரிக்கும். சுய தொழில்கள் நல்ல லாபகரமாக இருக்கும். வெளிநாடு, வெளி மாநிலம் செல்ல வாய்ப்புகள் அமையும். அதனால் நன்மையும் ஏற்படும். தந்தையால் எதிர்பாராத நற்பலன்கள் கூடும்.

மிதுனராசி புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

இந் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எதிர்பாராத தன வரவும், பொருள் வரவும் ஏற்படும். உயர்கல்வி பயில வாய்ப்பும் அதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அமையும் உடன் பிறந்தவர்களால் நன்மையேற்படும். நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. விபத்துகள், ஆப்ரேஷன் செய்ய சந்தர்ப்பம் அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும், கடன்கள் அதிகரித்து, வட்டி கட்ட வேண்டி வரும். வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். வேலையில் மாற்றம் ஏற்படும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற பாடுபட வேண்டி வரும். வேலையில் முன்னேற்றமும் இடமாற்றமும் ஏற்படும் தந்தையார் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். உயரதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பாடு விலகும். உங்களை பற்றிய வீண் வதந்திகள் பரவ வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.

sani peyarchi 2017

சனியின் 3ம் பார்வை பலன்கள்

சனி 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 9ம் இடத்தைப் பார்ப்பதால் வேலையில் மாற்றம் ஏற்படும். பார்க்கும் வேலையை விட வேண்டி வரும். ஒரு சிலருக்கு வேலை காரணமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். தந்தையரால் நன்மையும் அதே சமயம் அவரது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் பேரன், பேத்தி, மருமகன், மருமகள் என புதிய உறவுகள் வந்து சேரும். ஒரு சிலருக்கு உயர்கல்வி தடையேற்பட்டு பின் கல்வி தொடரும். உயர்கல்வி பயில வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வந்து சேரும். இதுவரை வந்து சேராத பாஸ்போர்ட், விசா வந்து சேரும். அடிக்கடி ஆலய தரிசனம் தெய்வ தரிசனம் கிட்டும். மூத்தோர்களின் ஆசியும் அன்பும் கிட்டும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். புதிய தொழில்கள் தொடங்க வாய்ப்பு அமையும் பார்ட்னர்கள் லாபம் அடைவர்.

சனியின் 7ம் பார்வை பலன்கள்

7ம் பார்வையாக சனி பகவான் மிதுன ராசியைப் பார்ப்பதால் புகழ் கீர்த்தி அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறிது தடையேற்பட்டாலும் இறுதியில் வெற்றி அமையும் தேவையற்ற விஷயங்களில் தலையிடவோ பேசவோ கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். எதிர்பாராத உதவிகள் வந்து சேர்ந்தாலும் அதை சரியாக பயன்படுத்த காலதாமதம் ஆகும். காதல் விஷயங்களில் ஈடுபாடும் அதில் வெற்றியும் ஒரு சிலருக்கு அமையும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் பரவும். தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும். அதே சமயம் எதிர்பாராத பணவரவும் பொருள் வரவும் ஏற்படும். மனைவி அல்லது முன்னோர்கள் சொத்துக்கள் இருந்தால் ஒரு சிலருக்கு வந்து சேரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்து வரும்.

சனியின் 10ம் பார்வை பலன்கள்

சனி 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 4ம் இடத்தை பார்ப்பதால் இதுவரை வராத சொத்துக்கள் வந்து சேரும். ஒரு சிலருக்கு இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்குவதில் ஆரம்பத்தில் இருந்து வந்த தடை நீங்கி நினைத்த காரியம் நடந்தேறும். தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். ஒரு சிலருக்கு உயர்கல்வி பயில வாய்ப்புகள் வந்து சேரும். விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க போராட வேண்டியது வரும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. நினைத்த நேரத்திற்கு உணவு அருந்தவோ, சாப்பிடவோ முடியாமல் போகும். உணவு கட்டுபாடு அவசியம். தொழிலில் நிச்சயமற்ற தன்மையும் காண்ப்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆரம்பத்தில் சற்று சுனக்கம் ஏற்பட்டாலும் லாபம் கிட்டும். விவசாயம் லாபகரமாக அமையும். வீட்டு வளர்ப்புப் பிராணிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். வேலையாட்களால் எதிர்பார்த்த நன்மைகள் அமையும்.

kadagamகடக ராசி பலன்கள்
(புனர்பூசம், 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

(ஹி – ஹூ – ஹே – ஹோ – ட – டி – டு – டெ – டோ – கொ – கௌ – மெ – மை போன்ற எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்கள் ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்)

வான மண்டலத்தில் 4வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதன் சந்திரன் ஆவார். நவக்கிரகங்களில் சந்திரன் ஒருவர் மட்டுமே வளர்ந்து தேய்ந்து வலம் வருபவராக இருப்பார். ஊரோடு சேர்ந்து வாழ்ந்து பழகும் இயர்புடைய நீங்கள் சிந்தனை சக்தியும் அதை செயல்படுத்துவதில் ஆர்வமும் திறமையும் உடையவர்கள். அதற்காக முயன்று முயற்சி அடைந்து வெற்றி பெறப்படுவீர்கள். எதற்கும் ஆசைப்படாத உங்களுக்கு ஏதாவது ஒரு துறையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும் என்ற தனியாத ஆர்வம் உடையவர்கள்.

புனர்பூசம் 4ம் பாதம் பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தை உடைய உங்கள் கடகராசிக்கு இதுவரை 5ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடமான வெற்றி, ருண, ரோக, சத்குரு எதிரி கடன் ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார். இதுவரை போராட்டமாக இருந்து வந்த வாழ்க்கையில் வெற்றியின் அருமையை உணர வேண்டிய தருணம் வந்து விட்டது. இதுவரை நடை பெறாமல் தள்ளிப் போன விஷயங்கள் எளிதில் வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும்.

6ம் இடமான தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் உருவாக்குவார். வேலையில் முன்னேற்றமும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படுத்துவார். இதுவரை அடிக்கடி வேலை மாறிய அல்லது பார்த்த வேலையை விட்டுவிடக் கூடிய சூழ்நிலையில் இருந்த நீங்கள் இனிமேல் உங்களுக்கு பிடித்த வேலையில் அமரும் வாய்ப்பு அமையும். அதிக மகிழ்ச்சியுடன் வேலையில் ஈடுபடுவீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமும் உங்களைச் செயல்பட வைப்பார். இதுவரை நிலுவையில் இருந்த பணம், பொருள் வந்து சேரும். வேலைக்கு ஏற்ற ஊதியமும் அதற்கேற்ப உங்களுக்கு ஊதிய உயர்வும் ஏற்படும். வேலையில் மாற்றம் ஒரு சிலருக்கு ஏற்படும்.

உங்களுடைய கௌரவம் அந்தஸ்து, புகழ் அதிகரிக்கும் எடுக்கும் காரியங்களில் முழு மனதுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாகவும் சகாயமாகவும் வந்து சேரும். புதிய விஷயங்களில் ஈடுபட்டு வெற்றி பெறப் பாடுபடுவீர்கள். பேச்சு வார்த்தைகளில் எதிர்பாராத லாபம் ஏற்படும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். இதுவரை வராமல் இருந்த வந்த சொத்து பத்துக்கள், நகைகள், பணங்கள் இனி தானாக வந்து சேரும்.

சகோதர சகோதரிகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியம் நடக்க வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் புது உறுப்பினர்கள் வருகை நன்மையாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வந்து சேரும். தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. ஒரு சிலருக்கு வண்டி வாகனம், வீடு, இடம், மனை போன்றவைகள் அமைய வாய்ப்புகள் வந்து சேரும்.

குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் ஏற்பட வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். உங்களது உழைப்ப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.

வேலையாட்களால் நன்மை ஏற்படும். தாய் மாமன்களின் அன்பும் ஆதரவும் நிறைந்து காணப்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வழக்குகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரிக்கும், எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். புது புதுப் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. உடலில் தேமல், அரிப்பு, கட்டி போன்ற நோய்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும்.

காதல் விஷயங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் சாதகமாகவும் இருந்து வரும். காதல் கனிந்து ஒரு சிலருக்கு திருமணத்தில் முடியும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும். முன்னோர்கள் சொத்து அல்லது எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் போல் இருந்து வரும். அரசாங்கத்தால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். பங்கு சந்தைகள் முதலீட்டில் அதிக கவனம் தேவை. ரேஸ், லாட்டரி இவற்றில் அதிக எச்சரிக்கைகள் தேவை. விசா, பாஸ்போர்ட் இவைகள் எளிதாக வந்து சேரும். நண்பர்களால் எதிர்பார்த்த அளவு அன்பும் ஆதரவும் கிட்டும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.

வேலை அல்லது உத்யோகம் (JOB)

உங்களது ராசிக்கு 6ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் இதுவரை வேலையில்லாமல் இருப்பவர்களுள் விரும்பிய வேலை கிடைக்கவும், வேலையில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம். உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் ஏற்படும். வேளை நிமித்தமாக ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு நன்கு கிட்டும். உயரதிகாரிகளால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். தடை பெற்று நின்ற பென்ஷன் பி.எப் கிராஜிவட்டி போன்ற விஷயங்கள் இனிதே நடந்தேறும். பார்க்கும் வேலையை விட்டுவிட கூடாது.

தொழில் (Business) வியாபாரம் (Trade)

சுயதொழில் விஷயத்தில் சற்று நிதானம் தேவை. முதலீட்டில் அதிக கவனம் தேவை. கூட்டாளிகளால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படும். கூட்டாளிகள் பிரிய நேரிடும், புதிய தொழில் தொடங்குவதிலும் தொழிலை மாற்றிச் செய்வதிலும் அதிக கவனம் தேவை. ரேஸ், லாட்டரி, ஷேர் மார்கெட்டில் முதலீடுகளில் அதிக கவனம் தேவை. தகவல் தொடர்பு, எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் லாபகரமாக அமையும். இரும்பு எஃகு, சிமெண்ட், ரசாயனம், கனிமவளங்கள் லாபகரமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சற்று சுமாராக இருந்து வரும். சிறு தொழில் உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று சுமாராக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸிஸ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி, போக்குவரத்து சற்று லாபம் குறைந்து காணப்படும். உணவு விடுதி, ஆடை, ஆபரணம், ஜவுளி துறைகள் லாபகரமாகவும், நகை தொழில் சுமாராக இருந்து வரும். சுற்றுலா, பத்திரிக்கை, தொலைகாட்சி, சினிமா, திரையரங்குகள் லாபகரமாக இருக்கும். கப்பல், நீர், மீன் பிடித் தொழில்கள் சற்று சுமாரகவும், மருத்துவம் விஞ்ஞானம், ரசாயனம் லாபகரமாக இருக்கும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் ஏற்றம் பெற்று பள்ளிக் கல்லூரி, பல்கலை கழகங்கள் சற்று லாபம் குறைந்து இருக்கும்.

விவசாயம்

மண்ணிலே போட்டதற்கு கண்டிப்பக ஒரு பலன் பார்க்கும் காலம் இதுவாகும். நிலத்தை பராமரிப்பதும் பயிர் சாகுபடி சிரமங்கள் தந்தாலும் ஓரளவு லாபம் அதிகமாக இருந்து வரும். மகசூழும் நல்ல லாபமாக இருக்கும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் பயறு வகைகள் ஓரளவு எதிர்பர்த்த லாபம் கிட்டும். மேலும் நெல், கோதுமை, கரும்பு, வாழை மற்றும் பணப்பயிர்களால் ஓரளவு நன்மை ஏற்படும்.

அரசியல்

உங்களை பற்றிய தவறான விமர்சனங்கள் குறைந்து உங்களைப் பற்றிய உயர்வும் மதிப்பும் உயர்ந்து காணப்படும். தொண்டர்களின் உண்மையான அன்பும் ஆதரவும் கிட்டும். அரசால் லாபம் ஏற்படும். எதிரிகள் எப்பொழுதும் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். மக்களின் ஆதரவு கிட்டும். வழக்குகள் சாதகமாக இராது. தலைமையின் அன்புக்கு கட்டுப்படுவீர்கள் நல்ல பணப்புழக்கம் இருந்து வரும்.

கலை

கலைத்துறை ஏற்றமுடன் இருந்து வரும். இதுவரை வெளிவராமல் போன உங்கள் திறமையை வெளிபடுத்தும் சரியான காலம் ஆகும். ஓய்வின்றி எப்பொழுதும் வேலை இருக்கும் காலமாகும். இசை, ஓவியம், நடனம், நாட்டியம், நாடகம் ஆகியவை பரபரப்பாக இருந்து வரும். பரிசும் பாராட்டும் எதிர்பாராத வகையில் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும்.

மாணவர்கள்

எதிர்பார்த்த பள்ளி கல்லுரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புகள் அமையும். படிப்பில் சந்தேகம், சஞ்சலம் தடுமாற்றம் ஏற்பட்டாலும் இறுதியில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்பு அமையும். விளையாட்டில் அதிக கவனம் தேவை. ஒரு சிலருக்கு விளையாட்டில் பரிசு பெற சந்தர்ப்பம் அமையும். தைரியம், தன்னம்பிக்கை, முயற்சி இவற்றை அதிகரித்துக் கொள்ளல் வேண்டும். கல்வி கடன்கள் எளிதாகக் கிடைக்கும். கல்வியின் உயர்கல்வியின் காரணமாக ஒரு சிலர் வெளிநாடு செல்லலாம்.

பெண்கள்

வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளிநாடு வெளியூர் செல்ல வாய்ப்பு கிட்டும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருந்து வரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். குடும்பத்தில் புது வரவால் மகிழ்ச்சி ஏற்படும். பொன், பொருள்கள், ஆடை, ஆபரணங்கள் தானாகவே வந்து சேரும். அக்கம் பக்கத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புகள் வந்து சேரும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். புத்ரபாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ரபாக்யம் ஏற்படும். வேலையாட்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். உயர்கல்வி பயில ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.

உடல் ஆரோக்யம்

உடம்பில் சளித் தொல்லைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். உடலின் மேல் தேமல், கட்டி, போன்ற நோய்கள் வராமல் கவனித்தல் நலம். கண் அடிவயிறு பிரச்சனைகள் வராமல் பார்ப்பது நலம். அத்துடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காலமிது. எனவே உடலில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரை அணுகுதல் வேண்டும்.

சனிபகவான் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள்

மூலம் :

சனிபகவான் மூலம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் கடக ராசிக்காரர்களாகிய உங்களுக்கு சற்று சுமாரான பலன்கள் ஏற்படும். இதுவரை முடியாமல் இழுபறியான காரியம் இனிதே நடக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அதே சமயம் எதற்கும் போராடியே வெற்றி பெற வேண்டி வரும். அனாவசிய சிரமங்களும் சில சமயங்களில் அலைச்சல்களும் அதிகரிக்கும். அதே சமயம் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. வழக்கு, எதிர்ப்பு, பிணி, பீடை, விரோதம் இவற்றிலிருந்து விடுபட்டாலும் மறுபடியும் மறுபடியும் ஏதாவது ஒரு பிரச்சனை தலையெடுத்த வண்ணம் இருக்கும். இருப்பினும் முயற்சியும் தெய்வபக்தியும் அதிகரித்தால் இவற்றிலிருந்து விடுபட வழி ஏற்படும். உடன் பணிபுரிந்தவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். தொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும்.

பூராடம்

சனிபகவான் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் கடக ராசிக் காரர்களாகிய உங்களுக்கு புதிய முயற்சிகள் எடுக்கும் காரியங்களில் சற்று தாமதம் ஏற்பட்டு பின் சரியாகும். சுப காரியங்கள் இனிதே நடந்தேறும், சுபச் செலவுகள் அதிகரிக்கும் தாயாரின் உடல் ஆரோக்யம் நன்கு அமையும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடிய காலமாகும். சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கள், விவகாரங்கள் விலகி அவைகள் கைக்கு வந்து சேரும். சொந்தமாக இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். வேலையில் திருப்தியற்ற தன்மை இருந்து கொண்டே இருக்கும். மன உலைச்சல்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கால்நடை மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகளால் லாபம் ஏற்படும். உயர்கல்வி பயில வாய்ப்பும் வேலையில் மாற்றமும் ஏற்படும் காலமாகும் பெற்றோர்களுக்கான கடமைகளை சரிவர செய்வீர்கள் எதிலும் உடனடியாகவும், உறுதிபடவும் முடிவெடுக்க தயங்குதல் மற்றும் சுனக்கம் கூடாது. பிள்ளைகளை விட்டுப் பிரிய நேரிடும் குழந்தைகளால் சுப விரயம் ஏற்படும் காலமாகும்.

உத்தராடம்

சனிபகவான் உத்தராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் ராசிக்கு சற்று நற்பலன்கள் அதிகரிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பேச்சில் அதிக லாபம் அடையலாம் பண வரவுகள் தாரளமாக இருந்து வரும். பண வரவுகள் தாரளமாக இருந்து வரும். குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை அமையும். அதனால் நன்மைகள் ஏற்படும். அக்கம் பக்கம் கௌரவம் அந்தஸ்து அதிகரிக்கும் இதுவரை வராமல் இருந்து வந்த பணம் பொருள் கைக்கு வந்து சேரும். எப்பொழும் சுறுசுறுப்புடன் இருக்கும் சூழ்நிலை அமையும் சகோதர சகோதரிகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். நெருங்கிய உறவினர்களை விட்டு பிரிய நேரிடும். சுப நிகழ்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்யம் கிட்டும். எதிர்பாராத தனவரவு அமையும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை அமையும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் வந்து சேரும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் அமையும். காதல் கனிந்து திருமணத்தில் முடியும்.

கேட்டை

நட்சத்திரத்தில் சனி பகவான் தங்களுக்குரிய ராசியில் சஞ்சரிக்கும் காலங்கள் சற்று சுமாரான காலம் என்றே சொல்ல வேண்டும். அலைச்சல்கள் அதிகரிக்கும் அதனால் தேவையற்ற மன உளைச்சல்கள் அதிகரிக்கும் சகோதர சகோதரிகளால் தேவையற்ற மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். நெருங்கிய உறுப்பினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். இருக்கும் பொருட்கள் கையை விட்டுப் போகும் நாணயம் தவறி நடக்கும் சூழ்நிலை அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் திருமணம் என்று வரும்பொழுது சற்று போராட்டமாகவும் அமையும். திருப்தியான மனநிலை இருந்து வரும். அதே சமயம் பணவரவு சீராக இருந்து வரும். தந்தையாரால் எதிர்பாராத தனவரவு, பொருள் வரவு கிட்டும். நட்பு வட்டாரங்களில். விரிசல்கள் ஏற்படும் விலகும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும்.

புனர்பூசம் 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த இக்கட்டுகள் குறைய ஆரம்பிக்கும். உழைப்பு கேற்ற ஊதியமும் வருமானமும் சீராக இருந்து வரும். இதுவரை பாடுபடுத்தி வந்த நோயின் தன்மை குறையும் அல்லல்களும் அலைச்சல்களும் அதிகரிக்கும். அடிப்படையான வசதிகளுக்கு குறைவிருக்காது. படிப்பு, பயிற்சி முடித்த உடனே வேலை கிடைக்கும். வாய்ப்புக்கள் அதிகரிக்கும். பணப்புழக்கம் சீராக இருந்து வரும் நேரத்திற்கு உணவு அருந்த முடியாமல் போகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி நிச்சயம் பரிசுகள் மற்றும் நன்மதிப்பு பெற வாய்ப்பு அமையும். நல்ல ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் வலுவாக இருக்கும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் சில பேருக்கு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். பாஸ்போர்ட், விசா எளிதில் வந்தடையும். கடன்கள் அதிகரிக்கும், அதே சமயம் நோயின் தனமையும் அதிகரித்து காணப்படும். எப்பொழுதும் சுறு சுறுப்பாக செயல்பட்டு கொண்டு இருப்பீர்கள்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

இந் நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்த நிலை மாறி வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். சுய தொழில்கள் சற்று சுமாரகவே இருந்து வரும் பங்கு சந்தை ஏற்றமாக இருந்து வரும். உழைப்புகேற்ற ஊதியத்தை கொடுப்பதில் சனி சற்று தயக்கம் காட்டுவார். அதே சமயம் எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். செய்திகள் சாதகமாக இருந்து வரும். கேட்ட இடங்களில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி உறவில் விரிசல்கள் ஏற்பட்டு மனத்தாங்கல் ஏற்படும். அம்மாவின் தேவைகளை கவனிக்க முடியாமல் போய்விடும். நோயின் தன்மை கூடிக் கொண்டே இருக்கும். குறையாது அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களால் மன வருத்தங்கள் ஏற்படும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும் மனைவிக்கு அடிக்கடி உடல் ஆரோக்ய குறைபாடு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனிப் பெயர்ச்சியால் அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும் அதனால் உடல் ஆரோக்யம் பாதிக்கப்படும். எதிர்பார்க்கும் செய்திகள் சற்று தாமதமாக வந்து சேரும் இடமாற்றம் மற்றும் ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். முயற்சிகளில் சற்று தடுமாற்றம் ஏற்படும். போட்டிகள் எதிர்ப்புகள் தோன்றி மறையும் சகோதர சகோதரிகளால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். சுய தொழில் சிறு தொழில்களில் அதிகக் கவனம் தேவை. வண்டி வாகனங்கள் ஓட்டி பழக சந்தர்ப்பம் அமையும். உள்ளத்தில் புதிய ஊக்கமும், உறுதியும் உண்டாகும். அதை செயல்படுத்துவதில் கடுமையாகப் போராட வேண்டி வரும். மேலும் பாஸ்போர்ட், விசா இவற்றில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி வெளிநாடு செல்வதற்கு ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்யத்தில் குறைவு ஏற்பட்டு தேவையற்ற வைத்தியச் செலவுகள் ஏற்படும். கடமைகளையும் காரியங்களையும் ஒழுங்காக செய்து வருதல் வேண்டும் குழந்தைகளால் நன்மை உண்டாகும். வேலையின் காரணமாக இடமாற்றங்கள் அமையும்.

 

சனியின் 3ம் பார்வை பலன்கள்

உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் 3ம் பார்வையாக உங்கள் லக்னத்திற்கு 8ம் இடத்தை பார்வை செய்வது நல்லதல்ல. 8ம் இடம் போக்குவரத்து வண்டி, வாகனங்களில் விபத்தை உண்டுபண்ணும் இடமாதலால் அதிக எச்சரிக்கை தேவை. ஆப்ரேஷன் மற்றும் அரசால் தண்டிக்கப்படுவதையும் குறிப்பிடுவதால் கவனம் தேவை. 8ம் இடம் என்பது அசிங்கம், அவமானம், வேதனை, துன்பம், துயரம் இவற்றை குறிப்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். தந்தையின் உடல் நலத்தில் அதிக அக்கறையுடன் கவனம் செலுத்துதல் வேண்டும். தேவையற்ற விரயம், அலைச்சல்கள், அவமானங்களும் ஏற்படும். அதே சமயம் கணவன் அல்லது மனைவியின் பண வரவும், பொருள் வரவும் அதிகரிக்கும். முன்னோர்களது சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பும் எதிர்பாராத பணவரவும் பொருள்வரவும் அமையும். வழக்குகளால் தேவையற்ற பிரச்சனைகள் மன வருத்தங்கள் ஏற்படும். அரசாங்க பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

சனியின் 7ம் பார்வை பலன்கள்

சனி 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12ம் இடத்தை பார்ப்பது சற்று சுமாரான பலன் தரும். தேவையற்ற விரயம், நஷ்டங்கள் ஏற்படும். வெளிநாடு செல்வதில் இருந்து வந்த தடை நீங்கி வெளிநாடு செல்ல வாய்ப்பும் சந்தர்ப்ப்பம் அமையும். முற்றிலும் புதிய சூழ்நிலைகளில் வாழும் நிலை ஒரு சிலருக்கு அமையும். தேவையற்ற வைத்திய செலவுகள் ஏற்படும். பங்கு சந்தையில் முதலீடு கூடாது. அடிக்கடி பிரயாணங்களில் இருக்க நேரிடும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படும். தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடகூடாது. புதிய தொழில் தொடங்குவதில் கவனம் தேவை. பார்ட்னர்கள் பிரிய நேரிடும்.

சனியின் 10ம் பார்வை பலன்கள்

சனி பகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 3ம் இடத்தை பார்ப்பது மிகவும் நற்பலன். 3ம் இடம் முயற்சி ஸ்தானம். ஆரம்பத்தில் முயற்சியில் சற்று தடையேற்பட்டாலும் இறுதியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும். சகோதர சகோதரிகளால் சற்று பிரச்சனை ஏற்பட்டாலும் அவர்களால் நற்பலன்கள் ஏற்படும். எடுக்கும் காரியங்கள் கைகூடும் புதிய விஷயங்களை கற்க வாய்ப்பு அமையும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும் அவர்களால் நன்மை உண்டாகும். உங்களை காட்டிலும் இளையவர்களால் நன்மை ஏற்படும். விசா பாஸ்போர்ட்டில் இருந்த தடைகள் நீங்கும். நினைத்த நாடு செல்வதற்கு வாய்ப்பு அமையும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும். வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வும் கிட்டும். மதிப்பும் மரியாதையும் உயரும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: