• திசெம்பர் 2016
  தி செ பு விய வெ ஞா
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  262728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,273,137 hits
 • சகோதர இணையங்கள்

2017 – ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

 

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

நிகழும் துன்முகி வருடம் மார்கழி மாதம் 17-ம் தேதி வளர்பிறை திரிதியை திதி, திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கன்னி லக்னம் சித்தயோகம் கூடிய நாளில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எண்

ஜோதிடப்படி இந்தப் புத்தாண்டு 2017 சூரியனின் ஆதிக்க எண்ணாகிய 1-ல் வருவதால், மக்களிடையே ஆன்மிகத்திலும் அரசியலிலும் விழிப்பு உணர்வு உண்டாகும். தங்கத்தின் விலை குறையும். தங்கத்தின் பயன்பாடு மற்றும் சேமிப்பு குறையும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நீர்நிலைகள், வரலாற்றுச் சின்னங்களை மீட்டுப் பாதுகாக்கவும் புதிய சட்டங்கள் வரும்.

கற்பூரப் புத்தி உள்ளவர்களே!

ங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் லாப வீட்டில் நிற்கும் போது, இந்த ஆண்டு பிறப் பதால் ஆளுமைத் திறன் கூடும். புதிய பதவி, பூர்விகச் சொத்து கிடைக்கும். ஜூலை 26-ம் தேதி வரை கேது லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் பணவரவு, புதிய வேலை கிடைக்கும். ஜூலை 27-ம் தேதி முதல் ராகு, கேது இடம் மாறுவதால், தாயாரின் உடல்நலம் பாதிப்பும் பணிச்சுமையும் ஏற்படும். 2.9.17 முதல் குரு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், இழந்த பணம் திரும்பக் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதி இணைவர். அடகு நகை, சொத்துகளை மீட்க வழி பிறக்கும். 14.12.17 வரை சனி அஷ்டமத்தில் இருப்பதால், பிறரை நம்பி பெரிய முடிவு எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் பங்கு தாரர்களால் பிரச்னை ஏற்படும். செப்டம்பர் முதல் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நியாயமாகக் கிடைக்கவேண்டிய சலுகைகளைக்கூட போராடித்தான் பெற வேண்டி இருக்கும்.

இந்தப் புத்தாண்டு கனவுகளை நனவாக்குவதாக அமையும்.முயற்சியால் முன்னேற முடிவதாக அமையும்.


உழைப்பால் சாதிப்பவர்களே!

ங்கள் ராசிநாதன் சுக்கிரன் 10-ம் இடத்தில் பிறக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். 26.7.17 வரை கேது 10-லும் ராகு 4-லும் இருப்பதால், வேலைச்சுமை, உத்தியோகத்தில் விரும்பாத இடமாற்றம் உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். 1.9.17 வரை குரு 5-ம் இடத்தில் இருப்பதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு புதிய வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 2.9.17 முதல் குரு 6-ல் மறைவதால், எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். கடன் தொல்லை அதிகரிக்கும். வருடம் முழுவதும் சனி 7-ல் கண்டகச் சனி இருப்பதாலும் வருட முடிவில் அஷ்டமத்துச் சனி வருவதாலும் தம்பதிக்குள் வீண் பிரச்னைகள் ஏற்படும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தி யோகத்தில் உங்கள் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

இந்த ஆண்டு சமூக அந்தஸ் தைத் தருவதாக அமையும்.


இரக்க குணம் அதிகமுள்ளவர்களே!

குரு 1.9.17 வரை 4-ல் இருப்பதால், எதிர்ப்புகள் அதி கமாகும். தாயின் உடல்நலனில் அக்கறை தேவை. 2.9.17 முதல் குரு 5-ல் அமர்வதால், பிள்ளை களால் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளால் வீடுகளை கட்டும். பழைய கடன்கள் தீரும். ராசிக்கு 9-ம் இடத்தில் சுக்கிரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், தடைப்பட்ட காரியங்கள் முடியும். ரசனைக்கு ஏற்ப வீடு, வாகனம் அமையும். 9-ல் கேது நிற்பதால், தந்தைக்கு ஆரோக்கியக் குறைவு, வீண் செலவு வந்து செல்லும். 3-ம் வீட்டில் ராகு இருப்பதால், தைரியம் பிறக்கும். விசா கிடைக்கும். வழக்கு சாதகமாகும். 27.7.17 முதல் ராகுவும் கேதுவும் மாறுவதால் சிறு விபத்துகள், வீண் வாக்குவாதம், பணப்பற்றாக்குறை வந்து செல்லும். வியாபாரத்தில் திடீர் லாபம், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் வரும். வேலைச் சுமை குறையும்.

இந்த ஆண்டு நமக்கு நாமே என்பதை உணர்த்தும்.


புதுமை விரும்பிகளே!

ங்கள் ராசிக்கு 7-ல் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், திட்டமிட்டு செயல் படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். 1.9.17 வரை குரு 3-ல் இருப்பதால், முயற்சிகள் தாமதமாகி முடியும். 2.9.17 முதல் குரு 4-ல் அமர்வதால், தடைப்பட்ட காரியங்கள் முடியும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. 14.12.17 வரை சனி 5-ல் இருப்பதால், மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். 15.12.17 முதல் சனி 6-ல் அமர்வதால், எதிர்ப்பு கள் அடங்கும். 26.7.17 வரை ராகு 2-லும் கேது 8-லும் இருப்பதால், சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். ஜூலை 27 முதல் ராகு 1-லும் கேது 7-லும் இடம் மாறுவதால் கணவன் – மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்தவேண்டியது அவசியம். வியாபாரத்தை மேம்படுத்த விளம்பரம் செய்வீர்கள். உத்தி யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும்.

இந்த வருடம் அளவாகப் பேசி நன்மை பெறுவதாக அமையும்.


அதிகாரத்துக்கு அடிபணியாதவர்களே!

ங்கள் ராசிக்கு சுக்கிரனின் பார்வை படு வதால், செயலில் வேகம் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். ஜூலை 27 முதல் ராகு 12-லும் கேது 6-லும் அமர்வதால், உடல் நலம் சீராகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.  1.9.17 வரை குரு 2-ல் இருப்பதால், ஆடை ஆபரணம் சேரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள். 1.9.17 முதல் குரு 3-ல் அமர்வதால், காரியங்களைப் போராடித் தான் முடிக்க வேண்டி வரும். 14.12.17 வரை சனி 4-ல் இருப்பதால், தாயாரின் உடல்நலனில் அக்கறை செலுத்தவும். 15.12.17 முதல் சனி 5-ல் அமர்வதால், வருமானத்தை உயர்த்த கூடுதலாக உழைக்க வேண்டி வரும். பூர்விகச் சொத்து பிரச்னையில் பக்குவமாக நடக்கவும். வியாபாரத்தில் முதலீடு அதிகரிக்கும்; போட்டி அதிகமாகும். பணிகளை உடனுக் குடன் முடிப்பது அவசியம். வெளி நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் வரும்.

இந்த ஆண்டு அலைச்சலுடன் ஆதாயம் தருவதாக அமையும்.


கனிவாகப் பேசி காய் நகர்த்துபவர்களே!

செவ்வாய் 6-லும் சூரியன் 4-லும் வலுவாக இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், எதிலும் வெற்றி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். ஜூலை 26 வரை கேது 6-ல் இருப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். ஆனால், ராகு 12-ல் இருப்பதால், கடன் கவலை வந்து போகும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். ஜூலை 27 முதல் கேது 5-ல் அமர்வதால், முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். ராகு 11-ல் இருப்பதால், பெரிய திட்டங்கள் நிறைவேறும். ஷேர் மூலம் லாபம் வரும். 1.9.17 வரை குரு 1-ல் தொடர்வதால், ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். 2.9.17 முதல் குரு 2-ல் அமர்வதால், பணவரவு கூடும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 14.12.17 வரை சனி 3-ல் இருப்பதால், இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் அனுபவம் மிக்கவர்கள் பணியில் சேருவர். உத்தியோகத்தில் செப்டம்பருக்குப் பிறகு அனுகூல மான சூழ்நிலை உண்டாகும்.

இந்த வருடம் மகிழ்ச்சியுடன் பணவரவு தருவதாக அமையும்.


பிரதிபலன் பாராமல் உதவுபவர்களே!

ங்கள் ராசிக்கு 4-ல் சந்திரன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், பணம் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். முக்கிய பொறுப்புகள் தேடி வரும். புது வேலை கிடைக்கும். மகளின் திருமணம் கூடி வரும். ராகு 11-ல் இருப்பதால், வசதி வாய்ப்புகள் பெருகும். கேது 5-ல் இருப்பதால், பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகும். ஜூலை 27 முதல் ராகு 10-லும் கேது 4-லும் அமர்வதால், மனதில் இனம் தெரியாத கவலைகள் உண்டாகும். இரவு பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 1.9.17 வரை குரு 12-ல் இருப்பதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். 2.9.17 முதல் குரு ஜன்ம குருவாக வருவதால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 14.12.17 வரை சனி 2-ல் பாதச் சனியாக அமர்வதால், பணப் பற்றாக்குறை ஏற்படும். பல்வலி, காதுவலி வந்து நீங்கும். 15.12.17 முதல் சனி 3-ல் அமர்வதால், வழக்குகளில் வெற்றி உண்டா கும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை கவனத்தில் கொண்டு முதலீடு செய்வது அவசியம். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் திறமையை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வர். சலுகைகளைப் போராடிப் பெறவேண்டி இருக்கும்.

இந்த வருடம் வெற்றியும் முன் னேற்றமும் தருவதாக அமையும்.


நினைத்ததை முடிப்பவர்களே!

குரு 11-ல் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், புகழ் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவும் உண்டு. பெரிய பதவிகள் தேடி வரும். ஆனால், 2.9.17 முதல் குரு 12-ல் மறைவதால், ஒரேநேரத்தில் பல வேலைகளை முடிக்கவேண்டி இருக்கும். ராசிக்கு 3-ல் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், துணிச்சலாகச் செயல் படுவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். மனவலிமை கூடும். ஜூலை 26 வரை ராகு 4-லும் கேது 10-லும் அமர்வதால், காரியத் தாமதம், வீண் அலைச்சல் வந்து போகும். ஜூலை 27 முதல் கேது 3-ல் அமர்வதால், இளைய சகோதரவகையில் அனுகூலம் உண்டாகும். ராகு 9-ல் அமர்வதால் சேமிப்புகள் குறையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். 14.12.17 வரை சனி ஜன்மச் சனியாகத் தொடர்வதால், உடல்நலனில் கூடுதல் கவனம் தேவை. பணப் புழக்கம் இருந்தாலும் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். 15.12.17 முதல் சனி 2-ல் அமர்வதால், நோய்கள் நீங்கும். ஆனால், பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்ப தால் வார்த்தைகளில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் அலைக் கழிப்புகள் இருக்கும். உங்கள் மீது வழக்கு தொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த வருடம் அதிகாரமும் செல்வமும் தருவதாக அமையும்.


தன்மானம் தவறாதவர்களே!

ருடம் பிறக்கும்போது உங் களின் பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் 3-ல் வலுவாக இருப்பதால், மனவலிமை கூடும்.ஏப்ரல் 11 முதல் மே 26 வரை செவ்வாயைச் சனி பார்க்க இருப்ப தால், பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். ஜூலை 26 வரை ராசிக்கு 3-ல் கேது நிற்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். ராகு 9-ல் இருப்பதால், செலவுகள் அதிகரிக்கும். தந்தை யின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஜூலை 27 முதல் கேது 2-லும் ராகு 8-லும் இருப்பதால், தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சலசலப்புகள் உண்டாகும். 1.9.17 வரை குரு 10-ல் இருப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். 2.9.17 முதல் குரு லாப வீட்டில் அமர்வதால், சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பணவரவு கூடும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 14.12.17 வரை சனி 12-ல் இருப்பதால், செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களிடம் வீண் பகை வளர்த்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களை ஊக்குவிப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். உத்தி யோகத்தில் மகிழ்ச்சியான சூழ் நிலை காணப்படும்.

இந்த வருடம் சுறுசுறுப்புடன் வசதிகளைத் தருவதாக அமையும்.


மற்றவர்களை மதிப்பவர்களே!

னி 14.12.17 வரை லாப வீட்டில் இருப்பதால், எதையும் சாதிப்பீர்கள். வருமானம் உயரும். திருமணம் கூடிவரும். 15.12.17 முதல் சனி 12-ல் ஏழரைச் சனியாக விரயத்தில் வருவதால், வரவுக்கு அதிகமான செலவுகள் ஏற்படும். தூக்கம் குறையும். 2-ல் சுக்கிரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். 1.9.17 வரை குரு 9-ல் இருப்பதால், தன்னம்பிக்கை கூடும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் 2.9.17 முதல் குரு 10-ல் அமர்வ தால், வேலைச் சுமை அதிகரிக்கும். ஜூலை 26 வரை 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் இருப்பதால், மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஜூலை 27 முதல் 1-ல் ராகுவும் 7-ல் கேதுவும் இருப்பதால், கணவன் – மனைவி தங்களுக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் யாருக்கும் கடன் தரவேண்டாம். வேலையாட்கள் விலகிச் செல்வதால், அவர்களது வேலைகளை நீங்களே பார்க்க வேண்டி இருக்கும். ஒரேநேரத்தில் பல வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி இருக்கும். சலுகை கள் கிடைப்பது தாமதமாகும்.

இந்த வருடம் பல வகைகளிலும் மகிழ்ச்சி தருவதாக அமையும்.


மன்னிக்கும் குணம் உள்ளவர்களே!

டிசம்பர் 14 வரை சனி 10-ல் இருப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். டிசம்பர் 15 முதல் சனி லாபஸ்தானத்தில் அமர்வதால், திடீர் யோகம், பணவரவு உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். கௌரவப் பதவிகள் வரும். அரசு வகையில் ஆதாயம் உண்டாகும். 1.9.17 வரை குரு 8-ல் இருப்பதால், வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 2.9.17 முதல் குரு 9-ல் அமர்வதால், தடைப் பட்ட காரியங்கள் முடியும். கடன் கள் தீரும். ராசிக்கு 12- ல் சந்திரன் நிற்கும்போது வருடம் பிறப்பதால், பயணங்களால் அலைச்சலும் செலவும் ஏற்படும். அடிக்கடி தூக்கம் குறையும். ஜூலை 26 வரை 1-ல் கேது, 7-ல் ராகு இருப்பதால், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஜூலை 27 முதல் கேது 12-லும் ராகு 6-லும் அமர்வதால், உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் தேவைகளைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களைப் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

இந்த வருடம் திட்டமிட்டு வெற்றி பெறுவதாக அமையும்.


சுதந்திர மனப்பான்மை உள்ளவர்களே!

ங்கள் ராசிக்கு 10-ல் சூரியன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், நிர்வாகத்திறனும் ஆளுமைத்திறனும் அதிகரிக்கும். அரசு காரியங்கள் நல்லபடி முடியும். புதிய பதவிகள் தேடி வரும். ஜூலை 26 வரை கேது 12-ல் இருப்பதால், உங்களுடைய பலம் பலவீனத்தை புரிந்துகொள்வீர்கள். ராகு 6-ல் இருப்பதால், எதிலும் வெற்றி கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ஜூலை 27 முதல் கேது லாப வீட்டில் அமர்வதால், செல்வாக்கு கூடும். ஆனால், ராகு 5-ல் நிற்பதால், மனக்குழப்பம் உண்டாகும். 1.9.17 வரை குரு 7-ல் இருப்பதால், உங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆனால், 2.9.17 முதல் குரு 8-ல் மறைவதால், அலைக்கழிப்புகளும் செலவுகளும் அதிகரிக்கும். 14.12.17 வரை சனி 9-ல் இருப்பதால், குடும்பத்தில் நல்லது நடக்கும். செலவுகளும் அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அவ்வப்போது உங்களை ஏமாற்ற முயற்சி செய்வார்கள். எச்சரிக்கையாக இருக்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளுங்கள். சிலருக்கு பணி காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

இந்த வருடம் கடின உழைப் புடன் வெற்றி அமையும்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: