• திசெம்பர் 2016
    தி செ பு விய வெ ஞா
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,697 hits
  • சகோதர இணையங்கள்

காலையில் வெறும் வயிற்றில் உண்ணத் தக்கவை, தகாதவை

Related image

உடல் ஆரோக்கியத்தில் காலை உணவு மிக முக்கியப் பங்கு
வகிக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான அனைத்து சத்துகளும்
காலை உணவின் மூலமே கிடைக்கின்றன. அதற்காகக்
கிடைத்ததை எல்லாம் காலை நேரத்தில் வயிற்றுக்குள்
போட்டுத் திணிக்கக்கூடாது.

கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்குப் பிறகு காலையில்
சாப்பிடுவதால் உணவுகளைத் தேர்வு செய்வதில் அதிக
கவனம்கொள்ள வேண்டும். அமிலச் சுரப்பை அதிகம்
தூண்டும் உணவுகளைக் காலையில் அறவே தவிர்க்கவேண்டும்.

காலை நேரத்தில், வெறும் வயிற் றில் உண்ண வேண்டிய
உண்ணக் கூடாத உணவுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

உண்ணத் தகுந்தவை

முட்டை:
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட உகந்த உணவுகளில்
முட்டை சிறந்தது. இதில் புரதங்களும் வளர்சிதை மாற்றத்தைத்
(மெட்டபாலிசம்) தூண்டி, ஆற்றலைத் தரும் இதர ஊட்டச்
சத்துக்களும் ஏராளமாக உள்ளன.

ஓட்ஸ்:
காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடலாம். இது ஹைட் ரோஃப்ளூரிக்
அமிலத்தால் வயிற் றில் எரிச்சல் அல்லது பாதிப்பு ஏற்படுவதைத்
தடுக்கும். அந்த அமிலத்தில் கரையக்கூடிய நார்ச் சத்துகள்
இருப்பதால் கொழுப்பு குறையும்; வளர்சிதை மாற்றம்
ஊக்குவிக்கப்படும்.

தர்பூசணி:
தர்பூசணியில் நீர்ச் சத்து அதிக அளவில் உள்ளது.
அத்துடன், இதயம், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
லைகோஃபைன் உள்ளது. புளூபெரி: ஊட்டச்சத்துகள் அதிகம்
நிரம்பிய பழம் இது. இதனைக் காலையில் வெறும் வயிற்றில்
சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீரடையும்; வளர்சிதை மாற்றமும்
நினைவுத்திறனும் மேம்படும்.

தேன்:
காலையில் தேனைச் சாப்பிடுவதால் உடலில் ஆற்றல்
அதிகரிக்கும், மனநிலை மேம் படும். இதனால் அன்றைய நாளில்
ஒரு செயலில் நன்கு கவனம் செலுத்த முடியும்.

கொட்டைகள்: காலை உண வில் பாதாம், நிலக்கடலை போன்ற
கொட்டைகளைச் சேர்த்துக் கொள் வதன் மூலம் வயிற்றில்
pH அளவு சமநிலையாக்கப்படும்; செரிமானம் சீராக இருக்கும்.

உண்ணக் கூடாதவை

கார உணவுகள்:
காரமான உணவுகள் ருசியாக இருக்கலாம். ஆனால் இதனை
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான
மண்டலம் பாதிக்கப் பட்டு, நெஞ்செரிச்சல் ஏற்படும்;
இரைப்பையின் உட்பகுதி கடுமை யாகப் பாதிக்கப்படும்.
வாழைப்பழம்: காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை
எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் மெக்னீசியத்தின் அளவு கூடி,
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.

சிட்ரஸ் பழங்கள்:

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங் களில் வைட்டமின்
‘சி’ அதிகம் உள்ளதால் இவை காலையில் வெறும் வயிற்றில்
சாப்பிட ஏற்ற தல்ல. ஏனெனில், இவை அமிலச் சுரப்பை
அதிகப்படுத்தி நெஞ்சு எரிச்சலையும் குடல்புண்ணையும்
உண்டாக்கிவிடும்.

பச்சை காய்கறிகள்:

காலையில் பச்சை காய்கறிகளால் ‘சாலட்’ தயாரித்துச்
சாப்பிடுவது நல்லதல்ல. இதில் அமினோ அமிலங்கள் அதிக
அளவில் உள்ளன. இந்த அமிலங்கள் நெஞ்செரிச்சலை
உண்டாக்கும்; சில நேரங் களில் அடிவயிற்றில் வலியை
ஏற்படுத்தும்.

தக்காளி:
தக்காளியில் டேனிக் அமிலம் உள்ளது. இது நெஞ்சு எரிச்சல்,
குடல்புண் போன்றவற்றை உண்டாக்கும்.

பேரிக்காய்:

இதில் நார்ச்சத்து அதிகம் இருந்தாலும் வெறும் வயிற்றில்
சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் சளிச்சவ்வுகளில் பாதிப்பை
ஏற்படுத்தும்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: