• திசெம்பர் 2016
  தி செ பு விய வெ ஞா
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  262728293031  
 • பதிவுப் புள்ளிவிவரங்கள்

  • 1,274,645 hits
 • சகோதர இணையங்கள்

செல்வம் கொழிக்க வீட்டில் இருந்து இவற்றை தூக்கி வீசுங்கள்…

moneyமனிதன் உயிர் வாழ்வதற்கு எப்படி உணவு, உடை, இருப்பிடம் அவசியமோ, இன்றைய காலத்தில் அத்துடன் பணமும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. பணம் இல்லாவிட்டால் வாழ்வதே கடினம் என்ற நிலையில் நாம் உள்ளோம். எனவே ஒவ்வொருவரும் பணம் சம்பாதிப்பதற்கு சற்றும் ஓய்வெடுக்காமல் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறோம்.வீட்டில் செல்வம் பெருகுவதற்கான சில வாஸ்து டிப்ஸ்…நம் நாட்டில் வாஸ்து மீது அலாதியான நம்பிக்கை உள்ளது. அந்த வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டின் வறுமை நீங்கி, செல்வம் கொழிக்க வேண்டுமானால் வீட்டினுள் ஒருசில பொருட்களை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் அவை வீட்டில் செல்வத்தை தங்கவிடாமல் தடுக்குமாம்.வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்!இங்கு ஒருவரின் வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமானால் எவற்றையெல்லாம் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது

புறா கூடு

வீட்டில் புறா கூடு இருந்தால், அது வீட்டின் வறுமையை அதிகரித்து, உறுதியற்ற நிலையை ஏற்படுத்தும். எனவே உங்கள் வீட்டில் பணம் சேர வேண்டுமானால், உங்கள் வீட்டினுள் இருக்கும் புறா கூட்டினை வெளியேற்றுங்கள்.

தேன் கூடு

வீட்டினுள் தேன் கூடு இருப்பது ஆபத்தானது மட்டுமின்றி, வீட்டில் வறுமை மற்றும் துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும். உங்கள் வீட்டில் தேன் இருப்பின், உடனே அதனை வெளியேற்றுங்கள்.

சிலந்தி வலை

வீட்டில் சிலந்தி வலை இருப்பது என்பது வாழ்வில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறியாகும். எனவே வீட்டில் சிலந்து வலையைக் கண்டால், உடனே அதை சுத்தம் செய்துவிடுங்கள்.

உடைந்த கண்ணாடி

வாஸ்து சாஸ்திரப் படி, உடைந்த கண்ணாடிகளை வீட்டில் வைத்திருப்பது என்பது வீட்டில் வறுமையை அதிகரித்து எதிர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதாக கருதப்படுகிறது. ஆகவே உங்கள் வீட்டில் ஏதேனும் உடைந்த கண்ணாடி இருப்பின், அதை பத்திரப்படுத்தாமல் உடனே தூக்கி எறிந்துவிடுங்கள்.

வவ்வால்

வவ்வால் உடல்நல பிரச்சனை, மோசமான சம்பவங்கள், வறுமை அல்லது இறப்பைக் குறிப்பதாக கருதப்படும் ஒன்று. இத்தகைய வவ்வால் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டினுள் நுழைவது கெட்ட சகுணம்.

எனவே மாலை நேரத்திற்கு பின் வீட்டின் ஜன்னல் கதவுகளை அடைத்துவிடுங்கள்.

ஒழுகும் குழாய்

வீட்டினுள் இருக்கும் குழாயில் இருந்து எப்போதும் நீர் வடிந்து கொண்டிருந்தால், அதனால் நீர் மட்டும் வீணாவதில்லை, வீட்டின் சேர்த்து வைத்திருந்த பொருட்களும் வீணாகி, சில நேர்மறையாக எண்ணங்களும் வீணாகின்றன என்று அர்த்தம்.

காய்ந்த மலர்கள்

பூஜை அறையில் சாமிக்கு பூக்களைக் கொண்டு அலங்கரிப்பது வழக்கம். அப்படி அலங்கரிக்கும் பூக்கள் காய்ந்து பல நாட்களாக பூஜை அறையில் இருப்பது, வீட்டின் செல்வ வளத்திற்கு இடையூறை ஏற்படுத்தும்.

எனவே தினமும் தவறாமல் பூஜை அறையை சுத்தம் செய்யுங்கள்.

ஒரு பதில்

 1. Nalla Tips Thaan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: