
வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவுங் கொண்ட நீண்டகாலச் சமூக சேவையாளர் திரு நல்லதம்பி கணேசபிள்ளை அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 88வது வயதில் தலைகாட்டியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அன்னார் தனது பகுதி நேரத்தில் நல்லெண்ணெய் உற்பத்தி செய்து வியாபாரம் செய்துவந்தமையால் எண்ணெய்க்காரக் கணேசபிள்ளை என்று அறியப்பட்டவர். தனது இறுதிக்காலத்தில் கோயிலுண்டு தானுண்டு என்று சைவமாந் தவத்தைச் செய்துகொண்டு வாழ்ந்து வந்த பிள்ளை … வாழ்வு முழுவதும் எல்லோருக்கும் பிள்ளைமை உடையவராக வாழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. இவரது மூத்த மகள் திருமதி திருச்செல்வி சிறீ அவர்கள் எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியை (1986-1987) என்பது குறிப்பிடத்தக்கது.
Filed under: Allgemeines | Leave a comment »