சென்று “உன் அம்மா”வுடன்
சேர்ந்து கொஞ்ச நாட்கள்
நிம்மதியாக இரு “அம்மா”….
——————————————————————-
நினைவுரைகள் –
——————————
குறைகள் இல்லாத மனிதர் யார்…?
நிறைகள் போதுமே என்றும் நினைவில் வைக்க –
——————
எத்தனையோ ஆண் சிங்கங்கள் நடமாடும்
அரசியல் காட்டுக்குள் –
ஒற்றை சிங்கமாக உள்ளே நுழைந்து
தன்னந்தனியே போராடி வென்று,
பல ஆண்டுகள் ராஜ தர்பார் நடத்தியவர் –
வென்றாலும், வீழ்ந்தாலும்,
மீண்டும் எழுந்து வீரநடை போட்டு
எல்லாரையும் அதிரவைத்த அந்த
அசாத்தியம் தைரியத்தை –
இன்றைய ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்
கொள்ள வேண்டும்
சம காலத்தில் வாழ்ந்த
இதைவிட சிறந்த சாதனைப் பெண்மணி
வேறு யாருமில்லை
நெருப்பின் ஊடே நிகழ்ந்த
நெடும் வெற்றிப்பயணம்
அந்த நெருப்பு பயணத்தை நினைவில்
வைத்துக் கொண்டால் போதும்
ஒவ்வொரு பெண்ணும்
ஓராயிரம் கஷ்டங்கள் வந்தாலும்
தாங்கும் பலம் தன்னாலே பெற்று விடுவார்கள்.
சொன்னால் சொன்னது தான் –
சொன்ன வார்த்தையில் மாற்றமில்லை
முன்வைத்த காலை
பின் வைத்ததுமில்லை
எவர் வீட்டு வாசலிலும்
இறைஞ்சி நீ நின்றதில்லை
எவருக்காகவும், எதற்காகவும்
எங்கேயும் –
காத்திருந்ததுமில்லை
யாருக்கு உண்டு உன் குணங்கள்…?
– நீ இருக்கும்போது தெரியாத அருமையை
இனி இல்லாத போது உணரும் தமிழகம் …
உன்னைச் சுற்றிலும் இனி
கயவர்கள் இல்லை
வேடதாரிகள் இல்லை
கபட நாடகங்கள் இல்லை
வழக்குகள் இல்லை –
தேர்தல்கள் இல்லை –
வெற்றி, தோல்விகள் இல்லை –
உன் அன்னையின் அன்பு மட்டுமே
உன்னுடன் இருக்க நிம்மதியாக உறங்கு அம்மா….!
அன்புடன்,
-காவிரிமைந்தன் –
——————————————————————-
இருக்கும்போது தெரியாத அருமையை
இனி அனைவரும் அவர் இல்லாத போது —
உணர வேண்டும் அல்லவா … ?
” அந்த ” அம்மா மட்டும் ” இப்போது இருந்து இருந்தால் ?
-என்று நீங்கள் அனைவரும் நினைப்பீர்கள் —
அதுவே — அந்த கேள்வியே அவரின் வாழ்க்கை —
வெற்றி எல்லாமும் …
ஏழு கோடி பேர்கள் இருந்தாலும் —
அம்மா இல்லாததால் —
அனாதையாக உணர்கிறது — தமிழகம் ….
அம்மா நீங்கள் ஒரு என்றும் மறையா — மறக்கா ..
சரித்திரம் தான் …
இறைவன் அழைத்துக் கொண்டதால் —
அங்கே வீண் பழி சுமத்தும் கயவர்கள் இல்லை —
வழக்கு போடும் பொறாமை பிடித்தவர்கள் இல்லை —
வேடதாரிகள் இல்லை … உங்களை அரசியலுக்கு
அழைத்து வந்த அந்த உன்னத மனிதரின் —
அருகிலேயே — வங்கக்கடலோரம் — நிம்மதியாய் —
நீங்கள் உறங்க சென்றாலும் — உங்களின்
ஆன்மா மட்டும் — இந்தநாட்டை —
இந்த தமிழக மக்களை –சுற்றியே — வந்துக் கொண்டுதான்
இருக்கும் என்பது தான் உண்மை — போய் வா …
எங்களின் தாயே … அம்மா … ! அம்மா … அம்மா …. !!!
-செல்வராஜன்
———————————————————–
கண்ணீர் மல்க உங்களுக்கு விடை கொடுக்கிறோம்…
சென்று வாருங்கள்
ஜெ.வின் சிறப்பென்ன? யார்க்கும் அடிபணிந்ததில்லை.
(தமிழக உரிமைகள் எதற்கும் சட்டத்தின்வாயிலாகத்
தீர்ப்பைப் பெற்றுத்தந்துள்ளார் அல்லது சட்டப்போராட்டம்
நடத்தியுள்ளார். தன்னுடைய சொத்துக்கும்
தொழிலுக்கும் பங்கம் வரக்கூடாது என்று தமிழகத்தின்,
தமிழர்களின் நலனை விட்டுக்கொடுத்ததில்லை)
சட்டத்தின் மாட்சிமைப்படியே ஆட்சி செய்துள்ளார்
(நீதிபதிகள் விஷயத்தில் தலையிட்டதில்லை.
இதை நீதிபதிகளும், உச்ச’நீதிமன்ற நீதிபதிகளும்
வெளிப்படையாகச் சொல்லியுள்ளனர்)
கட்டைப் பஞ்சாயத்துகள் நடைபெற்றதில்லை.
(எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கும் அதிமுக அமைச்சர்கள்
குற்றவாளிகள் சார்பாகச் செல்லமுடியாது)
அடுத்தவரின் தொழில்களில் மூக்கை நுழைத்து
அரசியல் செய்ததில்லை (திரைப்படத் துறையினரைக்
கேட்டால் தெரியும்).
அதிமுக என்ற மக்களின் இயக்கத்திற்குத் தலைமை ஏற்று,
தன்னுடைய திறமையினால் தமிழர்கள் நலம் பெறவும்,
மானிலத்தின் நலத்திற்காகவும் உழைத்துள்ளார்.
இதில் சொந்த நலன் என்பது எப்போதும் இருந்ததில்லை.
மோடி அவர்களிடம் மதிப்பும் நட்பும் (குஜராத் முதல்வராக
இருந்த போதிலிருந்து) கொண்டிருந்தபோதும்,
அது அரசியல் வாழ்க்கையில் குறுக்கிடாமல்
பேலன்ஸுடன் ஆட்சிபுரிந்தவர் அவர். தனது தனித்
திறமையால், எம்ஜியார் ஆரம்பித்த இயக்கத்தைக்
கட்டிக் காத்தது மட்டுமல்ல, அதனை மேலும் வளர்த்து,
தன் சொந்தத் திறமையினால்
(மற்ற கட்சிகளிடம் கூட்டணி வைத்து அல்ல)
இந்த நிலைமையில் விட்டுச் செல்கிறார். அவருடைய
தைரியமும், சாதாரண மக்களிடம் இருந்த கனிவும்
எப்போதும் நம் மனதில் மறையாது.
எம்ஜியார் அவர்களின் இயக்கத்திற்கு சரியான
நபரைத்தான் அவர் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்
என்ற நம்பிக்கை அதிமுகவிடம் மட்டுமல்ல,
பொதுமக்களிடம் விதைத்திருந்ததே ஜெ.வின் சாதனை.
மத மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு அவர் எல்லோரையும்
கவர்ந்தவர்.
என்னைப் பொறுத்தவரையில் அவரின் மிகப்
பெரிய ஆளுமை, சொந்த நலனுக்காக மானில
நலனையோ, மக்களின் நலனையோ அடகு வைக்காதது.
தன்னுடைய நலனுக்காக, மத்திய அரசிடம் கையேந்தாது.
நட்பு வேறு, தமிழக நலன்/தன்னுடைய பொறுப்பு வேறு
என்று கடைசி வரை வாழ்ந்தது. வரலாறு இந்தக்
காரணங்களுக்காக அவரை நினைவுகூறும்.
சென்று வாருங்கள்… ‘மக்களால் நான்.. மக்களுக்காக நான்’
என்று நீங்கள் முழங்கியதை, அதுவும் தன்னந்தனியாக
முழங்கியதை, மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுதான்,
உங்களுக்கு 37 பாராளுமன்ற உறுப்பினர்களையும்,
மீண்டும் ஆட்சிப் பொறுப்பையும் அளித்தார்கள்.
எம்ஜியார்கூடப் பெறாத அளவு பாராளுமன்ற
உறுப்பினர்ளைக் கொடுத்ததற்கும், எம்ஜியாருக்குக்
கொடுத்த அதே கௌரவமான, தொடர்ந்து தமிழக ஆட்சிப்
பொறுப்பை அளித்ததற்கும், தமிழக மக்கள் உங்கள்
முழக்கத்தை ஏற்றுக்கொண்டதுதான் முழுமுதல் காரணம்
என்ற மன’நிறைவோடு சென்று வாருங்கள்.
கண்ணீர் மல்க உங்களுக்கு விடை கொடுக்கிறோம்.
உங்கள் இயக்கம் தகுந்த தலைமையில், மக்கள் நலன்
கருதிச் செயல்படவேண்டுமே என்ற கவலை இருந்தாலும்….
காலம் தகுந்த பதில் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு…
உங்களுக்குப் பிரியா விடை கொடுக்கிறோம்.
– தமிழன்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்