Filed under: Allgemeines | Leave a comment »
2017 – ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
நிகழும் துன்முகி வருடம் மார்கழி மாதம் 17-ம் தேதி வளர்பிறை திரிதியை திதி, திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கன்னி லக்னம் சித்தயோகம் கூடிய நாளில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எண்
ஜோதிடப்படி இந்தப் புத்தாண்டு 2017 சூரியனின் ஆதிக்க எண்ணாகிய 1-ல் வருவதால், மக்களிடையே ஆன்மிகத்திலும் அரசியலிலும் விழிப்பு உணர்வு உண்டாகும். தங்கத்தின் விலை குறையும். தங்கத்தின் பயன்பாடு மற்றும் சேமிப்பு குறையும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நீர்நிலைகள், வரலாற்றுச் சின்னங்களை மீட்டுப் பாதுகாக்கவும் புதிய சட்டங்கள் வரும்.
கற்பூரப் புத்தி உள்ளவர்களே!
உங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் லாப வீட்டில் நிற்கும் போது, இந்த ஆண்டு பிறப் பதால் ஆளுமைத் திறன் கூடும். புதிய பதவி, பூர்விகச் சொத்து கிடைக்கும். ஜூலை 26-ம் தேதி வரை கேது லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் பணவரவு, புதிய வேலை கிடைக்கும். ஜூலை 27-ம் தேதி முதல் ராகு, கேது இடம் மாறுவதால், தாயாரின் உடல்நலம் பாதிப்பும் பணிச்சுமையும் ஏற்படும். 2.9.17 முதல் குரு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், இழந்த பணம் திரும்பக் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதி இணைவர். அடகு நகை, சொத்துகளை மீட்க வழி பிறக்கும். 14.12.17 வரை சனி அஷ்டமத்தில் இருப்பதால், பிறரை நம்பி பெரிய முடிவு எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் பங்கு தாரர்களால் பிரச்னை ஏற்படும். செப்டம்பர் முதல் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நியாயமாகக் கிடைக்கவேண்டிய சலுகைகளைக்கூட போராடித்தான் பெற வேண்டி இருக்கும்.
இந்தப் புத்தாண்டு கனவுகளை நனவாக்குவதாக அமையும்.முயற்சியால் முன்னேற முடிவதாக அமையும்.
Filed under: Allgemeines | Leave a comment »
மறதி நோய்..?
என்னமோ சொல்லணும்னு நினைச்சேன்.. மறந்துட்டேன்…’’
‘‘ஸாரி.. இன்னிக்கு உன்னோட பர்த்டே இல்ல… மறந்தே போயிட்டேன்…’’
‘‘ஆமா… இங்கே எதுக்கு வந்தோம்?’’
Filed under: Allgemeines | Leave a comment »
காலையில் வெறும் வயிற்றில் உண்ணத் தக்கவை, தகாதவை
உடல் ஆரோக்கியத்தில் காலை உணவு மிக முக்கியப் பங்கு
வகிக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான அனைத்து சத்துகளும்
காலை உணவின் மூலமே கிடைக்கின்றன. அதற்காகக்
கிடைத்ததை எல்லாம் காலை நேரத்தில் வயிற்றுக்குள்
போட்டுத் திணிக்கக்கூடாது.
Filed under: Allgemeines | Leave a comment »
செல்வம் கொழிக்க வீட்டில் இருந்து இவற்றை தூக்கி வீசுங்கள்…
மனிதன் உயிர் வாழ்வதற்கு எப்படி உணவு, உடை, இருப்பிடம் அவசியமோ, இன்றைய காலத்தில் அத்துடன் பணமும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. பணம் இல்லாவிட்டால் வாழ்வதே கடினம் என்ற நிலையில் நாம் உள்ளோம். எனவே ஒவ்வொருவரும் பணம் சம்பாதிப்பதற்கு சற்றும் ஓய்வெடுக்காமல் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறோம்.வீட்டில் செல்வம் பெருகுவதற்கான சில வாஸ்து டிப்ஸ்…நம் நாட்டில் வாஸ்து மீது அலாதியான நம்பிக்கை உள்ளது. அந்த வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டின் வறுமை நீங்கி, செல்வம் கொழிக்க வேண்டுமானால் வீட்டினுள் ஒருசில பொருட்களை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் அவை வீட்டில் செல்வத்தை தங்கவிடாமல் தடுக்குமாம்.வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்!இங்கு ஒருவரின் வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமானால் எவற்றையெல்லாம் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது
Filed under: Allgemeines | 1 Comment »
சமூக சேவையாளர் திரு நல்லதம்பி கணேசபிள்ளை அவர்கள் காலமானார்

வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவுங் கொண்ட நீண்டகாலச் சமூக சேவையாளர் திரு நல்லதம்பி கணேசபிள்ளை அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 88வது வயதில் தலைகாட்டியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அன்னார் தனது பகுதி நேரத்தில் நல்லெண்ணெய் உற்பத்தி செய்து வியாபாரம் செய்துவந்தமையால் எண்ணெய்க்காரக் கணேசபிள்ளை என்று அறியப்பட்டவர். தனது இறுதிக்காலத்தில் கோயிலுண்டு தானுண்டு என்று சைவமாந் தவத்தைச் செய்துகொண்டு வாழ்ந்து வந்த பிள்ளை … வாழ்வு முழுவதும் எல்லோருக்கும் பிள்ளைமை உடையவராக வாழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. இவரது மூத்த மகள் திருமதி திருச்செல்வி சிறீ அவர்கள் எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியை (1986-1987) என்பது குறிப்பிடத்தக்கது.
Filed under: Allgemeines | Leave a comment »
உணவு, ஓய்வு, இயக்கம் இந்த மூன்றுமே சரியான வாழ்க்கைமுறை.
உணவுதான் உற்சாகம்; உற்சாகம்தான் உணவு. நல்ல உணவுகள் உற்சாகத்தைத் தரும். உற்சாகமாக இருந்தால், உடலின் இயக்கம் சீராகும். மனம் அமைதி பெறும். இதைப் புரிந்துகொண்டாலே வாழ்வின் ஃபார்முலா நமக்கு எளிதாகிவிடும். உணவு, ஓய்வு, இயக்கம் இந்த மூன்றுக்குமே அடித்தளமாக இருப்பது சரியான வாழ்க்கைமுறை. இதைப் புரிந்துசெய்யக் கற்றுக்கொண்டாலே வாழ்க்கை இனிதாகும். ஆரோக்கியம் கைகூடும்.
Filed under: Allgemeines | Leave a comment »
சளி, இருமலைப் போக்கும் உணவுகள்!
எல்லோருமே சளி, இருமலால் அடிக்கடி அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். சளி, இருமல் அந்த அளவுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. இவற்றுக்குத் தீர்வு, நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலேயே இருக்கிறது. சரி… சளி, இருமல் இதற்கு மூல காரணம் என்ன, அவற்றைப் போக்க என்ன செய்வது என்று பார்ப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
குழந்தையின்மை குறை போக்கும் முருங்கை!
முருங்கைக்கீரையில் வைட்டமின் உயிர்ச் சத்துகள் அதிக அளவில் உள்ளன. அன்றாட உணவில் முருங்கைக்கீரை, முருங்கைப்பூ அல்லது முருங்கை ஈர்க்கு போன்றவற்றை வெவ்வேறு விதங்களில்
Filed under: Allgemeines | Leave a comment »
உறவினர்களைத் தெரியுமா உங்கள் குழந்தைகளுக்கு?
அத்தை… அவன் என் முடியைப் பிடிச்சு இழுக்கறான்…’
‘அவதான் முதல்ல என் சட்டையைப் பிடிச்சு இழுத்தா…’
‘ரெண்டு பேரும் கொஞ்சம் நேரம் சும்மா இருக்க மாட்டீங்களா? உங்க பாட்டி நெய் சீடை செஞ்சுட்டு இருக்காங்க… ரெண்டு பேரும் சமையக்கட்டுக்குப் போங்க!’
Filed under: Allgemeines | Leave a comment »